(Reading time: 18 - 36 minutes)

துக்கு நா ஒத்துப்பேன்னு எப்படி நினைச்ச ராம்..நா காதலுக்கு எதிரி கிடையாது,அதே நேரத்துல எந்த உறவுமே பொய்யை அடிப்படையா வச்சு தொடங்ககூடாதுநு நெனைக்குறவன்..எல்லாத்தையும் அவகிட்ட சொல்லு அதுக்கப்பறமும் அவ உன்ன ஏத்துக்க தயாரா இருந்தா அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணம்..இப்போ நீ போலாம்..

ஏனோ வழக்கத்தை விட கடுமை ஏறியிருந்தது அவர் குரலில்…அதன் நியாயத்தை உணர்ந்தவன் பதிலேதும் பேசாமல் எழுந்து போய்விட்டான்…

வெளியே வந்தவனை சமாதானப்படுத்தினார் ராஜி..அப்பா சொல்றதும் கரெக்ட் தானேடா நீ சொல்லிருக்கனும்ல..சரி விடு சரி பண்ணிடலாம்..மகி எங்க தங்கியிருக்கா  பாக்கலாமா?

ம்ம் இங்க பக்கத்துல தான்ம்மா..பட் இப்போவே பாக்கனுமா?நிலைமை கொஞ்சம் சரி ஆகட்டுமே..

அதெல்லாம் முடியாதுடா அது உன் பிரச்சனை என்னை அதுல சேர்க்காத..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

சரி..உன்ன பாத்தா அவளும் ரிலாக்ஸ்டா பீல் பண்ணுவா..ஈவ்னிங் போலாம்..

இப்போவே அவளுக்காக யோசிக்க ஆரம்பிச்சுட்ட ம்ம் பாத்துக்குறேன்டா..

மகியை போனில் அழைத்தவன் அருகிலிருக்கும் கோவிலுக்கு வருமாறு கூறினான்..அவளும் என்னவோ என்ற பதட்டத்தில் சரி என்று கூறிவிட்டு கிளம்பி சென்றாள்..சிறிய கோவில் என்பதால் உள்ளே நுழையும்போதே மகி அவர்களை பார்த்துவிட்டாள்..உருவ ஒற்றுமையை வைத்தே அது ராமின் தாய் என்பதை கண்டுகொண்டாள்..கோவில் வாசலில் சிறிது பூ வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள்..ராம் இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தான்..

வணக்கம்மா..-மகி

வா மகி..உக்காரு..-ராஜி

இந்தாங்கம்மா பூ..நீங்க வரதா தெரிஞ்சுருந்தா வேற எதாவது வாங்கிட்டு வந்துருப்பேன் இப்போ உள்ள வரும்போது தான் பாத்தேன் அதான் பூ மட்டும்..

பரவால்ல மகி..பூவுக்கு இணை எதுவுமே கிடையாது இதுவே போதும்டா,அப்புறம் காலம்பூரா என் கூடதான இருக்கப்போற எப்போ என்ன வேணுமோ வாங்கிகுடு என்று மறைமுகமாக தன் சம்மதத்தை தெரிவித்தார்..

அதை கேட்டவளின் கண்களிலோ ஆனந்த பளபளப்பு...அவளின் நிலை அறிந்தவர் கைகளை இதமாக அழுத்திப்பிடித்தார்..

இவை அனைத்தையும் பார்வையாளனாக மட்டுமே இருந்து ரசித்துக் கொண்டிருந்தான் ராம்..

டேய் இது கோவில்..சைட் அடிக்குறத நிறுத்திட்டு போய் அர்ச்சனைதட்டு வாங்கிட்டு வா-ராஜி

ராம் சிறிது தள்ளிச் சென்றபின் ராஜி மகியிடம்,ராம்மோட அப்பாக்கும் சம்மதம்தான்ம்மா ஆன ஒரு பொறுப்பான அதிகாரியா அப்பாவா அவர் சில விஷயங்களை எதிர்பார்கிறார்..எல்லாமே கூடிய சீக்கிரம் சரி ஆயீயிடும் டா..அதுவர ரெண்டு பேரும் பொறுமையா இருங்க…உங்களுக்கு பக்க பலமா நா இருக்கேன்..

மகிக்கு ஒன்றுமே புரியவில்லை..எதை பற்றி பேசுகிறார்கள்..அவரது அப்பா என்ன எதிர்பார்க்கிறார்?ராம் தான் அனைத்திற்கும் பதில் கூறவேண்டும்..அப்போதைக்கு சரி என்று தலையாட்டி வைத்தாள்…ராஜியிடம் பேசியது மனதிற்கு சற்று நிம்மதியியாக இருந்தது…சிறிது நேரம் பேசிவிட்டு மூவரும் கிளம்பத் தயாராகினர்…மகியின் எண்ணவோட்டத்தை ஊகித்தவர்,ராம் லேட் ஆயிட்டுச்சு பாரு நீ மகிய விட்டுட்டு வா நா வீட்டுக்கு கிளம்புறேன் என்று அவர்களுக்கு தனிமை குடுத்து விலகினார்…

ராம் மகியின் விடுதி வாயிலில் அவளை இறக்கிவிட்டு அவள் முகம் நோக்கினான்..

ராம் உங்க அம்மா ரொம்ப ஸ்வீட் ஹாப்பியா இருக்கு…பட் அப்பாவ பத்தி ஏதோ சொன்னாங்களே என்னாச்சு?

மகி உன் கேள்வி எல்லாத்துக்குமே கூடிய சீக்கிரம் பதில் சொல்றேன்..ஆனா எந்த ஒரு நிலைமைலையும் என்ன விட்டுட மாட்டல..ஐ நீட் யு பேட்லி குட்டிமா….என்று குழந்தையாய் அவள் கையை பிடித்துக் கொண்டான்..

மகிக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை.என்ன ராம் இப்படிலா பேசுறீங்க..என் வாழ்க்கையே நீங்க தான் உங்களை விட்டுட்டு நா எங்க போறது..ஐ லவ் யு மேட்லி ராம்…எதை கூறினால் சமாதானமடைவான் என்று புரிந்திருந்தாள்..

அதை போன்றே ராமின் முகத்தில் பரவசத்தின் சாயல்..

தங்ஸ்..தங்க் யு சோ மச் பொண்டாட்டி என்று வண்டியை கிளப்பிச் சென்றான்..

இவ்வாறாக நாட்கள் கரைய,மகியின் குழப்பங்கள் மட்டும் தீரவேயில்லை.,இருப்பினும் ராமிடம் அவள் எதுவுமே கேட்கவில்லை..அவனே கூறட்டும் என்று அமைதிகாத்தாள்..ராமிற்க்கோ அதுவே அவளின் மீதான காதலை அதிகப்படுத்தியது…இப்படி இருக்க மகிக்கு ஆபிஸிலிருக்கும் போது ஒரு அன்நோன் நம்பரிலிருந்து அழைப்பு வந்தது,

ஹலோ..

மகிஷா….

யெஸ் நீங்க யாரு பேசுறது?

அது உனக்குத் தேவையில்லை..சொல்றத மட்டும் கேளு,

மைண்ட் யுவர் வர்ட்ஸ் மிஸ்டர்..

ம்ம்ம் நீ உன் வேலைய மட்டும் பாத்தா நா ஏன்மா உன்ட்ட பேச போறேன்..ஊரு விட்டு வந்து வந்த வேலைய பாக்காம யார் கூடயோ சுத்திட்டு இருக்கியே நல்லாவா இருக்கு??

மிஸ்டர் இட்ஸ் நன் ஆப் யுவர் பிஸினஸ்…

உன் நல்லதுக்கு சொல்றேன் அவன விட்டு விலகிடு..இல்லநா பின்னாடி ரொம்ப வருத்தபடுவ..

ஹேய் தைரியமிருந்தா நேர்ல வந்து பேசு..போனை வைடா,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.