(Reading time: 20 - 40 minutes)

ம்ம்ம் இருக்காதா பின்ன தன்னோட ஹீரோயினுக்கு எவனோ லவ் லெட்டர் குடுத்தா வெறியாகாதா..

டேய் அண்ணா நீ அடங்கவே மாட்டியா நா என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன பேசுற..ஒரு ப்ரெண்டா கோவம் வராதா சும்மா நீங்க உடனே கதை கட்ட ஆரம்பிக்காதீங்க..

பேசுவம்மா பேசுவ..ஆமா அதென்ன சில நேரம் மரியாதையா பேசுற திடீர்நு டேய் அண்ணாங்கிற..

அதெல்லாம் அப்படிதான் எங்க அண்ணா நா எப்படி வேணா கூப்டுவேன் உங்களுக்கு என்ன?

வாயாடி தெரியாம கேட்டுட்டேன்..எப்படி வேணா கூப்பிடு,இப்போ போய் தூங்கு போ..

மறுநாள் வார விடுமுறை ஆதலால் பொறுமையாய் எழுந்தான் ராம்..மொபைலை எடுத்து பார்த்தவனுக்கு மகியிடமிருந்து குட்மார்னிங் மெசெஜ் வந்திருந்தது,முகத்தில் புன்முறுவல் தானாகவே தோன்றியது..குட் மார்னிங் மகி..இன்னைக்கு லீவ் தான சீக்கிரமே எழுந்தாச்சா?

ஐந்து நிமிடத்தில் பதில் வந்தது மகியிடமிருந்து..இல்ல ராம் இன்னைக்கு ஒரு வெட்டிங்க்கு போறேன் டீநகர்ல அதான் சீக்கிரம் எழுந்தாச்சு..அண்ட் மீனாட்சி மஹால் எங்க இருக்கு ரூட் சொல்ல முடியுமா..

அவளுக்கு தேவையான தகவலை மெசெஜ் அனுப்பியவனுக்கு சட்டென மூளையில் மின்னல் வெட்டியது,வேகவேகமாக குளித்துமுடித்து தன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான்..அங்கே திருமணத்தை முடித்துவிட்டு சிறிது நேரம் தோழிகளோடு அரட்டை அடித்துவிட்டு கிளம்ப தயாரானாள் மகி..வெளியில் வந்தவள் ஆட்டோவிற்காக காத்திருந்த போது,எதிர்புற சாலையில் சற்று தள்ளி இருவர் பேசி கொண்டிருந்தனர்..அதில் ஒருவன் பார்ப்பதற்கு ராம் போலவே இருந்தான்..ச்சச்ச இருக்காது காலைல மெசெஜ்ல கூட ஒன்னும் சொல்லலயே..இருப்பினும் அந்த இளைஞன் அவ்வப்போது லேசாக திரும்பி பேசும் போது அப்படியே ராம் போலவே இருந்தது..எதுக்கு இவ்ளோ குழப்பிக்கனும் கால் பண்ணி பேசினா தெரியப் போகுது என்று மொபைலில் அவனது எண்ணை அழுத்தினாள்..

ஹலோ ராம்..இப்போ எங்க இருக்கீங்க?

என்னாச்சு மகி..டீநகர்ல இருக்கேன்..என்ன விஷயம் சொல்லு...ஹே நீ கூட டீநகர் தான் வரநு சொன்னல மறந்தே போய்ட்டேன்,திடீர்நு ஒரு வேலையா ப்ரெண்ட் கூட வந்தேன்..சரி நீ எங்க இருக்க இப்போ?

உங்க பின்னாடிதான் நிக்குறேன் ராம்..

ஓ..சரி அங்கேயே இரு டூ மினிட்ஸ் நா வரேன்..

ராமிற்கு மனமெல்லாம் உற்சாகம்..இதற்காகத் தானே அவன் வந்தது..திடீர்னு அவ முன்னாடி போய் நின்னா அவ எப்படி பீல் பண்ணுவா..அவ ரியாக்ஷன் எப்படி இருக்கும்..இவ்வாறாக நினைத்து கொண்டு அங்கு வந்து சேர்ந்தவனுக்கு கடவுளாக பார்த்து அவன் நண்பனை அனுப்பி வைத்தார் போலிருந்தது..ஹப்பாடா இனி அவளுக்கு சந்தேகம் வராது என்று எண்ணியபடியே நண்பனை அனுப்பிவிட்டு திரும்பியவனுக்கு இதயம் ஒரு நொடி நின்று விடும் போல் இருந்தது..காரணம் எதிர்திசையில் நின்ற அவனின் அவள்..பேபி பிங்க் நிற பட்டு புடவையில் அன்று மலர்ந்த பூவாய் நின்றிருந்தாள் மகி..(அவ ரியாக்ஷன பாக்க வந்தவரு இப்போ ரியாக்ஷனே இல்லாம நிக்குறாரு ஹய்யோ ஹய்யோ..இதெல்லாம் தேவையா ராம் உங்களுக்கு..;);))

சாலையை கடந்து எப்படி வந்தான்,எப்படி வண்டியை பார்க் பண்ணிணான் எதுவுமே நினைவிலில்லை..அவனது பார்வை மகியிடமே இருந்தது..மகியுமே அவனது பார்வையின் வித்தியாசத்தை உணர்ந்து கொண்டாள்..அவளையும் மீறி கன்னங்கள் செம்மையுற்றன..இருக்குமிடத்தை நினைவில் கொண்டு மகி தான் முதலில் சுய நினைவுக்கு வந்தாள்..ஹாய் ராம்..

அவளது பேச்சில் மீண்டு வந்தவன்,ஹாய் மகி..என்ன சாரி எல்லாம்?குட்டி பொண்ணா இருப்ப..இதுல அடையாளமே தெரில,எனி ஹவ் யு ஆர் லுக்கிங் கார்ஜியஸ்..ரசனையோடு சொன்னான்.மகிக்கோ என்ன பேசுவதென்றே தெரியவில்லை..தட்டு தடுமாறி தங்ஸ் ராம் என்றாள்…அவசரமா கிளம்பனுமா மகி.?

அப்படிலா இல்ல ராம்..ஏன் என்னாச்சு?

அப்போ வாயேன் அந்த ஜீஸ் ஷாப் போய்ட்டு போலாம்..

அய்யயோ இப்படிநு தெரிஞ்சுருந்தா வேற எதாவது சொல்லிருப்பனே என்று தன்னைத்தானே குட்டிக் கொண்டிருந்தாள்..

பிடிக்கலனா வேண்டாம் மகி,மார்னிங் கிளம்பற அவசரத்துல சாப்டாம வந்துட்டேன்..,அதான் கம்பனி குடுக்குறதுக்கு கூப்ட்டேன்..

ச்சச்ச அதெல்லாம் ஒன்னுமில்லை ராம் வாங்க போலாம்..

இருவர் இருக்கையில் சென்று அமர்ந்தனர்..தங்களுக்கு வேண்டிய ஜீஸை ஆர்டர்  செய்துவிட்டு காத்திருந்தனர்..ராமின் பார்வை அவளை விட்டு நகரவில்லை..மகி அப்போதுதான் தன் கையில் எத்தனை விரல்கள் என்று குனிந்த தலை நிமிராமல் முமமுரமாக எண்ணிக் கொண்டிருந்தாள்.இப்படி ஒரு சீன்க்கு பக்ரௌண்ட் சாங் இல்லநா எப்படி...கடையின் டீவியில்  ராமிற்காகவே பாடலை தேர்ந்தெடுத்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.