(Reading time: 14 - 28 minutes)

33. நினைத்தாலே  இனிக்கும்... - புவனேஸ்வரி 

ninaithale Inikkum

ழக்கம் போலவே பரபரப்பாய் சத்தமாய் இருந்தது அந்த ஹாஸ்பிட்டலின் கேண்டின்.. இங்கும் அங்குமாய் சிலர் அமர்ந்திருக்க,முகம் சுளித்து கொண்டே உள்ளே நுழைந்தான் கதிர். எப்போதும் அவன் இப்படி முகம் சுளிக்கும்போதெல்லாம் செல்லமாய் வம்புக்கு இழுப்பான் சந்துரு..

“ஏன் டா, டெய்லி அம்மா சமையலை தானே சாப்பிடுறோம்? ஏதாவது ஒரு நாள் கேண்டீன் சாப்பாடு சாப்பிட உனக்கு கசக்குதா ? காலேஜ்ல மட்டும் கேண்டீனே கதியாய் கிடந்தியே” என்று நக்கலாய் கேட்பான் சந்துரு..

“யாரு? நானு கேண்டீன்ல கதின்னு கிடந்தேனா? டேய் இந்த மாதிரி எல்லாம் அனுக்கிட்ட  போட்டு கொடுக்காதே டா ! அப்பறம் அவ சாமி ஆடுவா !”

“ ஹா ஹா கவலையே படாதே ..அதெல்லாம் என் தங்கச்சிக்கு ஏற்கனவே தெரியும்..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

வத்சலாவின் "காற்றினிலே வரும் கீதம்" - விறுவிறுப்பான குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“ஹாங்..என்னடா சொல்லுற ? “

“இல்ல மச்சான், அந்த வேலைக்கு நீ சரி வரமாட்டன்னு அனுக்கு நல்லாவே தெரியும்” என்று கூறி கதிரிடம் இருந்து தர்மடி வாங்குவது சந்துருவின் வழக்கம்.. இன்று அவன் இல்லாமல் சாப்பிடுவதற்கு அவனுக்கு என்னவோ போல இருந்தது,. அவன் மனநிலையை அறிந்து வயிரும் ஒத்துழைத்தது போலும்.. ஒரு கப் டீ மட்டும் ஆர்டர் செய்துவிட்டு வழக்கமாய் அமரும் இடத்தில் அமர்ந்தப்படி பகல் கனவு காண ஆரம்பித்தான் கதிர்.. ஒன்றுக்கு பதிலாய் மூன்று கப் டீ மேஜை மீது வைக்கப்படவும், கேள்வியாய் அவன் நிமிர அங்கு புன்னகையுடன் நின்றிருந்தனர் சுபத்ராவும் ப்ரேமும்..

“ ஹேய் வாங்கடா..எப்போ வந்திங்க ? இன்னைக்கு வர்றதா சொல்லவே இல்லையே!” என்று சந்தோஷத்துடன் ஆச்சர்ப்பட்டான்..

“ நாங்க வந்தது இருக்கட்டும், நீ என்னடா நாங்க வந்தது கூட உணராமல் கனவு கண்டுட்டு இருக்க ?” என்றான் ப்ரேம்..

“ உன் ஆளு அனுவோட நியாபகமா?”என்று கண் சிமிட்டினாள் சுபி.

“ ஹேய் உனக்கும் விஷயம் தெரியுமா?”

“ அடப்பாவி,இன்னுமாடா உங்க காதல் கதை ரகசியமாய் இருக்குன்னு நீங்க நினைச்சிட்டு இருக்கீங்க ? நீ ஹாஸ்ப்பிட்டலில் அட்மிட் ஆனப்போவே உங்க காதல் கதை எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு “ என்றான் ப்ரேம்.. வசீகரமாய் புன்னகைத்தான் கதிர்..காதலர்களுக்கே உரிய தேஜஸ் அவன் முகத்தில் தெரிந்தது..

“ ம்ம்ம் …” என்றவன் மீண்டும் யோசனையாய் இருக்க அடுத்த கேள்விக்கு தாவினாள் சுபத்ரா.

“சந்துரு எங்க கதிர் ? நீ மட்டும் தனியா இருக்கியே!”

“ அவன் அவனுடைய மாமாவோட ஊருக்கு போயிருக்கான்.. அவனை நினைச்சு தான் யோசிச்சிட்டு இருந்தேன்”

“ அவனுக்கு ஏதுடா மாமா ,ஊரு எல்லாம் ?” என்றான் ப்ரேம் சந்தேகமாய்.. அவனை பார்த்து மெலிதாய் புன்னகத்தபடி

“மச்சி , நாம சேர்ந்து இருந்தப்போ நடந்த விஷயங்கள் மட்டும் தானே உனக்கு தெரியும்? ஆனா அதைவிட நமக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்குடா “என்றான். சந்துருவிற்கு தெரியாமல் எதை பற்றியும் விவரமாய் பேச விரும்பவில்லை அவன்.. சுபத்ரா தான் லேசாய் முகம் வாடினாள்..

“ நான் வந்ததுமே சந்துருவை பார்க்கனும்னு நினைச்சேனே டா.. முடியாம போச்சு.. எப்போ வருவான் ?” என்றாள் சோகமாய்..

“ ஹேய் லூசு, அந்த மாதிரி எல்லாம் எதுக்கு ஃபீல் பண்ணுற?” என்றான் கதிர்..

“ சரி நீ எதுக்கு சோகமாய் யோசிச்சிட்டு இருக்க? அதை சொல்லு “ என்றான் ப்ரேம்.

“ அது ஒன்னும் இல்ல மச்சி.. எப்பவும் அவன் கூடவே இருந்துட்டு தனியா இருக்கவும் ஒரு மாதிரி இருக்கு.. இங்க நம்ம ஹாஸ்டல்ல தனியா இருக்கவே கடுப்பா இருக்கு” என்றான் கதிர்.. சுபி, ப்ரேம் இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு புன்னகைத்தனர்..

“ டேய் கதிர்,உனக்கு சிரமம் இல்லன்னா,நான் உங்கூட தங்கிக்கிறேன்” என்று ப்ரேம் கூறவும்,நன்றி கூற வந்தவன் கடைசி நிமிடத்தில் அவனுக்கு ஹை5 கொடுத்து சிரித்தான்..

“சரிடா, கொஞ்சம் வேலை இருக்கு…ரெண்டு பேரும் சாப்பிட்டு வாங்க..நான் அப்பறமா மீட் பண்ணுறேன்”என்று கதிர் கிளம்பினான்.. சுபியும் ப்ரேமும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.. இன்னமும் சுபத்ராவும் ப்ரேமும் மனம் விட்டு சமாதானமாய் பேசிக்கொள்ளவில்லை..அவனுக்கும் அவளை வற்புறுத்தி அவளின் நட்பினை திரும்பவும் பெற்றுவிடக்கூடாது என்ற எண்ணம் இருந்தது.. என்னத்தான் அவள் அன்று இருந்த மனநிலையில் தன்னுடன் சமாதானம் அடைந்து விட்டாலும் , அது தற்காலிகமானது என்ற உறுத்தல் அவனுக்குள் இருந்துகொண்டே இருந்தது.. அதுவே அவனை அவளிடம் இருந்து தள்ளி நிற்க வைத்தது .. சுபத்ரா அவன் முகத்தை பார்த்து பேச முயற்சித்து

"ப்ரே "என்று ஆரம்பிப்பதற்குள் எழுந்து கொண்டான் அவன் .. அவன் சட்டென எழுந்த விதத்தில் கேள்வியுடன் விழிகளை உருட்டி, "என்ன" என்றாள்  சுபத்ரா..

" போன் அடிக்கிது " என்று உகரி வைத்தான் பிரேம்..

"சத்தமே கேட்கல "

"இல்ல சைலண்ட் மோட்ல இருக்கு "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.