போனை வைத்தவளுக்கு தலையே வெடித்துவிடும் போலிருந்தது..என்ன சுத்தி என்னதான் நடக்குது..யார் இப்போ பேசினது..ராம் ஏன் எதுவுமே சொல்ல மாட்ராரு..எதுக்குமே விடையில்லை..சரி இன்னும் ரெண்டு நாள்ல ராம் பர்த்டே வருது அத முடிச்சுட்டு அவர்ட்ட நேராவே கேட்க வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டாள்,..
ராமின் பிறந்தநாளும் வந்தது..இரவு 12 மணிக்கு அழைத்து வாழ்த்தினாள் மகி..
இனிய பிறந்ததநாள் வாழ்த்துக்கள் ராம்..
தங்ஸ்டா குட்டிமா..உன்னோட செலப்ரேட் பண்ற முதல் பர்த்டே..நெக்ஸ்ட் இயர் என் பொண்டாட்டியா நம்ம வீட்டுல என் பக்கத்துலயே இருப்ப..
ம்ம்ம்..நாளைக்கு மூவி புக் பண்ணிருக்கேன் ராம்..அண்ட் யுவர் பர்த்டே கிப்ட் வில் பி தேர்..
ஹே என்ன சொல்ற…எதுக்குடா அதெல்லாம் உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணாலே போதும் எனக்கு..
அதெல்லாம் முடியாது 2 மணிக்கு ஷோ சோ அதுக்கு ஏத்தமாறி ப்ளான் பண்ணிக்கோங்க…
சரிடா நாளைக்கு பாப்போம்…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
மறுநாள் அவளை அழைத்துச் செல்ல வந்தவன் கை கொள்ளா பைகளோடு நிற்பவளை கண்டு அதிர்ந்தான்…ஹே குட்டிமா என்னடா இதெல்லாம்?
ராம் ப்ளீஸ் என்ட்ட எதுவுமே கேக்காதீங்க,போகலாம் வண்டிய எடுங்க..
மறுப்பேதும் கூறாமல் தியேட்டரை அடைந்தான்..படம் ஆரம்பித்து 15 நிமிடங்கள் வரை மகி எதுவுமே பேசவில்லை..ராமே பேச வாய் திறந்த வேளையில்,ஒரு ஸ்கார்ப் கொண்டு அவன் கண்களை மூடினாள்..மகி என்ன பண்ற நீ,
பேச கூடாதுநு சொன்னேன் ராம்.,
5 நிமிடத்தில் கண் கட்டை அவிழ்த்தாள்..கண் திறந்தவனின் முன்னே இதய வடிவிலான கேக் அதன் மேலே “Happy birthday dear purusha” என்றிருந்தது அதுவும் அவனுக்கு பிடித்த பட்டர்ஸ்கார்ட்ச் ப்ளேவரில்…மகியை பார்த்தான் சர்ப்ரைஸ் நம்பர் 1…என்று அழகாக சிரித்தாள்..
மகி இத நா எதிர்பார்க்கவேயில்லை..சத்யமா இந்த பெர்த்டேவ என்னால மறக்கவே முடியாது,.லவ் யு சோ சோ சோ மச்டா..என்று அவளை தன்னோடு சாய்த்துக் கொண்டான்,.பின்பு இருவருமாக கேக்கை வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டனர்..அடுத்ததாக ஒரு கவரை நீட்டினாள்..அதனுள் ஒரு ஸ்லாம் புக் இருந்தது..அதில் அவர்களின் முதல் சந்திப்பு,முதல் உரையாடல்,முதல் ஸ்பரிசம் என அனைத்து முதல் நிகழ்வுகளையும் தேதியோடு கவிதை வடிவில் எழுதியிருந்தாள் மகி..படித்தவனுக்கோ கண்கள் கலங்கிவிட்டது..ராம் சாரி இத பாத்தா சந்தோஷப்படுவீங்கநு தான் குடுத்தேன்,கஷ்ட படுத்திருந்தா சாரி…அத குடுத்துடுங்க என்று வாங்க போனவளைத் தடுத்தான்,இது என் பொக்கிஷம்டா..கடைசிவர இது என்கிட்டதான் இருக்கும் இருக்கனும் என்றான் அழுத்தமாய்…அடுத்ததாக ஒரு துணிக்கடை கவரை நீட்டினாள்..அழகான் மரூன் வண்ண பட்டுசட்டை அவனது உடல்வாக்கு அழகாக இருக்கும்…
மகி இப்படி பாத்து பாத்து வாங்கிருக்கியே தங்க்ஸ் அ லாட் டா..இது மட்டும் பப்ளிக் பேலேஸா இல்லாம இருந்தது நடக்குறதே வேற என்றான் கண்களில் கொட்டிக்கிடந்த காதலோடு..
ராம்ம்ம்ம்ம்,……
படம் முடிந்து வெளியே வந்தவர்கள் சாப்பிடுவதற்காக அருகிலிருக்கும் ஹோட்டலுக்குச் சென்றனர்..வேண்டியதை ஆர்டர் செய்துவிட்டு ஏதோ பேச நினைத்தவர்கள் தயங்கினர்,பின் இருவரும் ஒரே நேரத்தில் உங்ககிட்ட(உன்ட்ட) ஒரு விஷயம் சொல்லனும்..ராம் சிரித்துக் கொண்டே நீயே சொல்லு மகி..ஒரு கணம் தயங்கியவள் பின்,ராம் ரெண்டு நாள் முன்னாடி எனக்கு ஒரு போன் கால் வந்துது..என அவன் கூறிய அனைத்தையும் கூறினாள்..கேட்டவனின் முகமோ கோபத்தின் உச்சியில் இருந்தது..மகியே ஒரு நொடி ஆடித்தான் போனாள்..
ராம்ம்ம்ம்.
என்ன மகி இத ஏன் உடனே சொல்லல..ஹவ் டேர் தே ஆர்..இத நா சும்மா விட மாட்டேன்..
அப்போ அது யாருநு உங்களுக்கு தெரியுமா ராம்…
ஒரு நீண்ட மூச்சிழுத்தவன்.,தெரியும் மகி..அது உனக்கான மிரட்டல் இல்ல உன்ன வச்சு எனக்கான மிரட்டல்…
ராம்ம்ம்ம்ம்.ம்ம்…
இத நீ சொல்லாம இருந்திருந்தாலும் இன்னைக்கு எல்லா உண்மையையும் உன்கிட்ட சொல்லிடனும்னு தான் வந்தேன் அதுக்கான நேரம் வந்துடுச்சு..
மகி இப்போ நா சொல்லபோறத உன்கிட்ட சொல்லனும்னு பல தடவை முயற்சி பண்ணிருக்கேன் பட் அதுக்கான டைம் அமையவேயில்லை..மத்தபடி உன்கிட்ட மறைக்கனும்னு நினைச்சதே கிடையாது..அதன்பின் அங்கு சில நிமிட மௌனம்..ராமே அதை கலைத்தான்..
மகி நா எந்த எம்.மென்.சி கம்பனிலையும் வேலை பாக்கல..இன்பாக்ட் நீ வரதுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் நா அங்க ஜாய்ன் பண்ணிருந்தேன்…பரணியும் அப்படிதான்…ஆனா டீம்ல யாருக்கும் அது தெரியாது வேற ப்ராஜெக்ட்ல இருந்து ட்ரான்ஸ்வர்ல வந்ததா நினைச்சுட்டு இருக்காங்க..நாங்களும் அப்படிதான் மெய்ன்டெய்ன் பண்ணிட்டு இருக்கோம்.. பட் எல்லாமே போலீஸ் டிப்பாட்மென்ட்டோட ஸிக்ரெக்ட்ஸ்க்காக தான்..
நா என்ன வேலை செய்றேன்னா…………
ஹாய் ப்ரெண்ட்ஸ் ட்விஸ்ட் நல்லாயிருக்கும்நு நம்புறேன்..ஹீரோ என்ன வேலை பாக்குறாரு…..மகி ஹீரோவ ஏத்துபாங்களா இல்லையாநு அடுத்த எபிஸோட்ல பாப்போம்…
தொடரும்
{kunena_discuss:952}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.