(Reading time: 10 - 20 minutes)

ன்னை கொஞ்சம் பேச விடு”

“மீண்டும் நான் ஏமாறனுமா?”

“ நான் உன்னை எப்பவும் ஏமாற்றனும்னுநினைக்கல!”

“எந்த காலத்துல ?”என்றாள் அவள் விரக்தியாய்.

“இறந்தகாலத்துலயும் சரி,இந்த நிகழ் காலத்துலயும் சரி நம்ம எதிர் காலத்துலயும் சரி உன் மேல நான் வெச்ச காதல் மாறவேமாறாது தீபா..என் மரணம் மட்டும் தான் என்னை உன்னோடு பிரித்து எடுக்கும்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

தேன்மொழியின் "தேன்'ன் விசாரணை கோப்புகள்..." - chillzeeயின் இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் தோன்றும் துப்பறியும் நாவல்...

படிக்க தவறாதீர்கள்...

அவன் வார்த்தையில் நடுங்கித்தான் போனாள் அவள்..எனினும் சில நொடிகள் தான்.. அவன் முகத்தை பார்த்ததுமே, “இவன் என்னிடம் பொய் உரைத்து இருக்கின்றான்”என்று அவளே நினைவு படுத்திக் கொண்டாள்.

" போதும் சார் .. இந்த மாதிரி எத்தனை தடவை டைலாக் பேசி இருக்கீங்கன்னு உங்களுக்கே தெரியும் .. வீணா மறுபடியும் என்னை முட்டாள் ஆக்கலாம்னு முயற்சி பண்ண வேணாம் "

" என்னை காயபடுத்தனும்னு நினைச்சு வார்த்தையை கொட்டாதே தீபா ?"

" ப்ச்ச்ச் .. உங்ககிட்ட எனக்கென்ன பேச்சு .. உங்க அம்மாவை நான் பார்க்கணும் ,.. வழியை விடுங்க "

" முடியாது தீபா .. நான் சொல்ல வர்றதை கேட்டுட்டு எங்க வேணும்னாலும் போ "

" முடியாது " என்றவள் , நிற்காமல் அவனை விலகி நடக்க , அவனது  கையில் அவளின் துப்பட்டா சிக்கியது .. கண் இமைக்கும் நொடியில் , துப்பாட்டாவால் அவள் கைகளை காட்டி தன் அருகில் பலவந்தமாய் அமர வைத்தான் தீரஜ் .. அவள்  என்னத்தான் திமிரினாலும் அவன் பிடியிலிருந்து விடுவித்து கொள்ள முடியவில்லை ..

" ஒரு நிமிஷம் நான் சொல்லுறதை கேட்டுட்டு அப்பறமா போ தீப்தி .. எனக்கு உன்னை எப்படி பிடிச்சு வைக்கனும்னு தெரியல .. நீ என்ன விட்டு ஒரு அடி நகர்ந்து போனாலும் , என்னை விட்டு ஒரேடியா விலகுற மாதிரி  இருக்கு .. எப்படியும் நான் வேனானும்னு முடிவு பண்ணி இருப்ப , தூக்கு தண்டனை அனுபவிக்கிற கைதிக்கு கடைசி ஆசையை நிறைவேற்றுற மாதிரி , நான் பேசுறதை கேட்டுட்டு போயேன் " என்று கெஞ்சினான் அவன் .. முகத்தை வேறு பக்கமாய் திருப்பி கொண்டாள்  தீப்தி ..ஆனால் முன்போல் அவனிடம் இருந்து ஓட முயற்சிக்க வில்லை ..அதுவே சம்மதமாய் எடுத்து கொண்டு பேச ஆரம்பித்தான் அவன் ..

" எனக்கு உன்னை பார்த்ததுமே பிடிச்சது தீபா .. நீ அழகாய் இருக்கன்னு இல்ல .. அது இனக்கவர்ச்சி இல்ல .. உன்னை மாதிரி அழகான பொண்ணுங்களை பார்க்காமல் வளர்ந்தவன் இல்லை நான் " ஒவ்வொரு வார்த்தையாய்  அவளுக்கு புரியும்படி எடுத்து கூறினான் தீரஜ் பிராசாந்த்

" இது எதுவுமே இல்லாமல் , எனக்கும் உனக்கும் ஏதோ  உறவிருக்குன்னு நான் நம்பினேன் .. உன்னை பார்த்ததுமே நீ  எனக்கு மட்டுமே சொந்தமானவள்ன்னு எனக்கு தோனுச்சு "

" .."

" அதுனாலத்தான் நான் உன்கிட்ட பேச முயற்சி பண்ணினேன் .. உன்கிட்ட பேசின சில நிமிடங்களிலேயே உன்ன பத்தி என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது .. உன் ஒவ்வொரு பேச்சிலும் , வசதியான வாழ்கை உனக்கு எந்த அளவு காயத்தை கொடுத்திருக்குன்னு என்னால் உணர முடிந்தது ..அதனாலதான் நான் என்னுடைய அடையாளத்தை உனக்கு சொல்லல .. "

".."

"அதுக்கு பேரு , பொய் சொல்லுயாவது உன்னை அடையணும்னு எண்ணம் இல்லை .. உனக்காக எதை வேணும்னாலும் விட்டு கொடுத்துறலாம்ன்னு ஒரு எண்ணம் .. உன் சந்தோசம் முன்னாடி நான் பொய் சொன்னது எனக்கு பெருசா தெரியல "

" .."

" ஆனா , அதே நேரம் இதை கடைசிவரை சொல்லாமல் உன்கிட்ட மறைக்கணும்னு நான் நினைக்கவும் இல்லை .. நானே உன்கிட்ட உண்மைய சொல்லி இருப்பேன் .. "

" .."

" உன் சோகத்துக்கு காரணம் பணமோ , வசதியான வாழ்க்கையோ இல்லை தீபா .. உன் அப்பா !"

"தீரஜ் !!"

" ஒரு அப்பா பொண்ணுக்கு கொடுக்க வேண்டிய பாசத்தையும் சேர்த்து தான் நான் உனக்கு கொடுக்கணும்னு நினைச்சேன் .. "

" ..."

" நீ நினைக்கிறது தப்பு ..இதுதான் சரின்னு என் கருத்தை உன்மேல திணிக்க எனக்கு விருப்பம் இல்ல..அதுனாலத்தான் என் குடும்ப பின்னணியை பற்றி எதையும் சொல்லல .. ஆனா , அதுக்காக நான் உன்னை பொய்யாய் காதலிச்சேன்நு ஆகிடுமா தீபா ? என் பேச்சுல பொய் இருந்ததா ? உன்னால் எப்படி என் காதல் பொய்ன்னு நினைக்க முடியுது !"

" ..."

" கோபம் வரும் ..! அதுவும் என்னை நீ கண்ணை மூடிட்டு நம்பும்போது , நான் உண்மையை மறைச்சது பெரிய தப்பு ..ஆனா அதுக்காக என்னை விட்டு போயிடாதே தீபா "

" .."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.