(Reading time: 18 - 36 minutes)

06. என்னுள் நிறைந்தவனே - ஸ்ரீ

Ennul nirainthavane

எனை மாற்றும் காதலே!
எனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!
எனை மாற்றும் காதலே!
உனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!
எனை மாற்றும் காதலே!
உனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!

எதுக்காக கிட்ட வந்தாலோ,
எதத் தேடி; விட்டுப் போனாலோ..., விழுந்தாலும்,
நான் ஒடன்ஜே போயிருந்தாலும்,
நினைவிருந்தாலே போதும்!
நிமிர்ந்திடுவேனே நானும்..!

அடக் காதல் என்பது மாயவலை,
சிக்காமல் போனவன் யாருமில்லை,
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை! தேவையில்லை! தேவையில்லை!

மொபைலில் எப்.பம் கேட்டவாறே மகிக்காக பார்கிங்கில் காத்திருந்தான் ராம்..பத்து நிமிடத்தில் வந்தாள் மகி..குனிந்த தலை நிமிரவேயில்லை..ராம்  அவளின் இந்த வெட்கத்தை வெகுவாக ரசித்தான்..மகி..

சற்றே நிமிர்ந்தவள்,அவனின் ஊடுறுவும் பார்வையை தாங்க முடியாமல் விழி தாழ்த்திக் கொண்டாள்..

குட்டிமா..என்னாச்சு உனக்கு..இப்பவே வெட்கத்தை எல்லாம் காலி பண்ணிறாத இன்னும் எவ்ளவோ இருக்கு என்று வாரினான்..மகியோ அவனை நேராக பார்த்து முறைத்தாள்..

ஹா இதான் என் மகி..உன்கிட்ட எனக்கு பிடிச்சதே இந்த கம்பீரம் தான்..

போதும் போதும் ஐஸ் வச்சது போலாம்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்...

இருவரும் மேர்ரி ப்ரௌன் சென்று வேண்டியதை ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தனர்..சிறிது நேரம் மௌனமே பாஷையாய் இருந்தது..ராம் தான் ஆரம்பித்தான்..

ஐ அம் வெரி ஹாப்பி டு ஹவ் யு மகி,பட் என் லைவ்ல நா இப்படிலா நடந்துப்பேன்னு நினைச்சுகூட பாத்ததில்ல..ஜென்ட்ரலி நா ரொம்பவே காம் டைப் தான்..ஆனா நீ என்ன சுத்தமா மாத்திட்ட..உன்ன நா இனி பத்திரமா பாத்துப்பேன் மகி..எந்த ஒரு சூழ்நிலைலயும் நீ எடுத்த முடிவு தப்போநு உன்ன நினைக்க வச்சுட மாட்டேன்..

இதெல்லாம் நீங்க சொல்லவே வேண்டாம்..இப்போ என்னவிட நா உங்களை நம்புறேன்..இப்போ இருக்குற சந்தோஷம் நா உங்ககூட வாழ போற ஒரு ஒரு நொடியும் உங்களுக்கு கண்டிப்பா இருக்கும்..

அப்புறம்ங்க…………..

சொல்லு மகி…

உங்க வீட்ல இதுக்கு ஒத்துபாங்களா?

ம்ம்ம்,.எனக்கு உன் பயம் புரியுது மகி..கவலையே படாத..கண்டிப்பா க்ரீன் சிக்னல் காட்டிருவாங்க..நா கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா போதும்நு இருக்காங்க சோ நோ வொரீஸ்டா..

இருந்தாலும்…

குட்டிமா ஏதோ சொல்லனும்நு நெனைக்குற தயங்காம சொல்லு என்று ஊக்கினான்..

ராம் என் அம்மா கொஞ்சம் சென்ஸிடிவ்..இத எப்படி எடுத்துப்பாங்கநு தெரில..அவங்கள கன்வின்ஸ் பண்றதுக்கு டைம் எடுக்கலாம்,அதான் உங்க சைட்டாவது ப்ராப்ளம் இல்லாம இருக்குமாநு கேக்குறேன்..என்னவோ ரொம்ப பதட்டமாவே இருக்கு,

அவ்ளோதான..இப்போ என்ன எதாவது ஒரு சைட் ஸ்ட்ராங்கா இருந்தா நல்லாருக்கும்நு ப்வீல் பண்ற கரெக்ட்டா..சரி நா எங்க வீட்ல பேசுறேன்..பட் ஒரு ஒன் வீக் டைம் குடு..

ஏன்னென்று ஏறிட்டாள்..

ஒரு வாரமாவது நா உன்ன ப்ரீயா லவ் பண்ணிக்கிறேனே..வீட்ல சொன்னா உடனே ஸ்பை வேலைய ஆரம்பிச்சுடு வாங்க எங்க அம்மா..ப்ளீஸ்டா..

சிரித்துக் கொண்டே அழகாகத் தலையாட்டினாள்..

குட்..சரி இந்த வீக்கென்ட் வெளில எங்கயாவது மீட் பண்ணலாமா?டெய்லி ஆபீஸ்ல பாத்துட்டு இருந்தேன் நாளைல இருந்து அதுவும் முடியாது,வில் மிஸ் யு சோ மச் டீ பொண்டாட்டி..

ராம்…

சரி சரி நீ என்ன இப்படி வெக்கபடுற எதுக்கெடுத்தாலும்..இப்படியே பண்ணிட்டு இருந்த ரொம்ப நாள் தாக்குபிடிக்காது மா..தாலி கட்டி தூக்கிட்டு ஓடிருவேன்..

மீண்டும் மென்மையாய் சிரித்தவள்,போலாம் ங்க பட் டு த்ரீ அவர்ஸ்ல வந்துடனும்..எக்ஸாம்க்கு ப்ரிபேர் பண்ணனும்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.