(Reading time: 14 - 28 minutes)

ணவன் கேட்ட கேள்வியில் அமைதியாகிவிட்டாள் சுஜாதா... என்னதான் கணவனுக்கு ஆறுதல் சொல்லனும்னு அப்படி பேசினாலும் அவ மனசுலயும் அந்த பயம் இருக்கே... கணவனுக்கு என்ன பதில் கூற முடியும் அவளால்...

"ஆனா ஒன்னு சுஜா... நம்ம வெளிநாட்டுக்கு போய் சம்பாதிக்கறது எதுக்காக...?? இவளுக்காக தானே... ஆனா இவ மனசுல என்ன இருக்குன்னு தெரியாம போச்சே.... இங்க நம்ம பொண்ணு எப்படி இருப்பாளோன்னு அங்க போய் எப்படி இருப்பது... எதுவும் வேணான்னு விட்டுட்டு வந்துடலாமான்னு இருக்கு.... அப்படி எதையும் உடனே செய்ய முடியாதே... சீக்கிரம் இங்க வந்து செட்டில் ஆகுற வழிய பார்க்கனும்... இனிமேயாவது அவளுக்கு ஒன்னுன்னா நம்மக்கிட்ட சொல்ல நாம கூட இருக்கனும்..."

மாதவன் பேசி முடிப்பதற்கு முன்பே யுக்தா ஓடி வந்து அவரை கட்டிக் கொண்டாள்...

"அப்பா... நீங்க எப்பவும் எனக்கு நல்ல அப்பாவா தான் இருந்திருக்கீங்க... எனக்கு தான்ப்பா உங்களுக்கு மகளா இருக்க தகுதியில்ல...." என்று சொல்லி கண்ணீர் விட்டாள்...

"இல்லடா... இப்படி ஒரு தப்பு பண்ணிட்டின்னா... எங்க மகளா இல்லாம போய்டுவியா... நீ எப்பவும் எங்க மக தான்..." ஆறுதல் கூறிய அவர் கண்களிலும் கண்ணீர்...

இந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்த சுஜாதா, சாவித்திரிக்கும் கண்ணீர்... ஏதோ இதுதான் சரின்னு முடிவெடுத்து இந்த கல்யாணத்தை நடத்தி வச்சாலும்.... கல்யாணம் முடிந்ததும் பிருத்வி செய்ததையும் மதி செய்ததையும் பார்த்து தன் மகளைப் பற்றி அந்த இரு தாய்க்கும் கவலை பிறந்தது... மாதவன் அதை வெளிப்படுத்திவிட்டார்... பெண்களான இருவரும் அதை உள்ளுக்குள்ளேயே வைத்திருந்தார்கள்.... இப்போது அது கண்ணீராக வெளிப்பட்டது...

சில நிமிடங்கள் அந்த அறையில் கண்ணீர் தான் பேசியது.. பிறகு முதலில் சுதாரித்தது சாவித்திரி தான்...

"இங்கப் பாருங்க எதுக்கு இப்போ எல்லாம் அழறீங்க... நாமெல்லாம் ஊருக்கு போகறப்போ அழுதுக்கிட்டிருந்தா யுக்தாவால எப்படி இங்க நிம்மதியா இருக்க முடியும்..?? நம்ம யுக்தா குணத்தை பத்தி தெரியாதா... அவ குணத்துக்கு எல்லாரும் சீக்கிரமா அவங்க கோபத்தை விட்டுவிடுவாங்க...

அவளுக்கு அந்த முருகன் சன்னிதானத்துல கல்யாணம் நடந்திருக்கு... அந்த முருகன் நம்ம யுக்தாவை கைவிட்டுவிடுவாரா என்ன...?? கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகி அவ நல்லா வாழப்போறா... அதை நாம பார்க்கத்தான் போறோம்.."

என்று அவர்களை சமாதானப்படுத்தினாள்...

பிறகு மூவரும் அவளிடம் விடைப்பெற்றுக் கொண்டு வெளியே வந்தனர்...  எல்லோரும் அழுதிருப்பது நன்றாக தெரிந்தது மதிக்கும் செந்திலுக்கும்...

"இங்கப்பாருங்க யுக்தாவை நினைச்சு நீங்க யாரும் கவலைப்படாதீங்க... நாங்க அவளை நல்லாப் பார்த்துப்போம்... நாம எல்லாரும் பழசை மறக்கறது தான் நல்லது... கூடிய சீக்கிரம் எல்லா சரியாகிடும் நம்புங்க..." என்று செந்தில் ஆறுதலாக பேசினார்.

மதியோ சுஜாதாவை தனியாக அழைத்துக் கொண்டு  போனாள்... " சுஜா நீ வருத்தப்படாத... அன்னைக்கு பிருத்வி அப்படி பண்ணிட்டான்னு சங்கடத்துல நான் அப்படி நடந்துக்கிட்டேன்... விஷயம் எப்படிப்பட்டதுன்னு உனக்கு தெரியுமில்ல... பிருத்வியை முழு மனசோட என்னால சம்மதிக்க வைக்க முடியல... அதனால தான் அவன் அப்படி நடந்துக்கிட்டான்... எல்லா சரியாகிடும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு சுஜா... நீ கவலைப்படாம போய்ட்டுவா.. என்று அவள் ஆறுதலாக பேசியதும்  அவளைக் கட்டிக் கொண்டு அழுதாள் சுஜாதா..

"மதி... ஏதோ பிருத்வியை கல்யாணம் செஞ்சுக்கனும்னு யுக்தா இப்படி பண்ணிட்டா... அவ கேரக்டரை தப்பா நினைச்சிடாத மதி... யுக்தா அப்படிப்பட்ட பொண்ணு இல்ல..."

தோளில் சாய்ந்துக் கொண்டு அழுதவளை நிமிர்த்தி அவள் கண்ணீரை துடைத்து... " என்ன சுஜா... நான் யுக்தாவுக்கு மாமியார் ஆகறதுக்கு முன்னாடி அவளோட அத்தை... நான் அப்படியெல்லாம் தப்பா நினைப்பேனா..?? இங்கப் பாரு இது உனக்கு பிறந்தவீடு... நீ இப்படி அழுதுக்கிட்டே போகக்கூடாது... எல்லாம் சரியாகிடும்னு நம்பிக்கையோட போய்ட்டுவா... நானும் அவரும் யுக்தாக்கு துணையா இருப்போம்.."

"இதுபோதும் மதி... அவ தப்பானவ இல்லன்னு நீங்க புரிஞ்சிக்கிட்டா போதும்... நீ அவக்கூட இருந்தா போதும்... உன்னை நம்பி தான் நான் நியூயார்க் போறேன்... அவ்ளைப் பார்த்துக்க..."

"கண்டிப்பா சுஜா... நான் அவளைப் பார்த்துக்கிறேன்.."

மதியிடம் பேசின நிம்மதியோடு வெளியில் வந்தாள் சுஜாதா... பின் மூவரும் அனைவரிடமும் விடைப்பெற்றனர்... யுக்தா சம்பந்தமாக பிருத்வியிடம் மூவரும் எதுவும் பேசவில்லை.. பிருத்வி இப்படி இருப்பது குறித்து அவர்களுக்கு கஷ்டமாக இருந்ததே தவிர... அவன் மீது அவர்களுக்கு கோபம் இல்லை... சப்னாவை காதலிச்சிட்டு யுக்தாவை கல்யாணம் செய்து கொண்ட அவனின் நிலைமையும் அவர்களுக்கு புரிய தானே செய்தது...

அவர்கள் மூவரும் வந்து போன இரண்டாம் நாள் சாவித்திரி ஊருக்கு கிளம்பினாள்... சங்கவி அவளை ரயில் ஏற்றி விட வந்தாள்... கவி வரப்போவது தெரிந்ததால் யுக்தா சாவித்திரியை வழி அனுப்ப செல்லவில்லை... ஃபோனில் விடைக்கொடுத்து அனுப்பினாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.