(Reading time: 20 - 40 minutes)

ம்ம்ம் சரி..

அப்புறம் இன்னைக்கு நா மார்னிங்கே ஆபீஸ் போய்டுவேன்டா..கேப்ல வரமாட்டேன்,நாளைக்கு லாஸ்ட் வொர்கிங் டேல..

.ஓகே..அப்போ மத்யானம் மீட் பண்ணலாம்..

சரிடா குட்டிமா..பை..

இப்போதுதான் மூச்சு சீராக இருப்பதாக தோன்றியது மகிக்கு..பரணியிடம் கூறலாமா என்று எண்ணியவள் நேரிலேயே சொல்லிக்கொள்ளலாம் என்று தன் வேலையை தொடர்ந்தாள்..

மதியம் அலுவலகத்திற்குள் நுழைந்தவளுக்கு ஒருவிதமான பதட்டம் தொற்றிக் கொண்டது..அவரை எப்படி பேஸ் பண்ண போறேனோ தெரியலயே என்று இஷ்ட தெய்வத்தையெல்லாம் வேண்டிக் கொண்டாள்..ஆனால் பாவம் தெய்வம் கூட ராமின் பக்கம்தான்..ரெஸ்ட் ரூம் செல்வதற்காக திரும்பியவள் எதிரில் யாரோ வருவதை உணர்ந்து நிமிர்ந்தாள் நம்ம ஹீரோவே தான்..எங்கே எதுவும் பேசிவிடுவானோ என்று பயந்து நிற்காமல் ஓடி விட்டாள்..போன வேகத்தில் உள்ளிருந்து வந்த திவ்யாவின் மீது மோதிக் கொண்டாள்..

ஹேய் அமூல்பேபி எதுக்கு இப்படி ஓடி வர..யாராவது உன்ன துரத்துராங்களா?என்று கலாய்த்தாள்..

திவி நல்ல வேளை நீ இங்கயே இருக்க..உன்ட்ட ஒரு விஷயம் சொல்லனும்..

என்னடா எதாவது ப்ராப்ளமா?உண்மையான அக்கறையில் கேட்டாள்..

ச்சச்ச அதெல்லாம் ஒன்னுமில்ல,இது வேற..எப்படி சொல்றதுநு தெரில..

ஹே மகி என்னனு சொல்லு எதுக்கு இவ்ளோ தயங்குற?

திவி..ஐ அம் இன் லவ்..

வாட்?????யாரு நம்ம சாமியாரா??

ஏய்ய்ய்ய்

சாரி சாரி ராம் தான..

ம்ம்ம்ம்..

சூப்பர் டீ மை ஹார்ட்டி ஹார்ட்டி விஷ்ஷஸ் அமூல் பேபி..வெரி ஹாப்பி பார் யு நா தான் அன்னைக்கே சொன்னேன்ல நீங்க மேட் பார் ஈச்சதர்நு..

இவ்வாறாக பேசிக் கொண்டே தத்தம் இருக்கைகளை அடைந்தனர்..வந்தவள் பரணியைத் தேடினாள்..அவனிடத்தில் தான் இருந்தான்..எழுந்து சென்றாள்..

அண்ணா..

ஹாய்டா குட்டி பொண்ணு என்ன வந்ததும் வராததுமா இங்க வந்துருக்க?

அண்ணா நீ சொன்னதுதான் உண்மை ஆயிடுச்சு என்று கூறும்போதே கண்கலங்கிவிட்டாள்..

அவளது பேச்சின் அர்தத்தை உணர்ந்து கொண்டவன்,ஹே லூஸு இதுக்கு எதுக்கு அழற..நீ ப்லேஸ்க்கு போ நா சாட் அனுப்புறேன்..

வந்து கணிணியை உயிர்பித்தாள்..பரணியிடமிருந்து சாட் வந்திருந்தது..வெரி ஹாப்பி பார் யு போத்..நல்லா இருப்படா என் ஸ்பெஷல் விஷ்ஷஸ் உனக்கு எப்பவும் உண்டு..

அவனுக்கு பதில் அனுப்பிவிட்டு நிமிர்ந்தவளுக்கு ராம் தன் இடத்தில் அமர்வது தெரிந்தது..ஹாய் குட்டிமா..

என்ன ராம் இது ஆபீஸ்ல இருந்துட்டு..யாராவது பாத்துர போறாங்க..

ஹப்பா ஒரு வழியா பேர சொல்லிட்ட..சரி எனக்கு செல்ல பேர்லா கிடையாதா?

ராம் இது ஆபீஸ்..

அட போம்மா இனி இது உன் ஆபீஸ் நாளைக்கு அப்பறம் நா இங்க எக்ஸ் எம்ளாயி ஆய்டுவேன் சோ நோ ப்ராப்ளம்..

ம்ம்ம் ஊமைகொட்டான் மாறி இருந்துட்டு இப்போ பேச்ச பாரு,

ஹே அதெல்லாம் மத்தவங்களுக்கு..என் பொண்டாட்டிட நா ஏன் அப்படி இருக்கனும்..

அது சரி..அப்பறம் ராம் உங்களோட நா சில விஷயங்கள் நேர்ல பேசனும்..

யா நானும் தான் மகி..நாளைக்கு சென்ட்ஆஃப் அது இதுநு டைம் போய்டும் இன்னைக்கு ஈவ்னிங் இங்க பக்கத்துல இருக்கிற மெர்ரி ப்ரௌன் போலாமா?

சரி ராம்..போலாம்..நீங்க இன்னும் பரணி அண்ணாட்ட விஷயத்தை சொல்லலியா..

ம்ம்ம் இல்ல டா நேர்ல சொல்லலாம்நு தான்..இதோ இப்போ வெளில போகப் போறோம்..சரி நீ வேலைய பாரு..

இருவரும் வெளியே சென்றுவிட்டு வெகுநேரத்திற்குப்பின் வந்தனர்..

இவ்ளோ நேரம் அப்படி என்னதான் பேசினீங்க?என்று மகி ராமிற்க்கு மெசெஜ் அனுப்பினாள்..

உன் அண்ணன் ஒரே அட்வைஸ் மழைய பொழிஞ்சான்,தங்கச்சிய இப்படி பாத்துக்கனும் அப்படி பாத்துக்கனும்நு..உங்க அலம்பல் தாங்க முடில டீ..

என்னது டீயா?

ஆமா என் பொண்டாட்டிய நா அப்படிதான் கூப்டுவேன்..,கூப்பிடலாம்ல??

ம்ம்ம்ம்ம்..

எட்டி அவனை பார்த்தவளுக்கு அவனின் முகம் பதட்டமாய் இருப்பது போல் தோன்றியது..ச்சச நல்லாதான மெசெஜ் பண்ணிட்டு இருக்காரு எனக்குதான் ஏதோ பிரம்மை என்று விட்டுவிட்டாள்..அப்போதே கவனித்து அவனிடம் கேட்டிருந்தால்,பதட்டத்திற்கான காரணமும்,வெகு நேரம் அவர்கள் பேசிய விஷயமும் தெரியவந்திருக்கும்..ஆனால் விதி வலியதன்றோ..அதை  இவர்களின் மதியால் வெல்ல முடியுமா பொறுத்திருந்து பார்ப்போம்..

ஹாய் ப்ரெண்ட்ஸ்ஒரு வழியாக மகியையும் ராமையும் சேர்த்தாச்சு..இந்த எபிசோட் எப்படி இருந்ததுனு கண்டிப்பா கமெண்ட்ஸ் ஷேர் பண்ணுங்க..

தொடரும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:952}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.