(Reading time: 9 - 18 minutes)

ஜானகி அதிர்ச்சியின் உச்சதிற்கே சென்றுவிட்டார்.

தன் பக்தையின் அன்பிற்காக வேதங்கள் கூறும் கைலாயம் விட்டு வையகம் வந்தது அந்த தெய்வீகம்!!

கலங்கி நின்றவளின் கண்ணீர் துடைக்க நிலம் உதித்தார் பரமேஷ்வன்!!!

நிகழ்வதை காண்கையில் திகைத்து போய் சிலையானான் ஆதித்யா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

வழக்கமான வழிபாடுகளை தொடர்ந்தாள் யாத்ரா.

"உண்மையிலே நான் செய்த புண்ணியங்கள் தான் உன்னை எனக்கு மகனாகவும்,யாத்ரா மருமகளாகவும் பிறக்க வைத்திருக்கு!"-இமைகள் அசையாமல் கூறினார் ஜானகி.

காதல் எவ்வளவு மகத்துவமானது??தனது துணையின் நலனுக்காக எவ்வித சமாதானத்தையும் ஏற்காமல் நற்பணியாற்றும் காதல் தான்..எவ்வளவு மகத்துவமானது!!

"யாத்ரா!"

"ம்?"

"ஐ...ஐ ஆம் ஸாரிம்மா!"-திடீரென்று அவன் வேண்டிய மன்னிப்பின் காரணம் விளங்காமல் நின்றாள் அவள்.

"எதுக்கு?"

"நான் உன் வேண்டுதலை விளையாட்டா நினைத்துவிட்டேன்!"-ஆறுதலாக அவன் கன்னத்தை தீண்டியவள்,

"நம்ம காதல் என்ன விளையாட்டா?"-என்ற வினாவை அவன் முன் வைத்தாள்.

அவன் காதலோடு ஒரு பார்வை அவளை பார்த்தான்.

"போய் தூங்கு!நீ எதிர்ப்பார்க்கிறது எல்லாம் இப்போ கிடைக்காது!"

"நான் என்ன எதிர்ப்பார்த்தேன்னு உனக்கு எப்படி தெரியும்?"

"இதோ இந்த கண் இருக்குப்பார்!இந்த திருட்டு முழி சொன்னது!"

"அப்படியா..என்ன சொல்லுச்சு?"

"அது.."-என்று ஆரம்பித்தவள் நாணத்தால் தலை குனிந்து நின்றாள்.

ஒரு புன்னகையோடு அவன் தொடர்ந்தான்.

"இது திருட்டு முழின்னா,என் கண்ணு என்ன திருடியது?"

சில நொடிகள் மௌனம் காத்தவள் கூறினாள்.

"என்னை!"-என்ற ஒற்றை வார்த்தையை பல கேள்விகளுக்கு பதில்களாய்!!

றுநாள் காலை....

வழக்கறிஞர் ஒருவரோடு உரையாடி கொண்டிருந்தான் ஆதித்யா.

"ஸாரி சார்!!என்னால இதை கொடுக்க முடியாது!"

"நாங்க எவ்வளவு பணம் வேணும்னாலும் தரோம்!"

"சார்!எவனோ ஒருத்தனை அவமதிக்கிறதா நினைத்து உங்களை அவமானப்படுத்த விரும்பலை!என்னால இதை தர முடியாது!என்ன பண்ணனுமோ பண்ணிக்கோங்க!"-அவன் கண்கள் சிவக்க ஆரம்பித்தன.

"சரி சார்!நான் வரேன்!"-என்று விடைப்பெற்றார் அவர்.

முக இறுக்கத்தோடு இருப்பவனை கண்டவள் அவனருகே வந்தாள்.

"ஆதி!"

"ம்.."

"டென்ஷனா இருக்கியா?"

"இல்லை...சிரித்து கொண்டிருக்கிறேன்!"

"டென்ஷனா இல்லைன்னா வெளியே போகலாமான்னு கேட்க வந்தேன்!"

"நான் வரலை.."

"சரி...உன் கூட கொஞ்ச நேரம் தனியா இருக்க நினைத்தேன்!பரவாயில்லை..."-என்று அவள் நகர,அவன் அவசரமாக அவளை தடுத்தான்.

"போகலாம்!ரொம்ப எல்லாம் டென்ஷனா இல்லை!"-ஒரு புன்னகை பூத்தவள்,

"பரவாயில்லை...நீ டென்ஷனா இரு!நான் தனியா போறேன்!"

"தெரியாத ஊரில் தனியாகவா?வேண்டாம்...நான் வரேன்!போயிட்டு வந்து அப்பறம் டென்ஷனாகிக்கிறேன்!"-இருவரும் ஜானகியிடம் கூறிவிட்டு இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.

எவ்வளவு தூரம் நடந்தார்களோ அவ்வளவு தூரமும் மௌனமே அவர்களுடன் வந்தது!!

இருவருக்கும் அதை கலைக்கும் துணிவு வரவில்லை.

நடந்தப்படி இருந்தவன் என்ன நினைத்தானோ...திடீரென்று அவள் கரத்தோடு தன் கரத்தை பிணைத்து கொண்டான்.

அவனது கரம் தன்னோடு பிணைந்தவுடன் சிலிர்த்து போய் தன் பயணத்தை நிறுத்தினாள் யாத்ரா.அந்த உணர்வு இருவருக்குள்ளும் கண்ணாமூச்சி ஆடியது.ஏதோ பல யுகங்களாய் காத்திருந்த தேடல் கை வந்த உணர்வு இருவருக்கும்!!!

இதயம் வேகமாக துடிக்க ஆரம்பிக்க செயல் இழந்து போனாள் யாத்ரா.கண்கள் தன்னிச்சையாக கசிந்துருக...நாடி நரம்பெல்லாம் அவனது காதலே ஓடி கொண்டிருந்தது.

"ஏ..என்னாச்சு?"-மென்மையாக ஒலித்தது அவனது குரல்.

சற்றும் சிந்திக்கவில்லை அவள்,உடனடியாக அவனது நெஞ்சத்தில் தஞ்சம் புகுந்து மனதை கரையவிட்டாள்.

இதுவரை அவள் இவ்வாறு தன் உணர்வுகளை வெளிப்படுத்தியதில்லை.பின்,பைரவக்கோட்டை மண்ணானது அவர்களின் ஜென்ம பந்தத்தினை அறிவுறுத்த தொடங்கியதா????

தெரியவில்லை...

தொடரும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:969}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.