(Reading time: 20 - 40 minutes)

ம்ம் பட் உன்ன கல்யாணம் பண்ணிக்க போறவர் ரொம்பவே லக்கி மகி..ஏதோ ஒரு வேகத்தில் இதை அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருந்தான்..

சிறிது நேரம் கழித்து பதில் வந்தது..இல்ல ராம் என்ன லக்கியா நினைக்குறவரு கிடச்சா நா தான் ரொம்ப லக்கி..அது மட்டுமில்லாம என் லைப்ல இதுவர ஆண்களோட ரோல் ரொம்ப கம்மி சோ என் ஹஸ்பண்ட்டா வரவரு எனக்கு ரொம்பவே ப்ரஷியஸ்ஸான கிப்ட்..

அப்போ என்ன அந்த ப்ரஷியஸ்ஸான கிப்ட்டா ஏத்துப்பியா மகி

கேட்டேவிட்டான்..என்ன அழகான காதல் பரிமாற்றம் இது..உன்னை காதலிக்கிறேன் என்று கூறாமல் உன் கணவனாக என்னை ஏற்றுக் கொள்வாயா என்று கேட்பது எந்த ஒரு பெண்ணுக்கும் தன் அன்பிற்குரியவன் செய்யும் மரியாதை..இன்று ராம் அந்த மரியாதையை தன்னவளுக்கு அளித்தான்..சிறிது நேரத்திற்கு பதிலே வரவில்லை மகியிடமிருந்து..

அங்கு மகியோ தன் மொபைலையே பார்த்துக் கொண்டிருந்தாள்..கண்கள் ஆனந்தத்தில் குளமாகி இருந்தது..ஆனாலும் ராமிடம் கேட்பதற்கு சில விஷயங்கள் இருந்தது..அதை கேட்கவும் செய்தாள்..ராம் எனக்கு எப்படி சொல்றதுநு தெரில பட் என் முடிவ சொல்றதுக்கு முன்னாடி சில விஷயங்கள் தெளிவுபடுத்திக்க ஆசை பட்றேன்..

எதுவா இருந்தாலும் சொல்லு மகி..

ராம் எனக்கு என் அம்மா தான் எல்லாமே சோ அவங்க சம்மதம் எனக்கு ரொம்ப முக்கியம்..அதே மாதிரி சின்ன வயசுல இருந்தே நா தனியா வளர்ந்தவ அதனால கல்யாணத்துக்கு அப்புறம் ஜாய்ன்ட் பேமிலியா இருக்கதான் ஆசைப்பட்றேன்..உங்களோட இந்த முடிவுக்கு உங்க வீட்ல ஒத்துப்பாங்களா.??.ஏன்னா இப்போ வீணா ஆசைய வளத்துட்டு நாளைக்கு அவங்க சம்மதம் கிடைக்கலனா என்னால தாங்கிக்க முடியாது..ஏற்கனவே பல ஏமாற்றங்கள சந்திச்சுட்டேன்..இனியும் ஒரு ஏமாற்றத்த தாங்கிக்க உடலளவும் சரி மனசளவும் சரி என்கிட்ட தெம்பு இல்ல..நா எதாவது தப்பா பேசிருந்தா மன்னிச்சுடுங்க ராம்..

மெசெஜை படித்தவனுக்கு அவளின் மேல் காதல் இன்னும் அதிகரித்தது..எவ்வளவு வருத்தங்களை மனதினுள் சுமந்து கொண்டிருந்தால் இந்த அளவுக்கு யோசித்திருப்பாள்..ஆயுள் முழுவதும் இவளை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தான்.

மகி இதுக்கு அப்பறம் உன் வாழ்க்கைல ஏமாற்றமே இருக்க கூடாதுநு நெனைக்குறேன்..என்ன நீ ஏத்துக்கும் போது என் காதலோட சேர்த்து கண்டிப்பா நல்ல உறவுகளும் உன்கூட வாழ்க்கை மொத்ததுக்கும் இருக்கும் அதுக்கு நிச்சயமா நா பொறுப்பு..அது மட்டுமில்லாம நீ எங்களுக்கு கிடைக்க போற பொக்கிஷம் அதை நாங்க என்னைக்குமே பத்திரமா பாத்துப்போம்..

மெசெஜின் ஒரு ஒரு வரியையும் படித்தவளுக்கு சந்தோஷத்தில் நெஞ்சே அடைத்துவிடும் போல் இருந்தது..மனம் கொள்ளா மகிழ்ச்சியோடு பதில் அனுப்பினாள்,அப்போ என்னோட ப்ரஷியஸ் கிப்ட் எனக்கு எப்போ கிடைக்கும்???

அதைப் பார்த்தவன் வாய்விட்டுச் சிரித்தான்..ராட்சசி நா தான் டரைக்டா ப்ரபோஸ் பண்ணலநு பாத்தா இவ என்னவிட கேடியா இருக்காளே என்று எண்ணிக் கொண்டான்..அடுத்த நொடி அவளை அழைத்தான்..மகி அழைப்பை துண்டித்தாள்..மறுபடியும் அழைத்தான்,துண்டிக்கபட்டது..

மகி வாட் ஹப்பன்ட்??

ராம்ப்ளீஸ் மெசெஜ் பண்ணுங்களேன்..

என்னாச்சுடா?

இல்ல ராம் எனக்கு என்ன பேசுறதுநு தெரில..ப்ளீஸ்..

அவளின் மனநிலை புரிகிறது..அவளை உடனே பார்க்க வேண்டும் போல் இருந்தது..சிறிது நேரம் அவளை கேலி செய்ய எண்ணியவனாய்..

வெட்கபடுறயா மகி?

ராம் ப்ளீஸ்

ஹேய் விட்டா லைப் ஃபுல்லா மெசெஜ்லயே ஓட்டிருவ போலயே..சரி நாளைக்கு மார்னிங் நா கால் பண்ணுவேன் நீ பேசியே ஆகனும்..

ம்ம்ம் சரி,

அதன் பிறகும் வெகு நேரம் ஏதேதோ பேசினார்கள் எல்லாமே ஸ்வீட் நத்திங்ஸ் தான் அதுவும் மெசெஜ்லயே..

அதிகாலையிலேயே எழுந்துவிட்டாள் மகி,.நீண்ட நாட்களுக்குப்பின் மனதார ஆனந்தமாய் இருப்பதாய் உணர்ந்தாள்..இந்த மனம் ஏன்தான் இப்படி படுத்துகிறதோ அதிக சந்தோஷமானாலும் தூங்கவிடுவதில்லை அதிக சோகமானாலும் தூங்கவிடுவதில்லை..எழுந்து குளித்து முடித்துவிட்டு வந்து ராமிற்கு குட்மார்னிங் மெசெஜ் அனுப்பினாள்..அடுத்த நொடி அவனிடமிருந்து அழைப்பு..வேறு வழியின்றி அட்டெண்ட் செய்தாள்..ஹலோ..

குட்மார்னிங் குட்டிமா..வெகு இயல்பாக கூறினான்,மகிக்குதான் வார்த்தையே வரவில்லை..

மகி லைன்ல இருக்கியா?

ஆங் இருக்கேன்..குட் மார்னிங்..அதுக்குள்ள எழுந்தாச்சா?

இல்லடா உன் மெசெஜ் சவுண்ட்ல தான் முழிச்சேன்..ஆமா ஏன் ஒருமாறி பேசுற இல்லநா மூச்சுக்கு முந்நூறு தடவை என் பேர சொல்லிடுவ..

அதெல்லாம் ஒன்னுமில்லை சும்மாதான்..

ஐயோ நைட்லா யோசிச்சு எவ்ளோ அழகா உனக்கு ஒரு பேரு செலக்ட் பண்ணிருக்கேன்..நீ என்னடாநா கூப்ட்டுட்டு இருந்த பேரையும் கட் பண்ணிட்டியே..சரி இன்னைக்கு ஒரு நாள் டைம் உனக்கு அதுக்குள்ள எப்படி கூப்பிடனும்னு டிஸைட் பண்ணு..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.