(Reading time: 11 - 21 minutes)

15. புதிர் போடும் நெஞ்சம் - உஷா

புதிர் 15

Puthir podum nenjam

தைக் கேட்டதுமே புரிந்து விட்டது ஆர்யமனுக்கு!!!! தினேஷ் சொன்ன செய்தியின்  நதி மூலம் அஞ்சனா தான் என்று..

முந்தைய நாள் நிகழ்வை நினைவு கூர்ந்தவனாக...

‘கோக் பத்தி யார்கிட்டயும் சொல்லாதேன்னு சொல்லியும்.... இருந்தும் இருந்தும் அந்த லூசுகிட்ட போய் சொன்னேனே! என்னை சொல்லணும்!!!!!!!!!!!!!!!!’, என்று தன்னை நொந்து..

தனக்குள் உண்டான ஏமாற்றத்தையும்.. அதிர்ச்சியையும் வெளிக் காட்டாது சிறு நகையுடன்..

“ஏன் உங்களுக்கும் ஏதாவது தெரிஞ்சிக்கணும்ன்னு இருக்கா சுக்கு?”, என்று நேரடியாக விஷயத்திற்கு வர... இயல்பாக கேட்பது போல இருந்தாலும்.. அதை தொடுத்த விதம் சுகுமாரைத் தாக்கியது...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

அவன் மீதிருக்கும் அக்கறையில் பேச வந்தால் கடைசியில் நம்மை தவறாக நினைக்கிறாரே என்ற வருத்தம் உண்டாக..

“தப்பா நினைக்காதீங்க தல!”, என்று அவனாகவே அன்று நடந்ததை ஒப்பிவிக்க....

அதைக் கேட்க கேட்க.... இடம், பொருள் பாராது பேசி வைத்த அஞ்சனாவை எண்ணி உள்ளுக்குள் கனன்றான்... இருந்தாலும்.. இடம், பொருள் பாராது இவனும் அதை வெளிபடுத்தினால் என்ன ஆவது?  ஏதோ கதை கேட்பது போன்ற பாவனையில் அதை கேட்டுக் கொண்டவன்... சிரித்துக் கொண்டே,

“அடப்பாவமே... ஒரு நாள் ஸ்டெப்ஸ்ல வந்ததுக்கா.. இப்படி!!!!!!”, என்றவன்...

“என்ன சொல்ல!!!!! ஒரு பூ ஒரு தடவை  தான் பூக்கும் விஜய் ஆங்கிள்ல அஞ்சனா! பதினாறு வயதினிலே பரட்டை ஆங்கிள்ல சசி... இதைக் கேட்டவங்களை சொல்லவா வேணும்... ”

“அவங்க அவங்க விருப்பு வெறுப்புக்கு ஏத்த மாதிரி பார்வை வேறு படும்.. இதெல்லாம் நம்ம லைஃப்க்கோ, கேரியர்க்கோ பிரயோஜனப் படாத விஷயம்!!! அதை பத்தி கேர் பண்ணத் தேவையில்லை...”

கவனமாக.... அஞ்சனாவிடம் தான் பேசிய விஷயத்தை பற்றி சொல்லாமல் தவிர்த்தவன்.. தன் கீழே வேலை பார்ப்பவனுக்கு எதை சொன்னால் உபயோகப் படுமோ அதை மட்டும் விளக்கினான்..

மதிய நேரம் கிடைத்த சிறு இடைவேளையும் சுகுமாருடன் பேசுவதில் கழிந்து போக... இன்னும் நிறைய வேலைகள் இருந்தாலும்... அவனால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை!

இந்த இரண்டு வருடத்தில் அவன் பெற்றிருந்த பேரை..  வந்த இரண்டு நாளிலே கெடுத்து வைத்து விட்டாளே.. உள்ளம் கொதிக்க..

‘எங்கே இருக்கிறா அந்த லூசு!!!!’, தேடிப் போய் பளார் என்று அறைய  கைகள் பரபரக்க....

‘அவளை நெருங்காதே..’ அந்த நிமிடமும் ஆழ் மனம் எச்சரிக்கை மணி அடிக்க..... தனது அலைபேசியில் அழைத்தான் அவளை..

‘அவளை திட்டுற திட்டுல கதறி அழணும்’, என்று  தன் கோபத்தை தேக்கி வைத்து காத்திருக்க..

பலமுறை ரிங் சென்ற பின் தான் அழைப்பை எடுத்தாள்....

ஆனால்... பேசவில்லை அவள்! பேச ஆரம்பிக்கும் முன்னே அழுகையுடன் கூடிய கேவல் சத்தம்...

‘என்னடா இது!!!!! திட்ட ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அழுகுறா..’, கோபம் போய் குழப்பம் வர..

அவளோ, “ஆர்யாஆஆஆஆஆ”, என்று விசும்பலுடன் ஆரம்பித்தவள்...

“எங்க சிபி பைக் ஓட்டுறேன்னு விழுந்து அடி பட்டு ஃப்ராக்ச்ச்ர்.. ...”, என்று அழுது கொண்டே சொல்ல...

மறுமுனையில் இருந்தவனுக்கு என்ன சொல்லவென்றே தெரியவில்லை... அப்படியே சொல்ல நினைத்தாலும்.. அவள் அதற்கெல்லாம் இடம் கொடுப்பதாக தெரியவில்லை.. தொடர்ந்து பேசினாள்.. அழுது கொண்டே புலம்பினாள் எனலாம்..

“ப்ச்.. எல்லாம் என்னாலே தான்.. தாத்தாவுக்கு தெரியாம நான் தான் அவனை திருட்டுத்தனமா பைக் எடுக்க சொல்லி கொடுத்ததே!!! அதான் இப்படி ஆகிடுச்சு! பாவம் சிபி, இப்படி எல்லாம் நடக்கணும்னு நினைச்சு கூட பார்க்கலை!”

“அவனைப் பார்க்கணும் போல இருக்கு ஆர்யா!”, என்று அழுது கொண்டே சொல்ல...

ஊருக்கு வேணா போகச் சொல்லலாமா.. இந்த பொண்ணு இப்படி அழுகுதே என்று இவன் யோசிக்கும் பொழுதே...

“அதான் நான் கிளம்பிட்டேன்!”, என்று சொல்ல....

“கிளம்பிட்டியா?????”,

இத்தனையும்... தகவலாக தான் சொல்கிறாள் அனுமதி கோரவில்லை என்பதை அவன் புரிந்து கொள்வதற்குள்..

“ஆமாம்.. காருக்கு வந்துட்டேன்... ஒன் செகன்ட்”, என்று அவள் சொல்லி முடிக்க...

‘காருக்குன்னா... அப்ப பார்க்கிங் லாட்ல இருப்பா..... ரைட் சைட் கான்ஃபிரன்ஸ் ரூம் விண்டோ வழியா பார்க்கலாமே.. ’, ஏன் செய்கிறோம் என்ற யோசனையின்றி...வலது பக்கம் திரும்பினான்..

அலைபேசியை காதில் வைத்த வண்ணம்.. பார்க்கிங் லாட் பக்கமிருந்த அந்த கான்பிரன்ஸ் அறைக்குள் புயலென நுழைந்தான்... அங்கிருந்தவர்கள்... இவனைத் திகைத்துப் பார்க்க... ஜன்னல் அருகே சென்று... அதன் பிளைன்ட்சை விலக்கி விட்டு பார்த்தான்..

ஐந்தாவது தளத்திலிருந்து... கைக்குட்டையால் அழுது வழிந்த கண்களைத் துடைத்து விட்டு  காரில் ஏறிக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிய...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.