(Reading time: 13 - 25 minutes)

வர் ஒன்றும் பேசாமல் இருக்கவும், பிரயுவை முறைத்தவன்,

“உனக்கு தெரியாதா அவங்கள கூப்பிடலன்னு”

“தெரியும்”

“அப்ப எங்கிட்ட முன்னாடியே ஏன் சொல்லல? இவனால் என்ன பண்ண முடியும்னு நினச்சுட்ட இல்ல?” இதை சொல்லும்போது அவன் மனதில் ஏற்பட்ட வலி வார்த்தைகளாக வந்தது.

“அப்படியெல்லாம் இல்லபா.. நானுமே.. இங்க பார்ட்டி இருக்குன்னா அதுக்கு கூப்பிடுவாங்க ன்னு விட்டுட்டேன்”

சரி.. நாம குலதெய்வம் கோவிலுக்கு போறோமே அதுக்காவது கூப்பிட்டீங்களா?

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

அது .. நாம் வித்யா மாப்ளை வீட்டோடு போறோம்.. அவங்க கிட்ட திடீர்னு இவங்களும் வராங்கன்னு எப்படி சொல்லன்னு விட்டுட்டேன்..

ஏன்மா.. நீங்கதானா இது ? ப்ரயு என் மனைவிம்மா.. வித்யா சம்பந்தபட்டதுக்கு அவங்கள காரணம் சொல்லிட்டீங்க. இப்போ என் சம்பந்தப்பட்ட விஷயத்துக்கும் அவங்ககிட்ட சொல்லலைன்ன நல்லாவா இருக்கு.. ப்ரயு அப்பா, அம்மாவும் உங்களுக்கு சம்பந்தி தானே.. நீங்களே அவங்கள மதிக்கலன்னா, எப்படி வித்யா வீட்டுலே மதிப்பாங்க.. ? வர வர நீங்க பண்றது எதுவுமே எனக்கு பிடிக்கல “ என்று கூறி விட்டு வெளியில் வந்தான்.

அவன் மாமனாரிடம் வந்தவன், “மாமா, சாரி.. ஏதோ தப்பு நடந்து போச்சு.. அம்மா திடீர் பிளானா எங்க குலதெய்வம் கோவிலுக்கு போகணும் சொல்றாங்க.. நாங்க அங்க ஊருக்கு வியாழக் கிழமை போய்டுவோம் .. நீங்களும் நேரா அங்க  வாங்க.. “

மாப்பிள்ள.. இதுலே என்ன இருக்கு? அவங்க மனசுலே என்ன தோணிச்சோ.. உங்கள கூட்டிட்டு போகணும் ன்னு நினைக்கிறாங்க.. தீடிர்னு எனக்கு இப்போ லீவ் எடுக்க முடியாது... அதனாலே நீங்க அடுத்த தடவை போகும்போது உங்களோட வரோம்...இத பெரிசா எடுத்துக்காதீங்க..”

“அப்புறம் நீங்க ஊருக்கு கிளம்பற முன்னாடி ஒரு தடவை நம்ம வீட்டுக்கு வந்துட்டு போங்க மாப்பிள்ளை..”

“கண்டிப்பா மாமா.. உங்கள மட்டுமில்லை, என் சகலை எல்லோரையும் நேரில் பார்க்கணும் . கண்டிப்பா வரேன்... “

அவன் சொல்லவும், பிரயுவின் அப்பா எல்லோரிடமும் விடை பெற்று சென்றார்.

ஹால் இருந்தவர்களிடம் ஊருக்கு செல்ல வேண்டியதை எடுத்து வைக்க போவதாக சொல்லி விட்டு சென்றான்.

அவன் உள்ளே போகவும், பிரயுவும் உள்ளே வந்தாள்.

அவள் மேல் உள்ள கோபத்தில் எதுவும் பேசாமல் தன்னுடைய பெட்டியை எடுக்க சென்றான்.

அவனை தடுத்தவள், “நான் எல்லாம் எடுத்து வச்சுட்டேன்.. நீங்க ஒரு வாட்டி பாருங்க..” என்று பெட்டியை திறந்து வைத்தாள்.

அவன் பதில் ஒன்றும் சொல்லாமல் இருக்கவும்,

“என் மேல் கோபமா ? “ என்று அவள் அழு குரலில் கேட்கவும் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

அவளின் கலக்கமான முகத்தை பார்த்தவன், “சாரி டா.. ப்ரயு.. என்னால் உனக்கு நிறைய விஷயங்களில் சரியான நியாயம் செய்ய முடியவில்லை.. இது போல் என் கவனத்துக்கு வருவதை நான் சரி செய்யலாம்.. நான் அங்கே இருக்கும் போது நீ சொன்னால் தானே தெரியும் “

“இல்ல.. ஆதிப்பா.. உங்கள் வருத்தத்தை பகிர்ந்து கொள்ள கூட யாருமில்லாமல் தனியாக இருக்கும் உங்களுக்கு இதை போன்ற விஷயங்கள் தெரிந்தால், உங்கள் நிம்மதி போய் விடும்.. நீங்கள் நிம்மதியாக இருந்தால் தான் என் சந்தோஷம்” என அவன் அவளை இறுக்கி அணைத்தான்.

அவன் மனைவியை எண்ணி பெருமைபட்டவன், இதே போன்ற விஷயங்கள் அவளையும் கஷ்டபடுத்தும், தன்னிடமும் சொல்லாத நிலையில் அவள் இதை எல்லாம் யாரிடம் பகிர்ந்து கொண்டு, தன் மனபாரத்தை இறக்கி கொள்கிறாள் என்று எண்ண மறந்துவிட்டான்.

வித்யா மாமனார் ஊர் போய் சேர, பத்து மணி நேரம் ஆகும் என்பதால், மதியமே கிளம்பி விட எண்ணியிருந்தனர்.. இரவு உணவிற்கு அவர்கள் கிராமத்திற்கு சென்று விட வேண்டும் என்று ஏற்பாடு. சரியான நேரத்துக்கு வேன் வந்துவிட, எல்லோரும் கிளம்பினர்.

வித்யா வீட்டில் பிடித்து இருந்தது இருபது பேர் செல்லக் கூடிய டெம்போ traveller டைப் வேன் தான்.. அதில் ஒரு குடும்பம் வர முடியாத நிலை ஏற்பட்டதால், கடைசி நாலு சீட் காலியாக இருந்தது.

ஆதிக்கு ஜெட்லாக் .. இருந்ததால் அவன் வேனில் தூங்க எண்ணினான்... அதனால் கடைசி சீட்டுக்கு சென்று விட்டான்.. ப்ரயு அதற்கு முந்தின சீட்டில் அமர்ந்து கொண்டாள்.

ஆதி அங்கே சென்று வேன் கிளம்பிய சற்று நேரத்தில் தூங்கியே விட்டான்.. செங்கல்பட்டு தாண்டியவுடன் சற்று நேரத்தில் ஒரு ஹோட்டலில் நிறுத்தி எல்லோரும் சாப்பாடு சாப்பிட சென்றனர்.

ப்ரயு ஆதியை எழுப்ப, அவனோ அசைய வில்லை. எல்லோரும் இறங்கி விட, அவன் தனியாக இருப்பதை பார்த்த ப்ரயு தான் வேனிலே இருப்பதாகவும், தங்கள் இருவருக்கும் தயிர் சாதம் மட்டும் போதும் என்று கூறினாள்.

ஆதி தூங்குவதால், வண்டி ஏசியை அணைக்காமல் சென்றிருந்தார் டிரைவர். அதனால் வண்டி பூட்டிருக்க, விண்டோ அனைத்தும் வெயிலுக்காக கர்டைன் போட்டிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.