(Reading time: 14 - 28 minutes)

தன்படி தான் யுக்தா பிருத்வி அறைக்கு அவர்களை அழைத்துச் சென்றாள்... ஆனால் கணவன் மனைவி சேர்ந்து இருக்கும் அறைபோல் அது தெரியவில்லை... இருந்தாலும் யுக்தாவிடம் அதைப்பற்றி யாரும் கேட்கவுமில்லை...

முதலில் பேசிய சுஜாதா.... " யுக்தா  நீ செஞ்ச காரியத்துல அம்மா உன்கிட்ட கோபமா நடந்துக்கிட்டேன்... மன்னிச்சிக்கடா.."

"எனக்கு உன்மேலே கோபமெல்லாம் இல்லம்மா... என்னைப்பத்தி கவலைப்படாம நீங்க பத்திரமா போய்ட்டு வாங்கம்மா..."

"ஏதோ தப்பு பண்ணிட்ட.... இனி நீ அப்படியெல்லாம் நடந்துக்காத... மதி உன்னை நல்லாப் பார்த்துப்பான்னு எனக்கு நம்பிக்கை இருக்குடா... எல்லா பிரச்சனையும் சீக்கிரம் சரி ஆகிடும்.. ஆனா அன்னைக்கு மாதிரி கோபமா யார்க்கிட்டயும் பேசாத... நல்லப்படியா நடந்துக்க..."

யுக்தா பதில் சொல்லும் முன் இடையிட்ட சாவித்திரி... " என்ன சுஜாதா நம்ம யுக்தா பத்தி உனக்கு தெரியாதா... ஏதோ அன்னைக்கு அப்படி நடந்துக்கிட்டா... இனி அப்படியெல்லாம் நடந்துக்கமாட்டா... என்ன யுக்தா...??"

"அம்மா நான் நல்லபடியா நடந்துப்பேன்... நீங்க கவலைப்படாதீங்க..."

"யுக்தா... நானும் ஊருக்கு போலாம்னு இருக்கேன்... உனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு... கவியும் பெங்களூர் போய்ட்டா... நான் தனியா தானே இங்க இருக்கனும்... அதான் ஊர்ல போய் இருக்கலாம்னு நினைக்கிறேன்..."

"நீங்களும் ஊருக்கு போகப் போறீங்களா சாவிம்மா..." கவலையோடு கேட்டாள் யுக்தா...

அதை உணர்ந்த சாவித்திரி... "கவலைப்படாத யுக்தா.. கவியோட கோபம் எவ்வளவு நாள் இருக்கப் போகுது... சீக்கிரம் கோபம் போய் இங்க வரப் போறா பாரு... அப்போ நானும் இங்க வந்துடுவேன் என்ன..."

"ம்ம்..." என்று தலையாட்டினாள் யுக்தா.... அவள் செய்யும் ஒரு காரியத்தால் எல்லாம் அவளை தேடி வரத்தானே போகிறார்கள்... அது இப்போது அவளுக்கு தெரியுமா என்ன..??

 சாவித்திரியும் சுஜாதாவும் அவளிடம் விடைப்பெற்றனர்... ஆனால் மாதவனோ எதுவும் பேசவில்லை... ஏன் வந்ததிலிருந்து அவள் முகத்தை பார்க்க கூட இல்லை... யுக்தாவுக்கு அது கஷ்டமாக இருந்தது... அவளே அவரிடம் பேசினாள்..

"அப்பா... நான் செஞ்சது தப்பு தான்ப்பா.. என்மேல உங்களுக்கு கோபம் இருக்கறது புரியுது... அதுக்கு நீங்க அம்மா போல திட்டுங்க... என்னை அடிங்க... வேற என்ன தண்டனை வேணாலும் கொடுங்க... ஆனா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா... எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. "

அவள் வருத்தத்தோடு பேசியது அவருக்கே கஷ்டமாக இருந்தது...  "எனக்கு உன்மேல என்னடா கோபம்... எனக்கு என்மேல தான் கோபம்... உனக்கும் கவிக்கும் நடுவுல இருக்கும் நட்பு பற்றி தெரியும்... ஆனா கவிக்கூட உன்னை விட்டு தூரமா தான் இருந்தா... ஆனா அப்பா உன்கூட தானே இருந்தேன்...

உன்னோட ஃப்ரண்ட்ஷிப்பா இருந்திருந்தா... நீ அப்பாக்கிட்ட எல்லாமே ஷேர் பண்ணியிருப்ப இல்லடா... உன்னோட மனசுக்குள்ள வச்சுக்கிட்டு இப்படியெல்லாம் செஞ்சிருக்க மாட்ட..."

"....."

"இப்பக்கூட நீ இப்படியெல்லாம் செஞ்சிருப்பியான்னு என்னால நம்ப முடியல.... குழப்பத்துல இருந்தேன்... உனக்கு இந்த கல்யாணம் தான் சரின்னு உங்க அம்மா சொன்னா... நானும் ஒத்துக்கிட்டேன்..."

"ஆனா இந்த கல்யாணம் நடந்து முடிஞ்சதும் தான் எனக்கு தோணுச்சு... நீ தப்பே செஞ்சிருந்தாலும்... அதை எப்படி சரிப் பண்ணனும்னு யோசிச்சிருக்கனும்... இந்த கல்யாணத்தை அவசரப்பட்டு நடத்திருக்கக் கூடாது... "

"......."

"எனக்கு என்மேல கோபம்னு சொல்றதை விட குற்ற உணர்வா இருக்குடா... அதான் உன்னை பார்க்க கூட கஷ்டமா இருக்கு... அப்பதான் உன்னோட ப்ரண்டா இல்லை... இப்பயாவது உன்கிட்ட ஒரு ப்ரண்ட் மாதிரி இருந்து உனக்கு என்ன ப்ரச்சனை... ஏன் இப்படி செஞ்ச... இதெல்லாம் நீ செஞ்சியா அப்படி எதுவும் கேக்காமலே இருந்துட்டேன்மா... இந்த குற்ற உணர்வு எனக்கு எப்போ போகும்னு தெரியல... ஒருவேளை நீ நல்லபடியா வாழறத பார்த்தா அது போகுமோ என்னவோ.."

"ஏங்க இப்படி சொல்றீங்க... அவ நல்லா வாழுவாங்க..."

"எதை வச்சு சொல்ற சுஜா... கல்யாணத்தப்போ பிருத்வி செஞ்சத பார்த்த இல்ல... தோ நாம வந்து இவ்வளவு நேரத்துல ஒரு வார்த்தையாவது பிருத்வி நம்ம யுக்தா கிட்ட பேசுனானா... இந்த ரூம்ல ரெண்டுப்பேரும் இருப்பாங்கன்னு உனக்கு தோணுதா... மதியும் செந்திலும் நமக்காக தான் யுக்தா கிட்ட பேசறதா உனக்கு தோணல..??

நம்ம பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு வேணா நமக்கு தெரியாம இருக்கலாம்... ஆனா அவ முகம் கொஞ்சம் வாட்டமா இருந்தா கூட நாம கண்டுப்பிடிச்சிடுவோம்.... பாரு அவ முகத்தை கொஞ்சமாவது சந்தோஷமா இருக்கான்னு... அப்புறம் எப்படி அவ நல்லா வாழ்வான்னு நம்ப சொல்ற..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.