அடுத்த இரண்டாம் நாள் செல்ல இருக்கும் மாதவன் சுஜாதாவை வழி அனுப்ப வரமுடியாது... வேலை இருக்கும் என்பதால் இப்போதே அவர்கள் நல்ல முறையில் நியூயார்க் செல்ல வேண்டும் என்று விடைகொடுத்து பெங்களூர் புறப்பட்டால் கவி... யுக்தா வருவாள் அவளை ஒருமுறையாவது பார்த்துவிட்டு செல்லலாம் என்று நினைத்துக் கொண்டு வந்த அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது...
மாதவன் சுஜாதாவை வழி அனுப்ப பிருத்வியும் வந்திருந்தான்... மனதில் இருக்கும் வருத்தத்தை கொஞ்சம் ஒதுக்கி விட்டு இன்முகத்தோடே எல்லோரிடமும் விடைப்பெற்றார்கள் இருவரும்... யுக்தாவை அருகே அழைத்து அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு சென்றனர்...
அவர்கள் கண்களில் இருந்து மறையும் வரை அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் யுக்தா... ஏனோ சில நாட்களாக எல்லோரும் அருகில் இருந்த போதே தனிமையாக இருப்பது போல் உணர்ந்தாள் என்றால்... இப்போதோ அவளுக்கு வேண்டியவர்கள் எல்லாம் அவளை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டது போல் உணர்ந்தாள்...
அவர்களோடு இந்தியா வந்த அவள் இங்கேயே இருக்கும் எண்ணத்தோடு தான் வந்தாள்... அப்படி ஒரு பிரிவு அவளுக்கு கஷ்டமாக தெரிந்திருக்காது... ஏனென்றால் அப்போது அவர்கள் மகளாகவே அவள் இருந்திருப்பாள்... ஆனால் இந்த பிரிவோ அவளுக்கு கஷ்டமாக இருக்கிறது... நல்லபடியாக ஒரு திருமணம் நடந்து அந்த பெண் தாய் வீட்டை விட்டு பக்கத்தில் சென்றாளே கஷ்டமாக இருக்கும்... இதில் அவளுக்கு நடந்த திருமணம்... தன் பெற்றவர்களின் பிரிவு அவளுக்கு வருத்தத்தை கொடுத்தது...
ஒரு பெண் தங்களை விட்டு புகுந்த வீட்டுக்கு செல்லப் போகிறாள் என்று தெரிந்தும் தன் மகளின் திருமணத்தை சந்தோஷமாக நடத்துவர் பெற்றோர்கள்... ஆனால் அந்த சந்தோஷத்தை கூட அவர்களுக்கு இவள் கொடுக்கவில்லை... இதில் வருத்தத்தோடு அவர்களை அனுப்புகிறாள்... இதையெல்லாம் சிந்தித்துக் கொண்டு அவர்கள் அவள் கண்ணில் இருந்து மறைந்தப் பிறகும் அசையாமல் நின்றுக் கொண்டிருந்தாள்...
அவளை அந்த நிலைமையில் பார்த்த போது தன் கோபத்தையும் மீறி அவளை அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது பிருத்விக்கு... ஆனால் அவன் கோபப் போர்வையை அவன் விலக்க நினைக்கவில்லை.... அதை இன்னும் இழுத்து போர்த்திக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான்... பின் மதி தான் யுக்தாவிற்கு ஆறுதல் சொல்லி அழைத்துச் சென்றாள்.
கையில் இருந்த செல்ஃபோனை தூக்கி எறிய வேண்டும் என்ற ஆத்திரம் வந்தது சப்னாவிற்கு... வரூன் கிருஷ்ணா தான் ஃபோன் செய்திருந்தான்... பிருத்வியை கல்யாணம் செய்து காட்டுவதாக அன்னைக்கு சவால் விட்ட இப்போ என்ன ஆச்சு என்று கிண்டல் செய்தான்.. அந்த ஆத்திரம் தான் ஃபோனை தூக்கி எறியும் அளவுக்கு கோபம் வந்தது அவளுக்கு...
எப்படி தான் ஜெர்மனியில் இருக்கும் அவனுக்கு இங்கு நடப்பது தெரிகிறதோ... அவன் அங்கு இருந்துக் கொண்டு வெறுப்பேற்றுவது கூட நேரில் இருந்து வெறுப்பேற்றுவது போல் இருந்தது... அவன் முன் நேருக்குநேராக நின்று பிருத்வியை காதலிச்சு கல்யாணம் செஞ்சு காட்றேன் என்று சவால் விட்டாள்... ஆனா இப்போ எங்கிருந்தோ வந்த யுக்தா இவளை தோற்கடித்துவிட்டாள்...
ச்ச்சீ இந்த பழம் புளிக்கும் என்று வந்தாலும்... திரும்பவும் ஏன் முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்று தோன்றியது சப்னாவிற்கு... பிருத்வி ஒன்றும் யுக்தாவை விரும்பி திருமணம் செய்யவில்லையே... திரும்பவும் பிருத்வியை நெருங்க ஏதாவது வாய்ப்பு கிடைக்காதா என்ன...?? என்று அவள் யோசித்தாள்... (சப்னா நிறைய சீரியல் பார்ப்பாளோ... பிருத்விக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று தெரிந்தும் அவனை திருமணம் செய்ய நினைக்கிறாளே...) வரூன் முன்னாள் அவள் தோற்றுவிடக் கூடாது என்று நினைத்தாள்... அதனால் பிருத்வியின் மொபைல்க்கு அழைத்தாள்.. ஆனால் பல முறை அழைத்தும் அவள் அழைப்பை அவன் ஏற்கவில்லை.
ஏனோ யுக்தா ஏர்ப்போர்ட்டில் நின்றிருந்ததே பிருத்வியின் கண்முன்னே வந்துக் கொண்டிருந்தது... அதற்குப்பிறகு அவள் அந்த அறைவாசத்தை தொடருவதை அவன் விரும்பவில்லை... அதற்காக அவன் கோபத்தை விட்டு அதை அவளிடமோ.. தன் பெற்றோரிடமோ சொல்லவில்லை... அதற்கு பதிலாக அதை அவன் வேறு மாதிரி கையாண்டான்.
தொடரும்
{kunena_discuss:933}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.