" நீங்களும் சாப்பிடுங்க அப்பா " என்றான் புகழ் .. மற்றவர்கள் முன்னிலையில் தனது கோபத்தை மறைக்க பெரும்பாடு பட்டார் மோகன் .. பற்களை கடித்து கொண்டு அவர் பார்த்த பார்வை அவனுக்கு "என்னிடம் பேசாதே " என்ற வாசகத்தை கூறியது ..இருப்பினும் புகழ் விட்டு கொடுப்பதாய் இல்லை ..
" ப்ளிஸ் அப்பா ,சாப்பிடுங்க .. யாழினிக்கு தான் ஒன்னும் இல்லன்னு தமிழ் சொல்றான்ல ?"
" எப்போ கிளம்புற ?"
"அப்பா ??!!"
"உன்னத்தான் கேட்குறேன் புகழ் .. எப்போ கிளம்ப போற நீ ?" தனது கோபத்தை நேரடியாகவே வெளிப்படுத்தினார் மோகன் ..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மனோஹரியின் "காதல் பின்னது உலகு" - கல்யாணமாம் கல்யாணம்…
படிக்க தவறாதீர்கள்...
"அப்பா"
"தயவு செஞ்சு அப்படி கூப்பிடாதே .. அந்த உரிமை உனக்கில்ல .."
".."
"உன்ன என் பையனாய் தான் நினைச்சேன் .. ஆனா நீ ??".. தலை குனிந்தான் புகழ் .. என்ன சொல்லுவான் அவன் ? எப்படி தன்னிலை விளக்கம் தருவான் ?தவறு அவன் மீதுதான் என்று அவனுக்கே தெரியும் .. மன்னிப்பு கிடைக்காது என்று தெரிந்தும் அவன் மன்னிப்பு கேட்கத்தான் வேண்டும் .. ஆனால் மோகனிடம் அல்ல, யாழினியிடம் ..
" மன்னிக்க முடியாது தமிழ் "
" அவன் பண்ணது அவ்வளவு பெரிய தப்பில்லை யாழினி "
" ஆனா, தப்பு பண்ணது அவன் !!! யாரு என்ன பண்ணி இருந்தாலும் மன்னிப்பேன் .. ஆனா என் புகழ் தப்பு பண்ணான் .. அதை எப்படி மன்னிக்க சொல்லுற ?" ..
" என் புகழ் " அந்த இரு வார்த்தைகளை உச்சரிக்கும்போதே அவளின் ஆத்திரம் கண்ணீராய் மாறியது ..
"ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் ஹே அழுமூஞ்சி "
".."
"அடியே பொறந்த நாள் அதுவுமா ஏன்டீ அழற ?எல்லாரும் என்னைத்தான் திட்டுவாங்க "
" ப்ச்ச்ச் உன்ன யாரு திட்ட போறாங்க ?"
(அஹெம் அஹெம் கதையை படிக்கிற நாங்கத்தான் !!)
" உன் எம்டன் அப்பா மட்டும் நீ அழறதை பார்த்தா,என்னை வீட்டை விட்டே துரத்திடுவார் ..அப்பறம் நானும் தெய்வம் தந்த வீடு வீதி இருக்குன்னு பாடனும் "என்று அவன் சோகமாய் சொல்லவும் கலகலவென சிரித்தாள் யாழினி .. அவனையே இமைக்காமல் பார்த்தாள் அவள் ..
"என்ன டீ ?"
"நீ மாறிட்ட தமிழ் "
"என்ன சொல்லுற ?"
" ஒரு காலத்துல சிரிக்கிறதுக்கே காசு கேட்ப நீ !! இப்போ என்னடான்னா , என்னையே சிரிக்க வைக்கிறியா?"
"ஆனா நீ மாறவே இல்ல ..அப்பவும் அழுமூஞ்சி இப்பவும் அழுமூஞ்சி .."
"வெளில போடா எரும மாடு ... எப்போ பார்த்தாலும் என்னை சீண்டிகிட்டே இருக்க .. எனக்கு தூக்கம் வருது ..வெளில போ "
" ஹே இதென்ன போங்கு ? எப்பவும் நான்தானே உன்னை தூங்க வைப்பேன் ?"
" அதெல்லாம் இன்னைக்கு ஒன்னும் வேணாம் .. என்னை அழ வெச்சதுக்கு உனக்கு பனிஷ்மெண்ட் .."
" அப்படி எல்லாம் போக முடியாது .."
"டேய் இம்சை , வீட்டுக்கு விருந்தாளிய கூட்டிட்டு வந்தியே அவனை கவனிக்கலையா நீ ?" என்று மறைமுகமாய் அவன் மீது இருக்கும் அக்கறையை காட்டினாள் யாழினி .. அவன் மீது தனக்கு இருக்கும் அக்கறையை இன்னும் அவளால் உணர முடியவில்லை என்றுத்தான் கூற வேண்டும் .. அவளின் குரலில் எரிச்சலும் முகத்தில் வெறுப்பும் இருந்தாலும் வார்த்தைகள் அதை பிரதிபாலிக்காமல் அவளை காட்டிக் கொடுத்தன.. அதை கவனித்தாலும் தெரியாதது போல் இருந்தான் தமிழ் ..மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏற வேண்டாம் என்று நினைத்தவன் அவளின் அக்கறையை கோடிட்டு காட்டாமல் பதில் அளித்தான் ..
"புகழ் ஒன்னும் விருந்தாளி இல்லையே ! அவன் ரூம் கீ அவன்கிட்டயே இருக்காம் ..!"
" பக்கத்து ரூமா ?"
"ஆமா ..ஏன் ?"
"வேணாம் .. அந்த ரூம் வேணாம் .. அவனை கெஸ்ட் ரூமில் தங்க வை .."
"ஏன் டீ ?"
"ஐயோ விளக்கம் சொல்ல நேரம் இல்லை ..நீ போ தமிழ் .. சீக்கிரம் போ "என்று அவனை விரட்டினாள் யாழினி ..
அந்த அறைக்குள் என்னத்தான் இருக்கு ?யோசித்தபடி நடந்தான் தமிழ் ..
"இம்சை கொஞ்சம் ஆடி அசையாமல் ஓடி போ " என்று யாழினி கத்தவும்
"போறேன் டீ குரங்கே !!" என்று ஓடினான் தமிழ் ..
அந்த அறை !!!! மூன்று வருடங்களாய் பூட்டித்தான் இருந்தது ..கடைசியாய் அங்கு என்ன நடந்தது என்று அவளுக்கும் புகழுக்கும் மட்டுமே தெரியும் ..தமிழுக்கு கூடத் தெரியாது..அவளின் தந்தைக்கும் தான் !!
ஏதோ ஒரு பாரம் அவள் இதயத்தை அழுத்த,அதே பாரத்துடன் அறைக் கதவை திறந்தான் புகழும் ..அவன் காலில் தட்டுபட்டன அந்த காகிதங்கள் ..தூசி படிந்த அறையினால் தும்மியபடி உள்ளே நுழைந்தவன் அந்தஅறையை பார்த்து வாயடைத்து போனான் .. மூன்று வருடங்கள் அவன் போட்டு வைத்த பொருட்கள் எல்லாம் அங்கங்கு அப்படியே இருந்தது .. கடைசியாய் அவனும் யாழினியும் பேசிக்கொண்டது நினைவில் வந்தது ..அப்படியே குனிந்து காகிதத்தை எடுத்தான்..அது திருமண அழைப்பிதழ் ..அதன் மீது படிந்திருந்த தூசியை துடைத்தான் ..
"" தமிழ் வெட்ஸ் யாழினி ""
தொடரும்
{kunena_discuss:994}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.