(Reading time: 12 - 24 minutes)

19. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி

Anbe Undhan Sanjaarame

தியின் தங்கை வித்யா குழந்தைகள் காதணி விழா முடிந்த மறுநாள், எல்லோரும் ஆதியின் சொந்த ஊருக்கு கிளம்பினர். முதலில் வித்யா கணவர் வழி உறவினர்கள் எல்லோருமே வருவதாக இருக்க, கடைசி நேரத்தில் அவர்கள் ப்ரோக்ராம் கான்செல் செய்து விட்டனர்.

வித்யா கணவர், மாமனார், மாமியார், ப்ரயு , ஆதி, அவன் அம்மா அவர்கள் மட்டுமே சென்றனர். நிறைய பேர் வரவில்லை என்றதும், ஆதியின் யோசனைப்படி உறவினர்கள் எல்லோரையும் அவர்கள் வந்த வண்டியில் சென்னைக்கு அனுப்பி விட்டு, இவர்களுக்கு மட்டும் என, ஒரு xylo புக் செய்து சென்றார்கள்.

வரும்போது போல் இப்போ ஆதியும் , பிரயுவும் அருகில் கூட அமர முடியவில்லை.. வித்யாவிற்கு வசதியாக அவள் கணவரும், மாமனாரும் நடு சீட்டில் அமர, ஆதி அம்மாவும், வித்யா மாமியாரும் பிரயுவின் அருகில் அமர, ஆதி டிரைவர் பக்கத்துக்கு சீட்டிற்கு சென்று விட்டான்.

இவர்கள் ஊரும் கிட்டத்தட்ட்ட ஏழு மணி நேர பயணத்தில் இருந்தது. காலை டிபன் முடிந்துதான் கிளம்பியதால், மதியம் சாப்பாட்டிற்கு வழியில் நிறுத்தி, சின்ன குழந்தை இருப்பதால் அதன் தேவையை பார்த்து, இவர்கள் சென்று சேர மாலை ஆகி விட்டது.

ஊரில் ஆதியின் அப்பாவிற்கு சொந்தமான இடத்தில் மூன்று வீடுகள் சேர்ந்தார் போல் கட்டி வாடைகைக்கு விட்டு இருந்தார்கள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மனோஹரியின் "காதல் பின்னது உலகு" - கல்யாணமாம் கல்யாணம்…

படிக்க தவறாதீர்கள்...

மீதி இடத்தில் சின்னதாக ஒரு வீடு, இவர்கள் வந்தால், போனால் தங்குவதற்கு என்று இருந்தது. அதில் ஒரு ஹால், ஒரு ரூம், மற்றும் கிச்சன் .. இருந்தது. பாத்ரூம், toilet தனியாக இருந்தது.

இவர்கள் பெரியப்பா வீடு, கல்யாண வீடு என்பதால் இவர்களுக்கு சமையல் வேலை எல்லாம் இல்லை. ஆனால் வந்த அலுப்பு தீர , ரெப்ரெஷ் செய்து விட்டு , எல்லோருமே கல்யாண வீட்டிற்கு சென்று விட்டனர்,

அதன்பின் நேரம் வேகமாக கழிய, எல்லோருமே வேலையில் ஆழ்ந்து விட்டனர். ஆதி அதிகமாக இங்கே வந்திரா விட்டாலும், உறவுகளில் எல்லோருக்கும் அவனை நன்றாக தெரிந்திருந்தது. அதனால் எல்லோருடும் பேசுவது, எடுத்து போட்டு வேலைகள் செய்வது என சரியாக இருந்தது,

மறுநாள் காலையில் எல்லோரும் குளித்து விட்டு, கோவிலுக்கு சென்று பூஜைகள் முடித்தனர். இவர்கள் பூஜையோடு கல்யாண பெண்ணிற்கான விசேஷ வேண்டுதல்களும் சேர, இதுவே கிட்டதட்ட திருவிழா போல் கூட்டமாகி விட்டது.

வந்த அத்தனை பேரும் பிரயுவின் வீட்டில் இருந்து யாரும் வரவில்லையா என்ற கேள்வியே எழுந்தது.

பெரியவர்கள் பிரயுவிடம், “ஏனம்மா, நீங்கள் கல்யாணம் முடிந்து முதல் முறை வருகிறீர்கள். முறைப்படி கல்யாணம் முடிந்து உன் பெற்றோர் உன்னை சீர்வரிசையுடன் இங்கேதான் கொண்டு விட வேண்டும். அந்த நேரத்தில் அது முடியாது போயிற்று.. இப்போவது வந்து எல்லோரையும் பார்த்து விட்டு சென்றிருக்கலாம் இல்லையா? மாப்பிள்ளை மட்டும் போதும் என்று எண்ணக் கூடாது, அவர் ஊர், உறவு எல்லாம் தான் வேண்டும்” என்று சற்று குத்தலாகவே சொல்லவும், பிரயுவிற்கு வருத்தமாகி விட்டது.

உண்மையில் அவள் பெற்றோருக்கு தாங்கள் இங்கே வருவதே தெரியாது ..என்று யாரிடம் சொல்ல முடியும். தன் மாமியார் கூப்பிடவில்லை என்றா சொல்ல முடியும்

அவர்கள் பிரயுவின் மாமியாரையும் விட்டு வைக்கவில்லை.. “ஏன் .. உனக்கு தெரியாதா .. நம்ம ஊர் வழக்கம்.. நீ பட்டணத்துக்கு போய்ட்டா எல்லாம் மறந்துடுமா. .நீ அவங்கள கட் அண்ட் ரைட்டா வர சொல்லியிருக்க வேண்டாம்... “என்றனர்,

பிறகு ஆதி தான் சமாளித்தான். பிரயுவின் ரெண்டு தங்கைகளும் மாசமாய் இருப்பதால் வரவில்லை.. என்று ஏதோ சொல்லி சமாளித்தான்.

ஆதிக்கு சரியான கோபம். ப்ரயு தங்கைகள் இல்லாவிட்டாலும், அவள் பெற்றோரையவது தன் அம்மா அழைத்து இருக்கலாமே... ஏதோ ஏதோ காரணம் சொன்ன போதும், அது தவறு என்று அவனுக்கு புரிந்தது.

நல்ல வேளை இதை பிரயுவோ, அவள் பெற்றோரோ பெரிய விஷயமாக எடுக்க வில்லை. இதே இடத்தில் வித்யவோ, அவள் மாமியாரோ இருந்திருந்தால் பெரிய பிரச்சினை ஆக்கி விட்டிருப்பார்கள்.

அவனுக்கு புரிந்தது.. தான் கூப்பிடதற்காக மட்டும் இல்லாமல், தன் பெரியப்பா பத்திரிகை வைத்த மரியதைக்காவது வந்திருப்பார்கள்.. ஆனால் வித்யா வீட்டு விசேஷத்திற்கு வராமல், இதற்கு வந்தால் அதுவும் தவறாக போகும். அவர்களை கூப்பிடவில்லை என்று வித்யா வீட்டினரை குறையும் சொல்ல முடியாது. அதனால் தான் வரவில்லை என்று.

எப்படியோ ஒருவழியாக கோவில் பூஜை முடித்து எல்லோரும் நேராக மண்டபத்திற்கு சென்றனர்.

வித்யா  கைக்குழந்தை வைத்து இருக்கிறவள் என்பதால் அவளை ஓரிடமாக அமர வைத்து விட்டார்கள். பிரயுவும், ஆதியும் இளம் வயதினாராய் இருப்பதால் அவர்களை நன்றாக வேலை செய்ய விட்டார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.