(Reading time: 11 - 21 minutes)

து எந்த மாதிரி உணர்ந்தான் என்று தெரியவில்லை..  அதைப் பார்க்கவே அஞ்சியவன் போல ஒரு கை அதி வேகத்தில் இயங்கி அந்த ப்ளைண்ட்ஸ்சை மூட....

“ஆர்யா...”, என்று அவள் சோர்வான அழைப்பு!!!  மற்றொரு கை  இன்னும் அந்த அலைபேசியைக் காதில் வைத்திருக்கிறதே!!! ஒரு வழி அடைத்தால்.. மறு வழியில் வருகிறாளே...

அவளைப் பார்க்கும் வரை அவள் அழுகையுடனான பேச்சு இவனை ஒன்றும் செய்யவில்லை தான்...... ஆனால், இப்பொழுது!!!!

எதில் இருந்து தப்பி வந்தானோ... அதிலே மறுபடியும் சிக்கி கொண்டது போல... இந்த அழைப்பு உடலின் மொத்த இயக்கத்தையும் ஸ்தம்பிக்க வைத்தது..

அந்த உணர்வை பிரதிபலித்தது அவன் பேயறைந்த முகம் - அதன் தடமாக...... வேர்வைத் துளிகள் முகத்தில் அரும்ப.......

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஜோஷினியின் "ஹேய்... சண்டக்காரா" - இது ஒரு காதல் சடுகுடு...

படிக்க தவறாதீர்கள்...

“நீங்க... அந்த கொலாஜ் வொர்க் பத்தி ஒர்ரி பண்ண வேண்டாம்... நான் என் குதிரைக்கு என்னோட பெஸ்ட் இஃபர்ட்  தான் போடுவேன்... வந்து மீதியை செய்து கொடுத்துடுறேன். ஓகே வா?”, என்று கேட்டதும் தான் தாமதம்....

அதுவரை இயந்திரம் போல இயங்கியவன் விழித்து...

‘நீ இங்க... இந்த கான்பிரன்ஸ் ரூம்ல.... அதுவும் அத்துமீறி நுழைஞ்சிட்டு... என்ன செய்துகிட்டு இருக்கே?’

என்று இப்பொழுது தான் உரைக்க....வேகமாக இணைப்பை துண்டித்தவனுக்கு முழு வீச்சில் மூளை வேலை செய்ய....

‘நல்ல வேளைக்கு இது உன் ப்ராஜெக்ட்  ஏரியாவா போச்சு‘,

சூழ்நிலையை உணர்ந்து அங்கிருப்பவர்களை பார்வையால் அளவிட...

அவர்களும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர். திடுதிப்பென்று அறைக்குள் நுழைந்திருக்கிறானே என்ன பிரச்சனை?’ என்ற கேள்வி அவர்கள் முகத்தில்!!!!

ஆர்யமன் தங்கள் பக்கம் பார்வையைத் திருப்பியதும்... அந்த நால்வர் குழு தலைவனான சஞ்சய் கேட்டே விட்டான்...

“எனி இஸ்யூ? ஆர்யமன்!!!”

தன்னையே புரிந்து கொள்ள முடியாமல், மனம் கேட்கும் கேள்வியை இவனும் கேட்க...

‘என்னவோ என் இஸ்யூவை சால்வ் பண்ணிடுற  மாதிரி கேட்கிறான்!!!’, என்று எரிச்சல் பல மடங்கானது  இவனுக்கு..

“What about your issue?”, சீற்றத்தை தனக்குள்ளே தேக்கி கேட்க.. தன் உடல் மொழி அந்த சஞ்சய்க்கு அச்சத்தை உண்டு செய்வதை கண்டதும்,

“I mean the issue in the data ingestion?”, சற்றே தணிந்த குரலில் கேட்டவனின் பார்வை அவன் மீது இருந்தாலும், கைகள் அங்கிருந்த ரோலிங் சேரை தன் வசம் இழுத்து அதில் அமர....

“அதை தான் டிஸ்கஸ் செய்றோம்”, என்ற சஞ்சய் பதிலில்...

“இரண்டு மணி நேரமாவா?”,

அவனின் துளைக்கும் பார்வையை எதிர் கொள்ள முடியாமல்.. பிரச்சனையை  கையாளத் தெரியாதவன் என்று தன்னை முத்திரை குத்தி விடுவானோ என்று அஞ்சிய சஞ்சய் தற்காப்பு முயற்சியாக,

“ஸாரி.. இந்த code அடிச்ச ஜாஸ்மின் திடீர்னு லீவ் ல போயிட்டாங்க.. ரீச் பண்ண முடியலை.. பட், அல்மோஸ்ட் க்ராக் பண்ணிட்டோம்.. வில் ஃபிக்ஸ்”

என்றான்... அவன் சொன்னதைக் கேட்டு... அவனை ஒரு நொடி உறுத்து பார்த்த  ஆர்யமனின் பார்வை அவன் மீது பதிந்தது சில மணித் துளியே..

“வெல்!!!!”, என்று இழுத்த படி, இப்போழுது சஞ்சய்யைத் தவிர்த்து மற்றவர்களை பொதுவாகப் பார்த்து...

“என்ன க்ராக் செய்து இருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?”

என்று கேட்க.. அந்த குழுவிலிருந்த ஒருவன் பதிலளிக்க... அதிலிருந்து அடுத்த கேள்வியைத் தொடுத்தான்..

இப்படியே கேள்விகளால் அவர்களை சிந்திக்க வைத்து.. தீர்வை நோக்கி வழி நடத்தி..  அதை செய்யவும் வைத்து விட்டு தான் அந்த இடத்தை விட்டு அகன்றான்.... இதற்கு அதிக நேரம் எடுக்கவில்லை அவனுக்கு...

அவன் சென்ற பின்னும், ‘இரண்டு மணி நேரம் போராடின பிரச்சனையை.. இவ்வளோ ஈசியா முடிக்க வைச்சிட்டார்...’, என்று மொத்த குழுவும் வியக்க... 

அதை அமோதித்தாலும், ‘எதுக்கு என்னை முறைச்சார்ன்னு தெரியலையே!!’,  என்று பயத்துடன் இருந்த சஞ்சய்யின் சேட் விண்டோவில்,

“Never Stand for you.. Stand for your team - this includes Jasmine too!!”

என்ற ஆர்யமனின் தகவல் மிளிர்ந்தது!

அலுவலக நேரம் முடிந்ததும்... ஆர்யமனுடன் வீட்டுக்கு செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்த தினேஷ், அவனைத் தேடி அவன் இடத்திற்கே வந்தான்.

அதுவரை கணினியில் கவனத்தை செலுத்தியிருந்த ஆர்யமன், தினேஷ் அங்கு வந்த பின்னர் தான் கிளம்பவே தயாரானான்.

“five min”, அவகாசம் வாங்கி மடமடவென்று தனது மடிக் கணினியை அணைத்து விட்டு பைக்குள் திணிக்க... அவனுடன் பேசிக் கொண்டிருந்த வாக்கில் தினேஷ்,

“ஆர்சி... மேரா ஈமெயில் தேக்னா?”, என்று கேட்க,

இப்பொழுது தான் பரணிதரன் சம்பந்தபட்ட ஈமெயில் நினைவுக்கு வந்தது ஆர்யமனுக்கு...

“அட.... அந்த கேண்டிடேட் ரெஸ்யூம்.... ப்ச்.... அதை அப்படியே விட்டுட்டேனே!!!! இரு இன்னைக்கு அந்த வேலையை முடிச்சிடலாம்”, என்று பைக்குள் வைத்த லேப்டாப்பை வெளியில் எடுக்க போக.. அவன் கையைப் பற்றி தடுத்த தினேஷ்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.