(Reading time: 13 - 25 minutes)

ரி. .நீங்க குளிச்சிட்டு வாங்க.. நான் டிபன் எடுத்து வைக்கிறேன் “ என்றாள்.

“ஹ்ம்ம். வேற என்ன செய்ய.. ? சரி நீ போ.. நீ உள்ளே வந்து இவ்ளோ நேரம் ஆச்சேன்னு எல்லோரும் கதவையே பார்த்துட்டு இருப்பாங்க” என்றவன், அவள் கன்னத்தில் முத்தமிட்டு இறுக்கி அணைத்து விடுவித்தான்.

அவனுக்கு தேவையானதை எடுத்து வைத்து விட்டு வந்தாள். ஆதியும் குளித்து விட்டு வந்தவன், சாப்பிட அமர்ந்தான்.

அவனுக்கு பிடித்த பூரி, கிழங்கு மற்றும் தோசை சட்னி சாம்பார் செய்து வைத்தாள். ஒரு டிபன் தான் செய்ய எண்ணியிருந்தாள். ஆதி ஒன்றரை வருடம் கழித்து வீட்டு சாப்பாடு சாப்பிடுகிறான்.. இன்றைக்கு வேறு ஊருக்கு கிளம்புவதால், போகும் இடங்களில் எப்படி இருக்குமோ, அதனால் இரண்டு விதமாக செய்திருந்தாள்.

அவன் மற்ற எல்லோரையும் விசாரித்து விட்டு, சாப்பிட அமர்ந்தான். பிரயுவிடம் “பிரயு, நீ சாபிட்டயா” என்று கேட்க,

“இல்ல.. நீங்க சாப்பிட்டவுடன் நான் சாப்பிடுறேன்”

மத்த எல்லோரும் சாபிட்டச்சுல்லே.. நீயும் நானும் தானே .. வா சேர்ந்து சாப்பிடுவோம்

ப்ரயு கண்களால் மற்றவர்களை காண்பித்து , அவனிடம் ப்ளீஸ் என்று  வாயசைத்தாள்.

அவன் அவளை முறைத்து விட்டு சாப்பிட ஆரம்பித்தான். அவன் அம்மா அருகில் வந்து,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஆதித்யா சரணின் "சிவன்யா" - புத்தம் புது தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“ஆதி, உன்கிட்ட ஒன்னு பேசணுமே “

“என்னம்மா.. ?”

“இல்லை.. வித்யா வீட்டு விசேஷம் முடிஞ்சு நாம நேர நம்ம சொந்த ஊருக்கு போயிட்டு வரலாம்நு யோசிக்கிறேன்.”

“என்னமா தீடிரென்று?”

“இல்லபா.. உன் கல்யாணம் முடிந்து குலதெய்வம் கோவிலுக்கு நாம் போகவே இல்லை. அதோட... உங்க பெரியப்பா பொண்ணு கல்யாணம் வேற இந்த வெள்ளி கிழமை வச்சிருக்காங்க.. ரெண்டும் அட்டென்ட் பண்ணிட்டு வரலாம்.. நம்ம வீட்டு ரெண்டு கல்யாணத்துக்கும் அங்கேருந்து எல்லோருமே வந்தாங்க. நீ இப்போ வரலைனா நான் மட்டும் போட்டு வரலாம்னு இருந்தேன்.. ‘

என்னமா .. இந்த வார கடைசிலே ரெண்டு நாள் ஆபீஸ் வேலை வச்சிருக்கேன். நீங்க இப்படி சொல்றீங்களே.. நான் அடுத்த தடவை வரும்போது பார்க்கலாமே..

இல்ல ஆதி.. நீ இந்த லீவ் முடிஞ்சு கிளம்பினா திரும்பி வர மறுபடியும் ஒரு வருஷமாவது ஆகும். ஏற்கனவே உங்க கல்யாணம் முடிஞ்சு ஒன்றைரை வருஷம் ஆகுது. ரொம்ப நாள் ஆக்க வேண்டாம்பா..

ஆதியின் மனதில் எரிச்சல் ஏற்பட்டது. அவன் பிளான் படி வியாழன் கிழமை திரும்பி வந்து விட்டால் வியாழன், வெள்ளி ஆபீஸ் வேலை பார்த்து விடலாம்., தேவைபட்டால் சனி கிழமையும் இருந்து ஆபீஸ் வேலை முடித்து விட்டு ஞாயிறு அன்று பிரயுவை அழைத்துக் கொண்டு மூனாறு சென்று விடலாம் என்று எண்ணியிருந்தான்.

அவன் அன்னையிடம் மறுத்து பார்த்தான். சுற்றி சொந்தங்கள் அதிலும் வித்யா வீட்டு உறவினர்கள் எனும்போது, ஒரு கட்டத்திற்கு மேல் அழுத்த முடியவில்லை. சரி போகலாம் என்று தலையாட்டி விட்டான்.

எரிச்சலாக உள்ளே செல்ல எண்ணியவன், பிரயுவின் பெற்றோர் வரவே நின்றான்,

அவர்கள் அவனிடம் “மாப்பிள்ளை.. நல்லா இருக்கீங்களா? “ என்றார்கள்.

அவர்களிடம் நலம் விசாரித்தவன், ப்ரயு தங்கை கல்யாணத்தின்போது வர முடியாத கதை எல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பிரயுவும் சாப்பிட்டு வந்தவள், அவர்களுக்கு குடிக்க கொடுத்து விட்டு ஆதியின் அருகில் நின்று அவர்களோடு பேசிக் கொண்டிருந்தாள் ப்ரயு.

சற்று நேரத்தில் அவர்கள் ,

“சரி .. மாப்பிள்ளை நாங்கள் கிளம்புகிறோம். “ என, அவன் அவர்களை திகைத்து பார்த்தான்.

“ப்ரயு, அத்தை, மாமா நம்மோட வரலையா?” என்று வினவினான்.

“இல்லை ..மாப்பிள்ளை.. எனக்கு லீவ் போட முடியாத நேரம்.. அதான்.. “

“ஏன் மாமா.. இந்த function பத்திதான் முன்னாடியே சொல்லிருப்பாங்களே “ என்ற படி வித்யா மற்றும் தன் தாயை பார்க்க, இருவரும் முழித்தனர்.

வித்யா கணவர், “இல்ல மச்சான்.. அது வந்து இது காது குத்தி மொட்டை அடிக்கிற function தானே.. முதல் பிறந்த நாள் அன்னிக்கு பர்த்டே பார்ட்டி மாதிரி குடுக்கலாம்னு இருக்கோம். அதனால் ரொம்ப நெருங்கிய சொந்தகாரங்க மட்டும்தான் கூப்பிட்டு இருக்கோம் “ என, வீட்டு மாப்பிள்ளை அவரிடம் என்ன பேச என்று விட்டு விட்டான்.

பின் மீண்டும் தன் அம்மாவிடம் திரும்பியவன் அவரை தன்னோடு தங்கள் அறைக்கு அழைத்து சென்றான். பிரயுவையும் கண்ணால் அழைத்தான்.

உள்ளே சென்றவன்,

“அம்மா, என்ன இது..? ப்ரயு அப்பா, அம்மாவை கூப்பிடாமல் விட்டு இருக்கீங்க?”

“இல்லபா.. அது வந்து வித்யா வீட்டு விசேஷத்துக்கு அவங்கதானே கூப்பிடனும்னு விட்டுட்டேன்.

ஏன்.. அத நீங்க சொல்ல வேண்டியது தானே?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.