(Reading time: 13 - 26 minutes)

21. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி

Anbe Undhan Sanjaarame

ன்று மயங்கி விழுந்து எழுந்ததில் இருந்து, பிரயுவிற்கு தன் உடல் நிலை பற்றி ஒரு கவலை இருந்தது. ப்ரயு hospital இல் வேலை பார்ப்பவள். மூன்றாவது முறை மயங்கி விழுந்தது என்பது சாதாரண விஷயம் அல்ல. டாக்டர் சொல்லிருக்காவிட்டலும் அவள் செக் up செய்திருப்பாள்தான்.

செக் up ரிசல்ட் என்னவாக இருக்கும் என்ற யோசனையில்தான் அவள் தன் அம்மா வீட்டிற்கு சென்று விடலாம் என்று எண்ணினாள். தன் மாமியார் தனியாக இருப்பதால், அவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டாம் என்று எண்ணம். தன் பெற்றோரே ப்ரயு அங்கே வருவதால் அவளுக்கு கஷ்டம் தான் என்று கூறவே வேறு வழியில்லாமல் தான் இங்கே வந்து இருந்தாள்.

அவளுக்கு தெரியும். எப்படியும் ஆதிக்கு அவன் அம்மா சொல்லி விடுவார் என்று. அவள் எண்ணியது ஆதி தன்னிடம் பேசும்போது , அவன் அம்மாவை தைரியமாக இருக்க சொல்ல வேண்டும். ஒருவேளை செக் up செய்து அட்மிட் ஆக வேண்டியிருந்தால் அவர்தான் நிலைமையை கையாள வேண்டும். இதெல்லாம் அவனிடம் பேச எண்ணியவள், ஆதி அவள் பேச வாய்ப்பு கொடுக்காததோடு , அவன் பேசிய வார்த்தைகள் , அவன் அம்மாவை தான் கஷ்டபடுத்துவதாக எண்ணிவிட்டான் என்று புரிந்து கொண்டாள்.

ப்ரயு மனதில் ஆதியின் மேல் ஒரு கசப்பு ஏற்பட்டது. எதுவுமே பேசாமல் கட் செய்தவள், மனதில் எதிலும் ஒரு பிடிப்பற்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.

அவளை full செக் up செய்ய சொல்லியிருந்ததை அவள் யாரிடமும் இதுவரை சொல்லவில்லை. ஆதியிடம் மட்டுமே சொல்ல எண்ணியிருந்தவள் , இப்போது அவனிடமும் சொல்ல விருப்ப படவில்லை.

அன்றைக்கு டாக்டர் வைட்டமின் மாத்திரைகளை மட்டுமே கொடுத்திருக்க, அதை சாப்பிட்டுவிட்டு படுத்து விட்டாள்.

படுத்து வெகு நேரம் வரை தூங்காமல் மனதை வருத்திக் கொண்டிருந்தவள் அன்றைய அசதியில் தான் தூங்கினாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நீலாவின் "இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

றுநாள் அவள் சற்று லேட் ஆக தான் எழுந்திருந்தாள். ஆனால் ப்ரயு மாமியாரே அன்றைக்கு சமையலை முடித்து விட்டு இருந்தார்.

அவரும் பெண்தானே. ப்ரயு நிலைமையை எண்ணி அவருக்கும் வருத்தமே. தனக்க்காகதான் ஆதியும், பிரயுவும் தனியாக இருக்கிறார்கள் என்றும் உணர்ந்தவரே.. என்ன இன்னொரு வீட்டில் வாழ்பவள் என்பதால் தன் மகளின் மேல் பாசம் அதிகம்.

ஆதியின் அம்மா பிறந்த வீட்டில் அவருக்கு செல்வாக்கு கிடையாது. இரு சின்ன குழந்தைகளோடு அவர் கஷ்டபட்ட போது அவருக்கு அங்கிருந்து எந்த உதவியும் கிடைக்காது, பொருளாதாரம் அடிப்படையில் அவருக்கு பெரிய கஷ்டம் இல்லை என்றாலும், moral சப்போர்ட் என்பது அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை. இதனால் ஆதியின் அப்பா வீட்டினர் அவரை சற்று அலட்சியமாகவே நடத்தினர். அதே சமயம் பாதுகாப்பாகவும் இருந்தனர். ஆனால் இவர்கள் குடும்பத்தில் அவர்கள் தலையீடு இருக்கும். ஆதி படிப்பு முடிந்து வேலைக்கு சென்ற பின் தான் அவர்கள் தலையீடு குறைந்தது.

இந்த நிலைமை தன் மகளுக்கு வரக் கூடாது என்பதே அவரின் முக்கிய நோக்கம். வித்யாவின் விஷயம் என்று வரும்போதுதான் அவர் ஆதி, பிரயுவிடம் சற்று கடுமையாக நடந்து கொண்டார்.

வித்யா டெலிவரியின் போது, பிரயுவின் அனுசரணை, சென்ற முறை ஆதி வந்த போது ஏற்பட்ட மனசங்கடங்களுக்கு பின்னும், அவர் மேல் அவள் காட்டும் அக்கறை.. இது எல்லாம் அவருக்கு அவள் மீது ஒரு நம்பிக்கை ஏற்படுத்தியது. தனக்கு பின்னும் இவள் தன் மகளுக்கு சப்போர்ட் ஆக இருப்பாள் .

ஆனால் இப்போது பிரயுவின் களையிழந்த முகமும், அவள் உடல் நிலையும் அவரை குற்ற உணர்வில் கொண்டு தள்ளியது. தன்னால் முடிந்த விதத்தில் அவளுக்கு வீட்டில் அதிக வேலை இல்லாமல் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தார்.

அவள் அன்று காலை எழ லேட் ஆனதும் தானே சமையல் முடித்து விட்டார். ப்ரயு எதுவும் சொல்ல வில்லை. அவர் செய்ததை சாப்பிட்டு விட்டு , மீதம் இருந்த வேலைகளை முடித்து விட்டு வேலைக்கு கிளம்பினாள்.

ப்ரயு மாமியார் “ஏன்.. இன்னிக்கே வேலைக்கு போறே ? ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு போகலாம் இல்ல ?”

“இல்ல. இப்ப பரவாயில்லை. கொஞ்சம் அவசர வேலையும் இருக்கு. அதனால் போறேன்” என்று முடித்து விட்டாள்.

பிரயுவிற்குமே அன்று வேலைக்கு போக விருப்பம் இல்லை, ஆனால் டாக்டர் கண்டிப்பாக வர சொல்லியிருப்பதால் சென்றாள்.

என்னதான் தைரியசாலி என்றாலும் டாக்டரிடம் தனியாக போக சற்று பயமாக இருந்தது.

அவர் சொன்னபடி அவளை complete மாஸ்டர் செக் up செய்து விட்டு, மறுநாள் ரிசல்ட் வாங்கி கொள்ள சொன்னார்.

றுநாள் அவளை அழைத்து பேசிய டாக்டர்,

“ப்ரத்யா... உனக்கு என்ன பிரச்சினை.?”

“என்ன டாக்டர்.. எதாவது பெரிய விஷயமா? ”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.