(Reading time: 20 - 40 minutes)

05. என்னுள் நிறைந்தவனே - ஸ்ரீ

Ennul nirainthavane

"யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ

யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ

யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

அடி வெள்ளாவி வெச்சு தான் வெளுதாங்களா

உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா

நான் தல காலு புரியாம

தர மேல நிக்காம தடுமாறி போனேனே

நானே நானே

அடி நெஞ்சு அனலாகவே

தீ அள்ளி ஊத்துரே 

நூல் ஏதும் இல்லாமலே

உசுர கோக்குறே

எனை ஏனடி வதம் செய்கிறாய்

எனை நானிலும் உன்னை இணைக்கிறாய்

கண நாளிலே எனை நெய்கிறாய்

கண் ஜாடையில் எனைக் கொல்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ

யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ"

இரவு கேப்பில் அலறிக் கொண்டிருந்தது பாடல்..அருகில் இருந்தவளை ஓரப் பார்வை பார்த்துக் கொண்டே வந்தான் ராம்..இந்த பாடல் அவளுக்காகவே எழுதியது போன்று இருந்தது..அத்தனை இருட்டிலும் அவளின் நிறம் ஜொலித்தது..அப்போது தான் நினைவு வந்தவனாய் என்ன இவ்ளோ அமைதியா வரா என்று அவள் முகத்தை நேராக பார்த்தான்..ஏதோ பயங்கர சிந்தனையில் இருந்தாள்..என்ன மகி ஏதோ சீரியஸா திங் பண்றமாறி இருக்கு..

ஹா,..அதெல்லாம் ஒன்னுமில்ல ராம்..

ஓ..ஓ.கே..சொல்ல வேண்டாம்னா விடு…

சில நிமிடங்களுக்கு பிறகு என்ன நினைத்தாளோ அவளே ராமை அழைத்து தன் மொபைலை நீட்டினாள்..என்ன என்று ஏறிட்டவனை அதை படிக்குமாறு கூறினாள்..அது ஒரு பார்வட் மெசெஜ்..காதலர்தின வாழ்த்து இருந்தது,யாரு மகி இது..ஏதோ விஷ் பண்ணிருக்காங்க..இதுக்கு ஏன் டென்ஷனா இருக்க?மொபைலை வாங்கி அடுத்து ஒரு மெசெஜை காட்டினாள்..அதில் மகியை காதலிப்பதாகவும்,அவளின் பதிலை பொறுத்து நாளை அவளிடம் பேச வருவதாகவும்,இன்னும் என்னென்னவோ..ராமின் முகமோ இறுகிவிட்டது..யாருநு தெரியுமா மகி உனக்கு.?ஒரு கெஸ் இருக்கு ராம் பட் நாட் ஸுவர்..நம்ம பக்கத்து டீம் சந்தோஷ்னு தோனுது,நா அந்தபக்கம் போனாலே எல்லாரும் அவன கத்தி கூப்பிடுவாங்க..ஆரம்பத்துல நா பெருசா எடுத்துக்கல பட் ரொம்ப ஓவரா போய்டாரு..இதுக்குஎன்ன சொல்லலாம்நு இருக்க மகி?அதான் யோசிச்சுட்டு இருக்கேன்..நம்ம வெப்சைட்ல நம்பர் கன்ஃபார்ம் பண்ணணும்..தென் அவர்ட்ட பேசனும்..

ம்ம்ம்,சுத்த நான்சென்ஸா இருக்கு ஏதோ ஸ்கூல் பசங்க மாறி பிகேவ் பண்ணிட்டு இருக்காங்க நா வேணா கம்ளைன்ட் பண்ணவா மகி மீராகிட்ட??

ராம் அதெல்லாம் வேணாம்..நா பாத்துக்குறேன்..நீங்க கேட்டீங்களேநு தான் சொன்னேன்..மத்தபடி ஒன்னுமில்ல.

.வீட்டிற்கு வந்தவனுக்கோ கோபம் தலைக்கேறியது..பரணியை அழைத்தான்..டேய் அந்த சந்தோஷ் ஆள் எப்படிடா.?

ராம் எதுக்கு இப்போ சம்பந்தமில்லாம அவன பத்திக் கேக்குற?என்னாச்சு எதுவும் பிரச்சனையா?

ராம் நடந்தவற்றை கூறினான்,பரணிக்கோ சிரிப்பு தாளவில்லை..என்னடா நாளுக்கு நாள் உனக்கு காம்படீடர்ஸ் கூடிட்டே போறாங்க போல இருக்கு?பாத்துடா மச்சி சீக்கிரம் ரிசர்வ் பண்ணி வச்சுக்கோ,

டேய் கொலவெறில இருக்கேன் பக்கத்துல இருந்த கொன்னுடுவேன் உன்ன..

இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை..சரி சரி அவன் நல்ல டைப்தான்டா எந்த லூஸு இப்படி ஐடியா குடுத்தான்னு தெரில..ம்ம்ம் எல்லாரும் உனக்கு அமைஞ்ச ப்ரெண்ட் மாறியே ப்ரில்லியண்ட்டா இருப்பாங்களா,

உனக்கு போய் கால் பண்ணேன் பாரு என்ன சொல்லனும்..வை டா போனை,

அழைப்பைத் துண்டித்தவனுக்கு தன் மனம் புரிய ஆரம்பித்தது..ஏதோ ஒரு மெசெஜை கூட பொறுத்துக்க முடிலயே..இதுக்கு பேர் காதலில்லாமல் வேற என்னவாக இருக்க முடியும்..ஆம் மகி எனக்கானவள்..எதுக்காகவும் அவள நா விட்டுக்கொடுக்க மாட்டேன்..ஆனா என்ன அவ ஏத்துப்பாளா..மாட்டேன்னு சொல்லிட்டா..இல்ல அவ மனச தெரிஞ்சுக்காம நா எதையும் சொல்ல மாட்டேன்..எது எப்படி ஆனாலும் மகி தான் என் மனைவி இந்த ஜென்மத்துல..காதலை உணர்ந்த சந்தோஷத்தில் உறங்கியும் போனான்..

மகியோ பரணியிடம் பேசிக் கொண்டிருந்தாள் அண்ணா மெசெஜ் பாத்தவுடனே ரொம்ப டென்ஷன் ஆயிட்டாரு ராம்,கடைசில நா அவர சமாதான படுத்த வேண்டியதா போச்சு..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.