(Reading time: 8 - 16 minutes)

01. பைராகி - சகி

bhairagi

ற்பனை...

கற்பனை மனித புத்திக்கு மட்டுமே உகந்த ஒன்றாகும்!!!

ஆராய்ச்சியின் மூலம் குறிப்பிட்ட அளவே செல்லும் ஆற்றலை கற்பனை மூலம் பிரபஞ்சத்தை கடக்க வைக்கலாம்...

கற்பனை எங்கும் வியாபித்துள்ளது.

கண்கள் காணும் இயற்கையும் இறைவனின் கற்பனையே!!!கற்பனைகள் பலருக்கும் உரியது,ஆனால் அதற்கு உயிர் கொடுக்கும் உபாயத்தை ஒரு சிலரே அறிந்து பயன் படுத்துகின்றனர்...

இதுவும் கற்பனையில் உதித்த கதை எனினும்,நடக்கும் சுவாரசியங்களை காணலாம்!!!

பைராகி நதி மிகவும் ஆர்பாட்டத்தோடு அலைந்துக் கொண்டிருந்தது.

மிகவும் ஆர்பாட்டம்!!!ஒருவித ஆக்ரோஷம்!!!அதன் வேகத்துடன் போட்டியிட்டு பயணப்பட்டு கொண்டிருந்தது அது!!!அது ஒரு புத்தகம்!!!ஆம்!தோலினால் ஆன புத்தகம்!!!நதியின் வேகத்தோடு அலைந்த அது கரை ஒதுங்க...

அதை கையில் எடுத்தார் ஒருவர்!!!

அவர் தோற்றம் மிகவும் மோசமாக இருந்தது!!கரும் தேகம்,சடையிட்ட தலை,அழுக்கான தோற்றம்!!!ஆனால்,தீக்ஷண பார்வை...

அந்தப் புத்தகத்தை கண்கள் சுருக்கி படித்தவின் உதடுகள் தன்னால் உச்சரித்தன,"இளவரசர் ஆதித்ய வர்மர்!"என்று!!!!

சென்னை....

2016....

நன்றாக போர்வையை போர்த்தியப்படி உறங்கிக்கொண்டிருந்தான் அவன்.

வீட்டில் உரக்க ஒலிக்கும் 'சுப்ரபாதம்' அவன் செவிகளை தொடவில்லை.

காதில் தலையணையை அழுத்தியப்படி உறங்கிக் கொண்டிருந்தான்.

திடீரென மேலே குளிர்ந்த நீர் வந்து விழ திடுக்கிட்டு கண் விழித்தான்.

"ஐயோ!அம்மா!"-என்று எழுந்தவனின் கண்களில் குறும்பான புன்னகையோடு தென்பட்டாள் அவள்.

"பிசாசே!!!எதுக்கு இப்படி பண்ண?அறிவில்லை உனக்கு?"-அவள் அவனை முறைத்தப்படி மெத்தையில் அமர்ந்தாள்.

"எனக்கு அறிவில்லையா??மணி ஒன்பதாகுது!இன்னும் என்ன தூக்கம் வேண்டிருக்கு?அம்மா...எவ்வளவு நேரமா எழுப்புறாங்க?"-அவன் கதவருகே நின்று கொண்டிருந்த தன் தாய் ஜானகியை பார்த்தான்.அவர் புன்னகைத்தப்படி நகர்ந்துக்கொண்டார்.

"அவங்க தப்பு!வீட்டுக்கு ஒரே பையன்னு செல்லம் கொடுத்து வளர்த்துட்டாங்க!வாழ்க்கையில எப்போதாவது சூரிய உதியத்தை பார்த்திருக்கிறீயா?"

"போதும்..ராட்ஸஸி!அட்வைஸ் பண்ணாதே!என்ன இருந்தாலும் இப்படியா எழுப்புவ?"

"வேற எப்படி எழுப்புவது சாரை?"

"எப்படி எழுப்பணும்னா...சூடா ஒரு பெட் காபியோட வந்து என் பக்கத்துல உட்கார்ந்து மெதுவா என் கன்னத்துல கிஸ் பண்ணி!என்னங்க டைம் ஆயிடுத்து எழுந்துக்கோங்கன்னு எழுப்பணும்!அதை விட்டுட்டு இப்படி பேய் மாதிரி எழுப்புற?"

"சார்...நமக்கு இன்னும் கல்யாணம் ஆகலை!ஞாபகமிருக்கா!"

"ஆகலைன்னா!இப்படி தான் எழுப்புவியா?"

"ஆமா!!"

"உன்னை..."

"என்ன?"

"எதுவும் பண்ண முடியலை!அம்மா வேற இருக்காங்க!!சரி..சொல்லு என்ன விஷயம்?"

"என்ன விஷயமா?நீ எல்லாம் என்ன பையன்?இன்னிக்கு என்ன நாள்?"

"இன்னிக்கு புதன்கிழமை!"

"மன்னாங்கட்டி!இன்னிக்கு அம்மாவோட பிறந்தநாள்!"-அவன் நாள்காட்டியை திரும்பி பார்த்தான்.

ஏப்ரல் 14!!!சித்திரை முதல் நாள் வேறு!!!

"ஐயயோ!நீ எல்லாம் என்ன மருமகள்?உன் அத்தை பிறந்தநாளை ஞாபகப்படுத்த மாட்ட?"-என்று பரபரப்பாக எழுந்து குளியலறைக்குள் ஓடினான்.

அவன் திரும்பி ஓடி வருவதற்குள் அவன் குறித்த விவரத்தை கூறிவிடுகிறேன்!!

அவன் பெயர் ஆதித்யா.பிரபல தொழிலதிபர்!!!எந்த ஒரு ஆர்பாட்டமும் இன்றி அட்டகாசம் செய்யும் சாதாரண புதல்வன் அவன் தாய்க்கு!!!தவமாய் தவமிருந்து நீண்ட காலம் கழித்து பிறந்த ஒரே காரணத்தால் இதுவரை தாயிடத்தில் எந்த வசையும் வாங்கியதில்லை!!வசைப்பாட துணிவுக்கொண்ட தந்தையும் அவனது சிறு வயதிலே நிரந்தரமாய் அவனை பிரிந்துப் போனார்.

எப்போதும் தொழில் தொடர்பாக ஓடியப்படி இருந்தவனின் வாழ்வை சீராக்க வந்தவளே யாத்ரா!!!

அழகிய ஓவியம் போன்றவள்!!

தாய்,தந்தை இல்லாததால் சிறு வயது முதலே ஹாஸ்டலில் தங்கி வளர்ந்தவளை முதல்முதலில் அவள் அவனது அந்தரங்க காரியதரசிக்கான நேர்முக தேர்வின் போதே கண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.