(Reading time: 8 - 16 minutes)

"ம்மா முகத்துல எப்போதும் இந்த சந்தோஷம் இருக்கவே ஆசை யாத்ரா!அப்பா இறந்தப்பிறகு,அவங்க சந்தோஷமே போனது!இருந்தாலும்,என்னையும் நல்லப்படியா வளர்த்து அப்பா பிசினஸையும் கவனித்து ரொம்ப தியாகம் பண்ணிருக்காங்க!"-அவன் பெருமூச்சவிட்டான்.

யாத்ரா அவனை நினைவிற்கு அழைத்துவர அவன் தோளை பற்றினாள்.

"நான் உனக்கும் தேங்க்ஸ் சொல்லணும் யாத்ரா!நீ வந்த பிறகு தான் அவங்க கொஞ்சம் ரிலாக்ஸா இருக்காங்க!உன்னிடம் எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கிறாங்க!தேங்க்ஸ்..."

"ஆதி! தேங்க்ஸ் வெளி ஆட்களுக்கு தான் சொல்லணும்!எனக்கு அம்மா இல்லாத குறையை தீர்த்தவங்க அவங்க!அவங்களுக்கு ஒண்ணுனா எனக்கும் வலிக்கும்!!"-அவனால் பதில் பேச இயலவில்லை.

"ஐ லவ் யூ யாத்ரா!"-என்று அவளை அணைத்துக்கொண்டான் அவன்.

"சரி...எனக்கு என்ன கிப்ட் தர போற?"

"என் பெட்டர் ஹாப்க்கு என்ன கிப்ட் வேணும்?"

"ஆதி...கல்யாணத்து அப்பறம் இங்கிருந்து ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாமா??"-அவன் அவளது தலையில் செல்லமாக தட்டினான்.

"அதுமட்டுமில்லாம...இங்கிருக்கிற எல்லா குழந்தைகளோட படிப்பு செலவையும் நாமே பார்த்துக்கலாம் போதுமா?"

"லவ் யூ ஆதி!"-என்று அவன் தோள் மீது சாய்ந்துக்கொண்டாள்.

"யார் யாருக்கோ!குழந்தை பிறக்கலைன்னு கஷ்டப்படுறாங்க!ஆனா,இந்த உலகத்துக்கு வாரிசை கொடுக்க முடிந்தவங்க செய்த காரியத்தை பார்த்தியா!!'-அவன் உண்மையில் மனவேதனையோடு கூறினான்.

யாத்ராவின் கண்கள் தன்னிச்சையாக கண்ணீரை சுரந்தன.

அவளும் சிறு வயது முதலே காப்பகத்திலே வளர்ந்தாள்.

தினம் அவள் ஏக்கத்திற்கு ஆறுதல் அவள் கண்ணீரும்,தென்றல் காற்றுமே அளித்தன...

எத்தனையோ திங்கள் ஆறுதல் வழங்க ஆளின்றி துடித்துப் போயிருக்கிறாள்.

ஆதித்யா முதன்முதலில் தன் காதலை உரைத்த போதும் அவன் அன்பின் மேல் நம்பிக்கை அவளுக்கு வரவில்லை!!சந்தேகமும் எழவில்லை!!!அதன்பின்,அந்த நம்பிக்கையை வளர்த்தது ஜானகியே!!!

அவனது விருப்பத்தை ஏற்றுக்கொள்ளும்படி அவர் அறிவுறுத்தினார்.அவள் தன் தகுதியை கூறி மறுத்த போதும்,

"அட!பணம் என்னமா பணம்?நாங்க என்ன பரம ஏழையா?இல்லை...என் பையனுக்கு தான் உழைக்க தெம்பில்லையா??அவன் வாழ்க்கையை யாரோ ஒருத்திக் கூட பகிர்ந்துக்கறதுக்கு தன் மனசுக்கு பிடித்தவளோடு பகிர்ந்துக்க விரும்புறான்!அதில்,தவறென்ன இருக்கு?"என்றார்.

யாத்ராவின் காதல் அவள் சக தோழிகளுக்கு தெரிந்து ஹாஸ்டல் முழுதும் ஆதித்யாவையும்,யாத்ராவையும் கேலி பேசி யாத்ராவை அவள் காப்பக உரிமையாளர் எச்சரித்த போது,

"எனக்கு என் பையன் மேலும் சரி,என் மருமக மேலும் சரி முழு நம்பிக்கை இருக்கு!நான் இவளை என் கூட கூட்டிட்டு போறேன் மேடம்!இத்தனை வருஷம் இவளை பத்திரமா பாத்துக்கிட்டதுக்கு நன்றி!!"-என்று அவமானத்தால் தாழ்ந்த அவள் சிரத்தை நிமிர்த்தி தன்னோடு அழைத்துக்கொண்டு வந்தார் ஜானகி.

அவள் கண்கள் நன்றியால் மேலும் கலங்கின...

அக்கண்ணீர் ஆதித்யாவை சுட,அவன் அவள் முகத்தை நிமிர்த்தினான்.

"ஏ...என்னாச்சு?"

"ஒண்ணுமில்லை..."

"நான் இருக்கேன் ஸ்வீட்டி!அழாதே!!"-அவளது கண்ணீரை துடைத்து,அவளை தன்னோடு அணைத்துக்கொண்டான் ஆதித்யா.

தொடரும்

Episode # 02

{kunena_discuss:969}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.