(Reading time: 14 - 28 minutes)

"ந்து .."

".."

"நந்தும்மா "

"ஆ ... ஆங் ...அப்பா ... என்னப்பா ?"

" என்னம்மா ?" கவலை நிறைந்த தந்தையின் முகத்தை பார்த்தவள் சட்டென சுதாரித்தாள் .. "என்னப்பா இத போயி பெரிய விஷயமாய் பேசிக்கிட்டு ..எனக்கு என்னமோ நீங்க தேவ இல்லாம கவலை படவதாய் தோணுது எனக்கு ..மாமாவை பத்தி எனக்கு தெரியும்..அவர் ரொம்ப நல்லவர் ..என்னத்தான் பழைய பகை கோபம் அது இதுன்னு இருந்தாலும் பிரபு அத்தான் மனசுக்கு பிடிக்காததை மாமா செய்ய மாட்டாரு ... அவர் நியாயவாதி ..தற்காலிக கோபத்திற்காக மொத்தமாய் தண்டனை கொடுக்க மாட்டார் .. அப்படியே அவர் சமாதானம் ஆகலன்னா  பிரபு அத்தான் பார்த்துப்பார்.. இது எல்லாத்தையும் மீறி எனக்கு கடவுள் மேல நம்பிக்கை ஜாஸ்தியாய் இருக்கு அப்பா ..எவ்வளவு நாள்தான் அவரும் நம்மள கஷ்டத்துல வெச்சே வேடிக்கை பார்ப்பார் ?அவருக்கும் போர் அடிக்கும்ல ? எல்லாம் மாறிடும் பாருங்க "என்று சிரித்தாள் ..அவளின் தெளிவான பேச்சு பாஸ்கரனுக்கு நிம்மதியை தந்தது ..மகளின் தலையில் ஆதரவாய் கை வைத்து " உன் மனசு போல நடக்கணும் நந்தும்மா" என்றார்.

" ஆனா ஒன்னு அப்பா "

" என்னம்மா "

" ஒருவேளை நடக்கறது எதுவும் நமக்கு சாதகமாய் இல்லன்னா ,என்னை வேற ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டிங்க தானே ?" என்றாள்  .. அவளின் கேள்வியில் அதிர்ந்து போனார் பாஸ்கரன் .. ஆனால் , அவளின் மனநிலையும் அவரால்  புரிந்து கொள்ள முடிந்தது ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

" உனக்கு விருப்பம் இல்லாத எதையும் நான் பண்ண மாட்டேன் நந்தும்மா" என்றார் அவர் ..

"தேங்க்ஸ் அப்பா "என்று அவரின் தோளில் சாய்ந்து கொண்டாள்  நந்து .

பாஸ்கரனின் மனம் நிறைந்திருந்தது.. தந்தைக்கு சந்தேகம் வராதப்படி சிரித்த முகத்துடன் வளம் வந்தவளின் மனதில் புயல் அடித்தது...

"அப்பா சொல்வது உண்மைன்னா, சந்துரு அத்தான் அதுனாலத்தான் என்கிட்ட பேசலையா ? மாமாவின் பேச்சை கேட்டு என்னை வேணாம்னு முடிவெடுத்து விட்டாங்களா ?"  ..

அதே நேரம் காரில் அமர்ந்திருந்த சந்துருவும் இதேதான் சிந்தித்தான் ..தனது தந்தையின் மனதில் ஏற்பட்டிருந்த  மனக்கசப்பை அவனால் உணர முடிந்தது .. ஆனால் , அதற்காக, நந்துவை விட்டுத் தருவதா ?நந்து மட்டும் இல்லை பாஸ்கரன் மாமாவின் மீதும் பெரிதாய் தவறொன்றும் இல்லையே ! எதோ ஒரு வேகத்தில் தந்தாயிடம் வசனங்களை அள்ளி வீசினான் .. ஆனால் நந்திதா இல்லாமல் அவனால் இருக்க முடியுமா ?

" அப்போ நாம சேர்த்து பேணிக்காத்த அன்பும் பொய்யா ? என் அத்தான் எனக்கில்லையா? நாங்க சேர முடியாதா ?" இதயத்தில் ப பாரம் கூடியது அவளுக்கு ..

" இப்படி முடியும் என்னால் ? என் நந்துவை நான் விட்டுத்தரவே மாட்டேன் "

" எனைத்தான் அன்பே  மறந்தாயோ ?

மறப்பேன் என்றே நிலைத்தாயோ ?

சுந்தரி கண்ணால் ஒரு சேதி

சொல்லடி இந்நாள் நல்ல தேதி " காரில் இருந்த ரேடியோவில் இருந்து பாடல் கேட்டது ..நந்திதா சந்துருவின் கண்முன் நின்றாள் .. அதேபோல அதே பாடலைத்தான் அவளும் கேட்டு கொண்டு இருந்தாள் ...

" நான் உன்னை நீங்க மாட்டேன் ..நீங்கினால் தூங்க மாட்டேன் .. சேர்ந்ததே நம் ஜீவனே !"

சேருமா ? நம் உறவு சேருமா ?  விதியிடம் கேள்வி கேட்டாள் .. இக்கட்தான சூழ்நிலைகளில் பெண்ணை விட , ஆணின் மூளை சற்று வேகமாய் சிந்திக்கிறது.. இதோ இங்கேயும் இருவருமே சோகத்தில் இருக்க சந்துருவிற்கு இதற்கு முன் நந்திதாவுடன் ஊருக்கு வந்தது நினைவில் நின்றது .. அன்று அவனும் அவளும் நடந்து போகையில் அனைவரும்  அவர்களை பார்த்த விதத்தில் லேசாய் சிரமப்பட்ட சந்துரு "ஏன் எல்லாம் இப்படி பார்கிறாங்க ?": என்று கேட்டதற்கு  நந்திதா சொன்ன பதில் நினைவுக்கு வந்தது ..

"இது கிராமம் .. உங்க பட்டினம் மாதிரி அடுத்தவங்களுக்கு என்ன நடக்குதுன்னு கண்டுக்காமல் விட மாட்டாங்க "என்று அவள் சொன்னது நினைவில் வர  , வெற்றி புன்னகையை உதிர்த்தான் சந்துரு ..

" நாம சேரனும்ன்னு, நானோ ,மாமாவோ ,இல்ல அம்மாவோ சொன்னாதானே தப்பு ? ஊரு சொல்லட்டும் ! சொல்ல வைக்கிறேன் " என்று சிரித்தான் ..

" என் அத்தைமவ ரத்தினமே ரெடியா இரு டீ நான் வந்துகிட்டே இருக்கேன் " என்று அவன் சிரித்தான்.

சோ, கிராமத்து கலாட்டாவோடு அடுத்த எபிசொட்ல சந்திப்போம் ..

ஹாய்  பிரண்ட்ஸ் .. இந்த நந்து பொண்ணு என்ன மாயம் பண்ணிச்சு தெரியல ,போன  அத்தியாயம் படிச்சு நிறைய பேரு  நந்துவை அழ வைக்காதேன்னு கெஞ்சி கேட்டும் ,சிலர் மிரட்டியும் இருக்காங்க ..அதனால கதையை நம்ம ஸ்டைலில்  ஜாலியாய் கொண்டு போகலாம்னு இருக்கேன் ..சோ இனிமேலும் எனக்கு கொலை மிரட்டல் வராதுன்னு நம்பறேன் .. நன்றி 

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 32

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 34

நினைவுகள் தொடரும்...

Buvaneswari is continuing the story from where it was let off... Appreciate your comments but no comparisons between the three writers please...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.