பிரயுவின் மனதில் சொல்ல முடியாத துயரம் ஏற்பட்டது. அவளால் அவள் மாமியாரிடம் சகஜமாக இருக்க முடியாது. அதனால் தான் அவள் தன் பெற்றோரை கேட்டது. அவர்கள் நிலைமை புரிந்தாலும், அவள் மனதில் ஏற்பட்ட ஏமாற்றம் என்பது பெரிது தான்.
மேலும் டாக்டர் பிரயுவின் மாமியரிடத்தில் கூறியதை வைத்து அவர் புரிந்து கொண்ட அளவில் ஆதிக்கு சொன்னார்.
அவர் ஆதியிடத்தில் சொன்னது “ஆதி . இன்னிக்கு ப்ரயு வேலை செய்யற hospitalil மயங்கி விழுந்துட்டா பா “
ஆதி பதறி “அம்மா .. அவளுக்கு என்ன ஆச்சு ? ஒன்னும் இல்லியே ? வீட்டுக்கு வந்துட்டீங்களா?”
“டாக்டர் லோ பிரஷர் ன்னு சொல்றாங்க.. அவள் ஒழுங்கா சாப்பிடறது இல்ல .. தூங்குறது இல்லை ன்னு. இப்போ வீட்டுலேதான் இருக்கோம் “
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...
படிக்க தவறாதீர்கள்...
“வேற என்ன சொன்னங்க.. ?”
“மருந்து கொடுத்து இருக்காங்க.. வெளியிலே போகும் போது கவனமா இருக்க சொல்லி இருக்காங்க.
“சரி .. நான் இப்போவே அவ கிட்ட பேசறேன்”
“அதுதான் சொல்ல வந்தேன்.. இன்னிக்கு பேசு. .ஆனால் இனிமேல் அவகிட்ட நைட் ரொம்ப நேரம் பேசாத.. அவ உன்கிட்ட பேசிட்டு படுக்க லேட் ஆகி ஒழுங்கா தூங்கறது இல்லைன்னு நினைக்கிறேன். அதோட உன்கிட்ட பேசினால் அதோட தாக்கம் அவளுக்கு ரொம்ப இருக்கும். அதுவும் அவள் தூக்கத்த கெடுக்கும். நான் சொல்றது புரியும் நு நினைக்கிறேன் “
“புரியது ம்மா.. இனிமேல் நான் கவனமா இருக்கேன்”
அவனுக்கு அவன் அன்னை சொல்ல வந்தது புரிந்தது. தன்னுடைய பேச்சு அவள் உணர்வுகளை தூண்டி விடும் என்று எண்ணுகிறார், ஆனால் அவர் அறியாதது அவர்கள் இருவரும் பேசுவதே அரிதாகி விட்டது என்று. ஆனாலும் தன் தாயின் கூற்று உண்மைதான் என்பதால் அவன் அதை சமாளிக்க தயாராகினான்.
அவளை தன் நினைவில் மறுகுவதை தடுக்க அவன் அன்று இரவு அவளிடம் பேசும்போதே சிடுசிடுத்தான். போன் செய்தவுடன் எடுத்தவளை ஹெலோ சொல்லக் கூட விடாமல்,
“ப்ரத்யா.. ஏன் இப்படி பண்ற. ? உங்க அப்பா, அம்மா, மத்தவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க? என்னையும் எங்க அம்மாவையும் தானே தப்பா நினைப்பாங்க.. என்னமோ உன்னை பட்டினி போட்டு கொடுமை படுத்தற மாதிரி ஏன்.. இந்த சீன் உனக்கு? உனக்கு மட்டும் தான் வேதனையா? என்னை பிரிஞ்சி இருக்கிற எங்க அம்மாவிற்கு வேதனை இல்ல.. அவங்க இப்படியா பண்றாங்க ? வீட்டை விட்டு தனியா இருக்கிற எனக்கு வேதனை இல்ல..? நாங்கெல்லாம் நல்லா சாப்பிட்டு தூங்கறோம் லே.. உனக்கு மட்டும் என்ன ?
இனிமேல் இந்த மாதிரி ஆக கூடாது. ஒழுங்க சாப்பிட்டு, நேரத்துக்கு மாத்திரை சாப்பிட்டு தூங்கு.. நீ பாட்டுக்கு விழுந்து வச்சா எங்க அம்மா ஒண்டியா எப்படி பார்ப்பாங்க ? அவங்கள பார்த்துக்க உன்ன விட்டுட்டு வந்தா .. உன்ன பார்த்துக்க ஆள் வைக்கணும் போலே .. ஜாக்கிரதையா இரு..”
என்று பொரிந்து தள்ளி விட்டு வைத்து விட்டான்.
அங்கே அவன் பிரயுவை கொஞ்சம் டைவேர்ட் பண்ணுவதற்காக கோபத்தை கையில் எடுத்து பேசி விட்டு, வேதனை தாங்காமல் அழுதான்.
இங்கே பிரயுவோ அவன் தன்னை பேசக் கூட விடாமல் பேசிய பேச்சை கேட்டு, தன் உணர்வுகள் எல்லாம் செத்து ஒரு மரக்கட்டை போல் மாறினாள்.
ஆதியின் பேச்சின் எதிரொலி .. பிரயுவை மாற்றியதோடு மட்டும் இல்லாமல், அது ஆதிக்கே வினையாக வந்தது.
ஹாய்.. friends. .இந்த எபிசொட் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க.. நான் சொல்ல வந்தது பிரயுவோட உணர்வுகள் பற்றி.. அது சரியா எல்லோருக்கும் புரியுதா? இது மிகைபடுத்த பட்டு இருக்கான்னும் சொல்லுங்க.. உங்கள் கமெண்ட் ஆவலோடு எதிர்பார்கிறேன்
தொடரும்
{kunena_discuss:948}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.