(Reading time: 13 - 25 minutes)

 

ண்ணை திறந்த ஆதி, சிரித்தபடி பிரயுவை தன்னருகில் இழுத்தவன், அவள் இதழ்களில் முத்தமிட்டான்.

“ஹேய்.. ஆதிப்பா.. என்ன நீங்க தூங்கலையா?”

“தூங்கிட்டேந்தான்... நீ எழுப்பின உடனே எழுந்துட்டேன்.. “

“அப்புறம் ஏன் சாப்பிட போகல?”

“அதுவாடி முக்கியம்... ? நான் இங்கே வந்தும் உன்கிட்ட உட்கார்ந்து பேசக் கூட முடியாத படி... நிலைமை.. சரி கிடைச்ச டைம்லே.. உன்னோட romance பண்ணலாமே..ன்னு நடிச்சேன்.. “

ப்ரயு அழகு காட்டவும் , அவளை கொஞ்ச நேரம் சீண்டினான்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

“ரதிம்மா , நான் இந்த வாட்டி வேற பிளான் போட்டேன்... அது நடக்கும்போது உனக்கே தெரியும்.. இவங்க, நம்ம ஊருக்கெல்லாம் போனா, தனியா பேசக் கூட முடியுமான்னு தெரியல... பார்க்கலாம் “ மூனார் செல்வதை மனதில் வைத்துக் கூறினான்..

எல்லோரும் வரவும், ப்ரயு பழைய படி தன் இடத்துக்கு போக,

ஆதி அப்போத்தான் முழிப்பது போல், எல்லோரையும் பார்த்து விட்டு , தன் மச்சான் கையில் பார்சல்கள் இருப்பதை பார்த்தான்.

“மச்சான்.. எனக்காக நிக்க வேண்டாம்.. ப்ரயுவும் நானும் அப்படியே வண்டி மூவிங்லேயே சாப்பிட்டுக்கிறோம்.” என்று கூறி அவளை தன் அருகில் வர வைத்தான்.

இருவரும் சாப்பிட்டு முடித்ததும், பிரயுவிடம்

“ப்ரயு .. எனக்கு தலை வலிக்குது .. அப்படியே பிடிச்சு விடு.. “ என்று படுத்து தூங்க ஆரம்பித்தான்.

இடையில் காபி மற்றும் இயற்கை தேவைகளுக்காக நிறுத்தியதை தவிர , வேறு எங்கும் நிற்காமல் சென்றதால், அவர்கள் எதிர்பார்த்ததை விட சற்று முன்னரே சென்று விட்டனர்.

அங்கே சென்ற பின் , பிரயுவும் பெண்களோடு சேர்ந்து அமர்ந்து எல்லாவற்றையும் எடுத்து போட்டு செய்தாள். ஆதியும் மற்ற ஆண்களோடு அமர்ந்து அரட்டையும், மற்ற வேலைகளுமாக இருந்தான்.

நல்லபடியாக மறுநாள் காலை குழந்தைக்கு மொட்டை போட்டு விட்டு, ஆதி மடியில் வைத்து காது குத்தப்பட்டது.

ஆதி தாய் மாமனாக செய்யும் சீரோடு, வெளிநாட்டில் இருந்து குழந்தைக்கு வாங்கி வந்த டிரஸ், பொம்மை எல்லாம் அங்கே வைத்துக் பிரயுவோடு சேர்ந்து கொடுத்தான்.

ஊருக்கும், உறவுக்கும் விருந்து பரிமாற பட்டது. அங்கே எல்லாம் contract முறை கிடையாது .. எல்லாமே உறவுக்காரர்கள் சேர்ந்து ஆளுக்கு ஒன்றாக செய்தனர்.

அன்று இரவு அலுப்பில் அங்கேயே தங்கி விட்டு, மறுநாள் ஆதியின் சொந்த ஊர்க்கு சென்றனர்.

தொடரும்

Episode # 17

Episode # 19

{kunena_discuss:948}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.