(Reading time: 8 - 16 minutes)

நாத்திகரும் ஒரு நொடியேனும் எண்ணுவர்.இப்போது இதை படிக்கும் தாமும் எண்ணுவீர்!!

அந்த நொடி இறைவனின் பிம்பத்த ஸ்பரித்த தாம் நிச்சயம் அதன் பலனை வெளிப்படையாகவே பெறுவீர்கள்.!!

"என்ன...என்ன சொல்ற நீ?"

"ஆமாங்க..அந்தம்மா ஊருக்கு வராங்களாம்!"

"ராகவனை வர சொல்லு!"-செந்தில்நாதன் என்னும் பெயர் கொண்ட அந்த பெரியவர்,கண்களில் ஏதோ சிந்தனையோடு தன் மகனுக்காக காத்திருந்தார்.

சில நொடிகளில் ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் முகத்தில் எப்போதும் இருக்கும் ரௌத்திரத்துடன் வந்தான் அவன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

"என்னப்பா?"

"ராகவா!அந்தக் கோட்டையோட சொந்தக்காரங்க நாளைக்கு ஊருக்கு வராங்களாம்!"

"வரட்டும்!"

"என்னடா சொல்ற?"

"எனக்கு பிடித்த பொருளை நான் அடைந்தே தீருவேன்பா!அதுக்காக எந்த பலியையும் வாங்குவேன்.எனக்கு அந்தக்கோட்டை வேணும்!!வரட்டும்! முடித்துவிடலாம்!"-தந்தையானவர் தனயனின் முகத்தை உற்று நோக்கினார்.அவன் பார்வையின் பொருள் உணர்ந்தவர் மௌனமானார்.

ன்றிரவு...

மிகுந்த கவலையில் ஆழ்ந்திருந்தார் யாத்ரா.

"ஏன் இவன் இப்படி செய்கிறான்!நான் என்ன செய்வேன்!"

"யாத்ரா!."-ஜானகியின் குரலில் கலைந்து கண்ணீரை துடைத்தாள்.

"மா!தூங்கலையா?"

"என்னாச்சு உனக்கு?எதுக்கு அழுற?"

"அதெல்லாம் இல்லைம்மா...!!தூசி விழுந்துடுச்சு!நீங்க வாங்க!"

"யாத்ரா...பொய் சொல்லாதே!என்னாச்சு?"

"................"

"அவன் எதாவது சொன்னானா?"

"அதெல்லாம் இல்லைம்மா..!"

"அப்பறம்?"

"நாளைக்கு என்னையும் ஊருக்கு வர சொல்றார்!"

"நானே கூப்பிட நினைத்தேன்!வா போகலாம்!"

"என்னம்மா?நான் வந்துட்டா பூஜையை யார் செய்வா?"-அப்போது தான் அதைக்குறித்து சிந்தித்தார் ஜானகி.

"ஒண்ணும் பிரச்சனை இல்லை...நாளைக்கு இங்கே பூஜையை முடித்துவிட்டு கிளம்புங்க!நான் 2 நாளில் இன்னொரு லிங்கத்தை அங்கே பிரதீஷ்ட்டை பண்ண சொல்றேன்!அதுவரைக்கும் கோவிலில் பூஜை பண்ணு!"

"............"

"பயப்படாம வாம்மா!!உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லாதாகவே அமையும்!"-ஜானகியின் ஆறுதல் மொழிகள் அவளை சிறிது சமாதானம் செய்திருக்கலாம்!அவள் சரி என்று தலையசைத்தாள்.

மனம் அமைதியடைய சில பொழுதுகள் அவளுக்கு அவசியமாயின..

அமைதியாக தென்றல் காற்றின் துணையோடு நின்றிருந்தாள்.

கண்கள் தன்னால் பனிக்க ஆரம்பித்தன.

அந்த பனிப்போடே ஆதித்யாவின் அறைக்கு சென்றாள்.

கேசம் எல்லாம் கலைந்து,தலைணையை அணைத்தப்படி,சிறு குழந்தையை போல உறங்கிக் கொண்டிருந்தான் அவன்.

மெல்ல அவனருகே சென்று அவனுக்கு போர்த்திவிட்டாள்.

அவளின் ஸ்பரிசத்தால் திரும்பியவன் அவளது கரத்தை இறுக்கமாக பிடித்தப்படி உறங்க ஆரம்பித்தான்.

மெல்ல குனிந்து அவனது நெற்றியில் முத்தமிட்டாள் யாத்ரா.

மெல்ல அவனது பிடியிலிருந்து தனது கரத்தினை விடுவித்தாள்.

இதமான மெல்லிய உறக்கம் அவனது பொழுதுகளை இனிமையாக நகர்த்த வழிவகுத்தது...

தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:969}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.