(Reading time: 14 - 28 minutes)

தை பற்றி கேட்கவும் மறந்து விட்டான். அவளின் விலகல் தன்மையால் அவன் மனம் காயப்பட்டு இருந்தது.

பிரயுவிற்கு அவனுக்கு தனக்காக பார்த்து வாங்க கூட நேரம் இல்லையா? மனம் இல்லையா? என்ற எண்ணம் தோன்றியது. கொஞ்ச நாட்களாக மறந்து இருந்த வேதனை மீண்டும் ஆரம்பித்தது.

குழந்தைகள் பெயர் சூட்டும் விழாவிற்கு ப்ரயு வீட்டரையும் அழைக்க, அவள் மாமியார் வரவில்லை என்று சொல்லி விட்டார்.

பிரயுவும் வரவில்லை என்று தன் தாயிடம் கூற, அவர் வருத்தப்பட்டு அழுது அவளை வரவைத்தார். பிரயுவின் பெற்றோர் இருவருக்கும் கையறு நிலை என்று சொல்லும் நிலைமை. அவர்களுக்கு யார் பக்கம் பேச என்று தெரியவில்லை.

பிரயுவின் நிலைமை தனிமைபடுத்த பட்டது போல் இருக்கிறது. மற்ற இரு மகள்களுக்கோ தாய் வீட்டில் சீராடும் நேரம் இதுதான். இதற்கு பின் அவர்கள் வருகை என்பது குறைந்து விடும். வந்தாலும் அவர்களின் முக்கியத்துவத்தை விட பேரக்குழந்தைகளின் முக்கியம் பெரிதாகிவிடும்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

எந்தவொரு பெற்றோருக்கும் தன் பெண்களின் பேறு காலம் பார்த்து அவர்களை அனுப்புவதுதான் அவர்களின் வாழ்நாள் பூர்த்திக்கு சமானம். இந்த நிலையில் இவர்கள் இருவரை குறை கூற முடியாமல், பிரயுவை விட்டுக் கொடுக்கவும் முடியாமல் திண்டாடினர்.

இதை உணர்ந்த ப்ரயு அவர்களுக்காக வந்தாள். முடிந்தவரை ஒதுங்கியும் இருந்தாள்.

ஆனாலும் சில வம்பர்களின் பேச்சு அவளை வேதனைபடுத்தியது. மதியத்திற்கு மேல் அவள் கிளம்பியும் விட்டாள்.

இந்த ஒரு மாதமாக அவள் அனுபவித்து வந்த மன வேதனை அவளை மீண்டும் மயக்கம் கொள்ள வைக்கவே, டாக்டர் அவளை மிகவும் கடிந்து கொண்டார்.

அதிலும் இந்த முறை அவள் மயக்கம் தெளிய மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆகவே, அவள் வீட்டிற்கு தகவல் கொடுத்து விட்டார்.

அவர்கள் வருவதற்குள் பிரயுவிற்கு முழிப்பு வரவே டாக்டர் பிரயுவிடம் அவள் வீட்டாருக்கு தகவல் கொடுத்திருப்பதாக கூறவே,

“அப்படியென்றால் நான் அவர்கள் வந்தவுடன் கிளம்புகிறேன்” எனவும்,

“ப்ரத்யா.. நீங்க படிச்சவங்கதானே... அதுவும் hospitalil வேலை செய்யறீங்க.. இவ்ளோ அலட்சியமா இருக்க கூடாது. ஏற்கனவே இரண்டு முறை மயங்கி இருக்கீங்க. இப்போ மூன்றாவது முறை .. கம்ப்ளீட் செக் up பண்ணிட்டுதான் வீட்டுக்கு போகணும்.” என்று திட்டி விட்டார்கள்.

“டாக்டர்.. வீட்டில் யாருக்கும் என்ன விஷயம் என்று சொல்ல வேண்டாம். என் மாமியாரும், நானும் தனியாக இருக்கிறோம்.. அவர் மிகவும் பயந்து விடுவார். என் பெற்றோர் வீட்டிலோ இரண்டு கைக்குந்தைகளோடு என் தங்கைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் வேதனை கூடும். என்னவென்று கேட்டால் பிரஷர், சுகர் என்று எதாவது சொல்லுங்கள். நான் நாளைக்கு வேலைக்கு வருவது போல் வந்து முழு செக் up செய்து கொள்கிறேன்” என்றாள்.

“உன்னை நம்பலாமா” என்றார்.

“கண்டிப்பா டாக்டர். நான் வேலைக்கு வருவேந்தானே “ என்று சொல்லவும், அவள் அம்மா, அப்பாவோடு மாமியாரும் வந்தார்கள்.

 “ப்ரத்யா .. என்னசும்மா?” என்று அவர்கள் பதற,

டாக்டர் அவர்களிடம் நேராக “பயப்படும் படி ஒன்னும் இல்லை, ஒழுங்கா சாப்பிடாமல், தூங்காமல் லோ பிரஷர் ஆகி மயங்கிட்டங்க... மனசுலே எந்த கவலையும் இல்லாம இருந்தா போதும். ஆனாலும் அவங்க அங்கே இங்கே போறவங்க. போற இடத்தில மயக்கம் வந்து விழுந்து அடிப்பட்டா ஆபத்து  அதனாலே ஜாக்கிரதையாக இருங்க” என்று கொஞ்சம் ஆறுதலாகவும், பயமுறுத்தியும் பேசினார்.

ஏனோ இந்த முறை பிரயுவிற்கு தாய் மடி தேடியது. அவள் தன் தாயிடம் அங்கே வந்து கொஞ்ச நாள் இருக்கவா என்று கேட்கவும் கேட்டாள்.

ஆனால் பிரயுவின் அம்மாவோ “இல்ல ப்ரத்யா. .நீ உங்க வீட்டில் இருந்தாலாவது ரெஸ்ட் எடுக்கலாம். இங்கே வந்தா பவி, தாரிணி , குழந்தைங்க அவங்கள் பார்க்க வரவங்க இந்த மாதிரி தொந்தரவு இருக்கும். நீ அங்கியே போ” என்றவர்,

ப்ரயு மாமியாரிடம் “சம்பந்தி அம்மா, தப்பா நினைச்சுக்காதீங்க.. என் வீட்டு நிலைமை உங்களுக்கு புரியும் நு நினைக்கிறேன். உங்கள தொந்தரவு பண்றது தப்புதான். ஆனால் வேறு வழியில்லை.” என்று கேட்க,

பிரயுவின் மாமியாரோ “நீங்களே கேட்டாலும் நான் அனுப்பியிருக்க மாட்டேன். இந்த நிலைமையில் நான் அவளை அனுப்பினா, நான் மனுஷியே இல்ல. நீங்க சங்கடபடாம போயிட்டு வாங்க” என்று அனுப்பி வைத்தார்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.