(Reading time: 20 - 40 minutes)

ன் அப்பா தவறும்போது எனக்கு 15 வயசு ராம்..நா ரொம்ப செல்லமா வளர்ந்தவ..அப்பாக்கும் அம்மாக்கும் நா னா உயிர்..அதுவும் அப்பா என் பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டாரு..ஆனா அவரு போன டைம்ல நாங்க பினான்ஷியலா ரொம்ப டவுண்னா இருந்தோம்..அப்பாவோட ஜாப் அம்மாக்கு கிடச்சுது,அம்மா எப்பவுமே அன்ப வெளில காட்டிக்க மாட்டாங்க அதுவும் இப்போ,தான் தனியா வளர்த்த பொண்ணு தப்பான பாதைல போய்ட கூடாதுநு ரொம்பவே கண்டிப்பா இருந்தாங்க..அம்மாவுக்கும் பொறுப்பு அதிகமாச்சு அத எனக்கு புரிய வைக்க ட்ரை பண்ணாங்க..நல்லா படிக்கனும் நா தான் அவங்கள பாத்துக்கணும்நு சொல்லிட்டே இருப்பாங்க..அப்போலா எனக்குத் தோனும் ஒரு அண்ணன் இருந்திருந்தா அவரு அம்மாவோட பாறத்த கொறச்சுருப்பாரு..ரெண்டு பேரும் சேர்ந்து என்னையும் பாசமா பாத்திட்டு இருந்திருப்பாங்கநு….ஆனா இப்போ நா தான் பொண்ணுக்கு பொண்ணா பையனுக்கு பையனா இருந்து எல்லாத்தையும் பாத்துக்கனும்..இதுநாலயே லைஃப்ல நெறைய மிஸ் பண்ணிருக்கேன் ராம்..சொல்லும்போதே குரல் தழுதழுத்தது..

ராமின் கண்களிலோ அவனையும் அறியாமல் நீர் கோர்த்திருந்தது..அவளை தோளோடு அணைத்து இனி எல்லாமுமாய் நானிருக்கிறேன்னு சொல்ல வேண்டும் போல் இருந்ததுதன்னை கட்டுப்படுத்தி கொண்டு அவளுக்கு சமாதானம் கூறினான்..ஹே மகி கன்ட்ரோல் யுவர் செல்ப்..நாங்கலா இருக்கோம் டோண்ட் வொரி..என்று பொதுப்படையாக ஆறுதல் கூறினான்..அவள் தன்னை சமாளித்து கொள்ள நேரம் கொடுத்தவன்,இதுக்கு மேல இங்க இருந்தா எதாவது உளரிடுவோம் கிளம்பறதுதான் கரெக்ட் என்று பில்லை கட்டிவிட்டு வெளியே வந்தனர்..மகி நீ பாத்து போய்டுவியா ஆர் நா ட்ராப் பண்ணவா?

இல்ல ராம் நா போய்க்குறேன்..தங்ஸ் ராம்..ரொம்ப நாளைக்கு அப்பறம் மனசுவிட்டு பேசினா மாறி இருக்கு..

இட்ஸ் மை ப்ளஷர்..எதுனாலும் பீல் ஃப்ரீ டு டாக் மகி..பாத்து சேவ்வா போ ரீச் ஆயிட்டு மெசெஜ் பண்ணு..

விடுதியை அடைந்தவள் புடவையை மாற்றிவிட்டு கட்டிலில் விழுந்தாள்..அவள் மனம் முழுவதையும் ராமே ஆக்கிரமித்து இருந்தான்..அவளை பார்த்த அவனது பார்வை..அவனது நடவடிக்கை அனைத்துமே ஏதோ ஒன்றை உணர்த்தியது,இப்பொழுது நினைத்தாலும் உடல் சூடேறுவதாய் தோன்றியது..எப்படி எனக்குள் வந்தாய்.,எந்த நொடியில் என்னை நான் இழந்தேன் எதுவுமே தெரியவில்லை ஆனால் இந்த நொடி என்னுள் எல்லாமுமாய் நிறைந்திருக்கின்றாய் என்று தன்னுள்ளேயே உருகிக் கொண்டிருந்தாள்..இது எங்கு போய் முடியுமோ தெரியாது ஆனால் இந்த ஜென்மத்தில் தாலி என்ற ஒன்று என் கழுத்தில் ஏறுமாயின் அது ராமின் கையால் தான் என்று முடிவெடுத்தாள்..ஆனால் பாவம் பின்னாளில் இவளே அவனை யார் என்று கேட்பாள் என இப்போது அறிந்திருக்கவில்லை..

உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்

எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன்

உன் பார்வையில் தோன்றிட அலைகிறேன்

அலைந்தும் ஏன் மறுபடி தொலைகிறேன்

ஓர் நொடியும் உன்னை நான் பிரிந்தால்

போர்க்களத்தை உணர்வேன் உயிரில்

என் ஆசை எல்லாம் சேர்த்து ஓர் கடிதம் வரைகிறேன் அன்பே

தூரத்தில் தோன்றிடும் மேகத்தை போலவே

நான் உனை பார்க்கிறேன் அன்பே

சாரலாய் ஓர் முறை நீ என்னை தீண்டினாய்

உனக்கது தெரிந்ததா அன்பே

என் மனம் கானலின் நீர் என ஆகுமா…”

ஏதேதோ எண்ணிக் கொண்டும், பாடல்கள் பாடிக் கொண்டும் பொழுதைப் போக்கினாள்..ஒரு எல்லைக்கு மேல் எழுந்து அமர்ந்தவள் மகி இப்படியே போச்சுனா பைத்தியம் ஆயிடுவ போய் வேலைய பாரு என்று தன்னைத் தானே அதட்டிவிட்டு அறையைச் சுத்தம் செய்யலாம் என்று முடிவெடுத்தாள்..துணிகளை அடுக்கி வைத்து,அறையை பெருக்கித் துடைத்து விட்டு அமர்ந்தவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை.குளித்து முடித்து இரவு உடைக்கு மாறியவள் தனக்கான டின்னரை எடுத்துக் கொண்டு வந்து அறையில் வைத்து உண்ணத் தொடங்கினாள்..சரியாக அந்நேரம் மொபைலில் மெசெஜ் வந்தது..என்ன மகி ஆளையே காணும்..?பிசியா?—ராம்

ஹாய் ராம் சாப்ட்டுட்டு இருக்கேன் டு மினிட்ஸ் வந்துடுறேன் என்று பதில் அனுப்பிவிட்டு வேகவேகமாக சாப்பிட்டுவிட்டு வந்து அமர்ந்தாள்..சொல்லுங்க ராம் சாப்டாச்சா?

யா எப்பவோ மகி..நீ சாப்பிட ஏன் இவ்ளோ லேட் ஆயிட்டுச்சு?

ரூம் க்ளீன் பண்ணிட்டு இருந்தேன் ராம் டைம் போனதே தெரில..

..சர்வன்ட்லா இல்லையா ஹாஸ்டல்ல..நீங்க தான் பண்ணனுமா?

அப்படிலா இல்ல டு டேஸ் அவங்க லீவ் சோ ரொம்ப குப்பையா இருக்கேநு நானே பண்ணிட்டேன்..

பரவாயில்லையே மகி..இவ்ளோ நல்லவளா நீ..

நம்ம இடத்தை நாம தான சுத்தமா வச்சுக்கனும் இதெல்லாம் பெரிய விஷயமா ராம்..

அது கரெக்ட் தான்..பட் எங்க அக்கா மேரேஜ்க்கு முன்னாடி ஒரு சின்ன துரும்ப கூட அசைக்கமாட்டா எங்க வீட்ல..அதான் அப்படி சொன்னேன்..

ம்ம் அவங்க செல்லமாவே வளந்திருப்பாங்க..பட் என் நிலைமைதான் உங்களுக்கு தெரியுமே சூழ்நிலை க்கு ஏத்தமாறி மாறிக்க வேண்டியதுதான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.