(Reading time: 14 - 28 minutes)

"ப்படியா எங்க காட்டு ?"

"அதுவந்து , போன் வரும் சுபி "

"அதுவரும்போது  வரட்டும்...கொஞ்சம் இப்படி உட்கார் ப்ளீஸ் "

" அது....."

"ஓவரா சீன் போடாமல் உட்காரு  பிரேம் " என்று அதட்டினாள்  அவள் ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

RRன் "மலரே ஒரு வார்த்தை பேசு.... இப்படிக்கு பூங்காற்று...!" - மனம் மயக்கும் மெல்லிய காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

சற்றுமுன் கதிர் அமர்ந்த அதே இடத்தில் அவளுக்கு எதிரில் அமர்ந்தான் பிரேம் ..

" உன்ன ரொம்ப கஷ்டபடுத்திட்டேனா பிரேம் ?"

" நடந்ததுக்கு நான்தானே காரணம் சுபி ?"

"அப்படின்னா நான் உன்னை தொல்லை பண்ணது தப்பிலன்னு சொல்லுறியா? " என்று குறும்பாய் கேட்டாள்  அவள் .. அவள் முகத்தை கூர்ந்து பார்த்தான் பிரேம்... நீண்ட நாட்களுக்கு பிறகு அவள் மகிழ்ச்சியாய் இருந்தாள் ..

அவள் இலகுவாய் தங்களுக்குள் இருக்கும் மனபாரத்தை சரிபடுத்த நினைக்கிறாள் என்பதை அவனால் உணர முடிந்தது..அவளுக்கு அந்த சிரமத்தை கொடுக்காமல் இயல்பாய் பேசத் தொடங்கினான் ப்ரேம்..

“அடிப்பாவி, ஆமான்னு சொன்னா,இன்னமும் தண்டனை கொடுப்ப போல”

“ ஹா ஹா…கண்டிப்பாடா..என்ன தப்பிச்சிறலாம்னு நினைச்சியா?”

“ப்ப்ப்ப்ப்பா நீ எவ்வளோ பெரிய ஆளு உங்கிட்ட போயி தப்பிக்க முடியுமா” என்றவன் சிலநொடி அமைதிக்கு பின்

“என் மேல நிறைய தப்பு இருக்கு சுபி..குணாவோட பலவீனத்தை நான் அப்படி மிஸ்யூஸ் பண்ணி இருக்ககூடாது..எவ்வளோ பெரிய முட்டாள்தனம்.. எங்கடா என்னை விட உனக்கு அவன் முக்கியமாய் போயிடுவானோன்னு நினைச்சு என்னென்னமோ பண்ணிட்டேன்.. விளயாட்டு வினை ஆகிடுச்சுல..” என்றான் அவன்.. அங்கு கணத்த மௌனம் நிலவியது..

“நடந்ததை நாம மாற்ற முடியாது ப்ரேம்..நானும் அவன்கிட்ட பொறுமையா பேசி இருக்கலாம்ல… எவ்வளவு பெரிய இழப்பு” என்றாள் சோகமாய்.. அவளின் சோகமான முகத்தை பார்க்க அவனுக்கு கஸ்டமாயிருந்தது..

“ சரி போதும் ஃபீல் பண்ணது” என்றான்.. அவனை வாஞ்சையுடன் பார்த்தாள் சுபி..” என் விஷயத்துல நீ திருந்தவே இல்ல ப்ரேம்..எனக்கு வந்தால் ரத்தம் ..உனக்கு வந்தா தக்காளி சட்டினியா?”

“ஹேய் இந்த சிட்டிவேஷனுக்கு ஏற்ற மாதிரி சினிமா டைலாக் பேசுறத நிறுத்தவே இல்லையா நீ?ஆளை விடும்மா… எனக்கு நிறைய வேலை இருக்கு” என்றவாரே அவன் ஓடினான்.. அவன் சென்ற வழியை பார்த்து சிரித்தாள் சுபத்ரா..

“ எல்லாம் சரியாச்சு .. சரியான மாதிரி இருக்கு..ஆனா,குணா….என்னை மன்னிச்சிரு குணா.. ஐமிஸ் யூ”என்று அவள் மனதிற்குள்கூற  சட்டென குளிர் காற்று அவளின் முகத்தை வருடிச் சென்றது..மனம் லேசாகிட,தனது வேலையை தொடங்கிட சென்றாள் அவளும்..

“மருதமலை மாமணியே முருகய்யா..

தேவரின் குலம் காக்கும் வேலைய்யா அய்யா” தூரத்தில் இருந்து நடந்து வந்த கவீன், ஜெனி, தீப்தி மூவரையும் பார்த்து கைகூப்பினான் செல்வம்.. அதைகவனித்த ஜெனி பற்களைக் கடித்தாள்.

“ இந்த செல்வம்,இன்னைக்கு தர்மடி வாங்க போறான் பாரு… எங்க போனாலும் இதே பாட்டைபாடி நம்மளயே கிண்டல் பண்ணுறான்” என்று அவள் கூற,

“சரி விடு ஜெனி.. இதெல்லாம் சகஜம் தானே “என்று சமாதானமாய் கூறியவள் சாத்சாத் நம்ம தீப்தியே தான்! அவளைபார்த்து கவீன் கேலியாய் சிரிக்க, கேல்வியுடன் பார்த்தாள்தீப்தி..

“என்னச்சு கவீன்”

“அம்மா தாயே, நீ மனசு மாறியதுல எங்களுக்கும் சந்தோஷம் தான் ..ஆனாஅதுக்காக இப்படியோ ஒரேடியாய் அஹிம்சாவாதியா ஆகிட்டா, எங்களுக்கே ஹார்ட் அட்டேக்வந்திடாதா? ஜெலோ சொல்றது உண்மைதான் .. இந்த குள்ளரிநரி கூட்டத்தை ஏதாச்சும் பண்ணனும்’ என்றதுமே ஜெனியும் தீப்தியும் சிரித்தனர்..

“ அந்த கூட்டதுக்கு தலயே நீதானே”என்று ஜெனி கூற சரியாய் அதே நேரம், அருண் “ வா தல” என்றான்.

“ என்ன மச்சி பாட்டெல்லாம் பட்டைய கெளப்புது?”

“அது சும்மா தான் தல.. நேற்று கனவுல முருகர் வந்தாரு.. ஏன்டா தினமும் சினிமா பாட்டாகவே பாடுறியே, எனக்காக ஒரு பக்தி பாமாலை பாடகூடாதான்னு கேட்டாரு..அதுக்காகத்தான் இந்த பாட்டு “ என்று அர்த்தம் கூறிட,

ஜெனி, “அதே முருகர்,இன்னைக்கு உனக்கு நேரம் சரியாய் இருக்காது பத்திரமாய் இருன்னு சொல்லலயா?”என்றாள்..

“அடடே இந்த மாதிரி வில்லங்கமான டைலாக்  எல்லாம் அனுவோட ஸ்க்ரிப்ட்லதானே இருக்கும் ஜெனி.. நீ ஒரு அமைதி பூங்காவாகச்சே” என்று நடிகர் திலகம் போலவே பேசிக் காட்டினான் அருண்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.