(Reading time: 8 - 16 minutes)

03. பைராகி - சகி

bhairagi

ந்த பூஜை அறையில் புதியதாக பிரதீஷ்ட்டை செய்யப்பட்டிருந்தது ஒரு சிவலிங்கம்.அமைதியான தொனியில் மூன்றடி உயரத்தில் கருங்கல்லால் செதுக்கப்பட்ட லிங்கம் அது!!கண்கள் மூடி சில நிமிடங்கள் இறைவனை மனதில் இருத்தி தியானித்தாள் யாத்ரா.

"உங்களுக்கு தெரியாதது எதுவுமில்லை.என் வாழ்க்கையே எப்படியோ இருந்தது.என் வாழ்க்கை மேலே எனக்கு நம்பிக்கை வர வைத்ததே என் ஆதித்யா தான்!!ஆனா,இப்போ அவருக்கே ஒரு பிரச்சனை!!அவருக்கு எதுவும் ஆக கூடாது.நீங்க தான் அவருக்கு ரக்ஷகனா இருக்கணும் மகேஷ்வரா!"-மனதின் வேண்டுதல் இதுவாகவே இருந்தது.

குவளையில் இருந்த பாலை சிவலிங்கத்தின் மேல் ஊற்றி அபிஷேகம் செய்தாள்.

நீருற்றி தூய்மைப் படுத்தினாள்.

மலர்களால் ஆராதனை செய்தாள்.கண்கள் மூடி இறைவனின் நாமத்தை இதயத்துள் உச்சரித்தாள்.

"ஏ...யாத்..!"-என்று கத்த வாயெடுத்தவனை கையமர்த்தி தடுத்தார் ஜானகி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

VJ Gயின் "என் மனதை தொட்டு போனவளே..." - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

குழம்பியப்படி தாயின் கண்கள் சென்ற திசையில் பார்த்தான்.சுருங்கி இருந்த விழிகள் விரிந்தன.

"ஐயோ!"-என்று தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்துக் கொண்டான்.

சில நிமிடங்களில் பூஜையை முடித்துக்கொண்டு வெளிப்பட்டாள் அவள்.எடுத்து வந்த திருநீற்றை அவன் நெற்றியில் அணிவித்தாள்.

"ஏ லூசு!என்ன இதெல்லாம்!"

"உஷ்!!அதுக்கான மரியாதையை கொடு!"

"மேடம்!நான் ஒரு விளையாட்டுக்கு தான் உன்னை இதெல்லாம் ட்ரை பண்ண சொன்னேன்!ஆனா நீ...உண்மையிலே பூஜை பண்ற?பக்தி முத்திடுத்தா மாமி?"-என்றான் கிண்டலாக!!

"ஆதி!நீ என்ன வேணும்னாலும் கிண்டல் பண்ணிக்கோ!உன் விஷயத்துல நான் எந்த ரிஸ்க்கும் எடுக்க தயாராக இல்லை!!"

"இது எல்லாம் எங்கே போய் முடிய போகுதோ!"

"எங்கேயும் போகாது!நீ பேசாம இரு!"

"எதுக்கு உன்னை வருத்திக்கிற?"

"நான் என்ன வருத்திருக்கிறேன்!"

"காலையில சூரிய உதயத்துக்கு முன்னாடி எழுந்து,சில்லுன்னு தண்ணியில குளித்து,சூரியனை வணங்கிட்டு,பூஜை முடியுற வரைக்கும் தண்ணீர் கூட குடிக்காம..பத்திய சாப்பாடு வேற எதுக்கு இதெல்லாம்??"

"ஆதி...ப்ளீஸ்!!இது என்னோட விருப்பம்!!என் விருப்பத்துக்கு இருக்க விடு!"

"நான் வேணாம்னு சொல்லலையே!"

"அப்போ ப்ளீஸ்...இனி இதை எல்லாம் தடுக்காதே!!"-அவன் பொறுமையிழந்து போய்,

"என்னமோ செய்!நான் ஆபிஸ் கிளம்புறேன்!"என்று கூறிவிட்டு நகர்ந்தான்.

மனித மனம் என்னதான் இறைவனை வந்தனை,வழிபாடு செய்தாலும் ஆற்றிய தர்மங்களுக்கான கர்மங்களை அனுபவிக்க வேண்டும் அல்லவா!!!

தவறுகள் பல இழைத்துவிட்டு இறைவனையும் சரணாகதி அடைந்தால்...சரணடைந்த பலனை நிச்சயம் இறைவன் தருவான்!!ஆனால்,தவறுகளின் பலனை யார் அனுபவிப்பது???எங்கும் நிறைந்துள்ள இறைவன்,அனைத்திற்கும் அதிபதியானவன் மனிதர்களின் அற்ப சமர்பணத்தால் விதியை மாற்றுவானா என்பதை அவனே அறிவான்!!!

விழிகளில் சிந்தனையை படரவிட்டிருந்தாள் யாத்ரா.

ஜோதிடரின் கூற்று மனதினை கவலையில் ஆழ்த்தியது.

மனதை எவ்வளவு முயற்சித்தும் மாற்ற இயலவில்லை.

திடீரென்று அவளை பின்னால் இருந்து யாரோ அணைக்க நெருப்பினை ஸ்பரிசித்தவள் போல விலகினாள்.

திடீரென்ற தன்னவளின் இந்த மாற்றத்தை புரிந்து கொள்ள முடியாதவன் கேள்வியோடு அவளை பார்த்தான்.

"ஏ..லூசு!என்னாச்சு உனக்கு?ஷாக் அடித்த மாதிரி விலகுற?"-பொறுமை இழந்தவன் கேட்டே விட்டான்.

".............."-அவள் கவலையோடு ஒரு பார்வை அவனை பார்த்தாள்.

"என்னாச்சு யாத்ரா?"-அவளது தோள்களை பற்றி உலுக்கினான்.திடீரென என்ன நினைத்தாளோ,அவன் நெஞ்சில் சாய்ந்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

"ஏ...என்னம்மா ஆச்சு?"

"பயமா இருக்கு ஆதி!"-அவளது கண்ணீர் அவனது இதயத்தை சுட்டது.

"போச்சுடா!!யாத்ரா நீ தேவையில்லாம பயப்படுற!"

"என்னால பயப்படாம இருக்க முடியலை ஆதி!"

"பைத்தியம் மாதிரி பேசாதே!அப்படியே என் உயிர் போக போதுன்னா,போற உயிரை நீ செய்யும் பூஜை எல்லாம் பிடித்து நிறுத்த போகுதா?"-அவள் அவனது வாயை பொத்தினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.