(Reading time: 11 - 21 minutes)

தைஜூ…………. ஹேய்… பேசுடி……”

“…………….”

“எதுக்கு இப்போ உம்முனாமூஞ்சியா இருக்குற நீ?...”

“…………….”

“ஹேய்… ஒரு மனுஷி விடாம கத்திட்டே இருக்குறேன்ல….” என்றவளுக்கு சட்டென்று ஒரு எண்ணம் தோன்றியது…

சதியின் விடாத பேச்சில், “ஓங்கி ஒன்னு வச்சேன்னா தெரியும் பாரு…..” என கை ஓங்கிய தைஜூ,

அவளின் “அண்ணி…………………………………..” என்ற அழைப்பில் கைகளை கீழே இறக்கி விட்டு சிரித்தாள்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்... 

“ஹாஹாஹா…. மாட்டிக்கிட்டீயா?... என்னமோ பேசவே மாட்டேன்னு சொன்ன… இப்போ இப்படி கவுந்திட்டீயே ஒரே வார்த்தையில…” என சதி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிக்க,

“போடீ பிசாசே… உன் மேல கொஞ்ச நேரம் கூட கோப்பட முடியலை… இப்படி எதாவது குட்டி சாத்தான் வேலை செஞ்சு பேச வச்சிடு…. பிசாசே… அப்புறம் எப்படி கோபப்பட முடியும்?...” என்றாள் தைஜூ…

“உன்னை யாரு பட வேண்டான்னு சொன்னா… நீ நல்லா கோபப்பட வேண்டியது தான?...” என சதி எடுத்துக்கொடுக்க,

“அப்படித்தான் நினைப்பேன்… எங்க உன் மூஞ்சியை பார்த்ததும் தான் எல்லாம் பறந்து போயிடுதே காணாம….” என்று சொல்ல,

“ஏன் என் மூஞ்சியில அப்படி என்ன இருக்கு?...” என நிஜமாகவே அறியாத பெண்ணாக சதி கேட்க, அவளின் அந்த அழகு விழியை அது கொண்டிருக்கும் மாசு மருவற்ற முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல தோன்றியது தைஜூவிற்கு…

“என்னடி என்ன பார்வை?...”

“இல்ல உன்னை பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு?...”

“அடியே…. இது நீ என் அண்ணனை பார்த்து சொல்ல வேண்டிய டயலாக்….”

“இதோடா… அப்படின்னு எந்த சட்டம் சொல்லுச்சாம்?...”

“ஓஹோ… மேடம் சட்டம் சொன்னா தான் கேட்பீங்களோ?...”

“அப்படித்தான்னு வச்சிக்கோயேன்….”

“ரைட் மேடம்… இப்பவே இஷானுக்கு போன் போட்டு புது புது சட்டத்தை எழுத சொல்லிடுறேன்… சரிதானா?...” எனக் கேட்க,

வாயாடிக்கொண்டிருந்த தைஜூ, அமைதியாக வெட்கப்பட ஆரம்பித்தாள் இஷானின் பெயர் கேட்டு…

“பாருடா… மேடம் ட்ரீம்ஸ்க்கு போயிட்டாங்க…” என சதி அவளை இடித்துக்கொண்டே கேட்க,

“நிஜமாவே தேங்க்ஸ் சதி… நீ மட்டும் இன்னைக்கு வீட்டுல பேசலன்னா….” என தைஜூ சொல்வதற்குள்,

“இஷானே ஆன்ட்டி, அங்கிள் கிட்ட பேசியிருப்பான்… அவ்வளவுதான்…” என்றாள் சதி கைகளை விரித்தபடி…

“இல்லடீ நான்….” என்ற தைஜூவை தடுத்தவள்,

“இங்க பாரு தைஜூ, நான் எதுவுமே செய்யலை… இன்ஃபாக்ட் நீயே பார்த்தல்ல இன்னைக்கு… இஷான் எப்படி அங்கிள், ஆன்ட்டி கிட்ட தைரியமா உன்னை பெண் கேட்டான்னு… அதுவும் என் அப்பா முன்னாடியே… அவன் அப்பா முன்னாடி இவ்வளவு தைரியமா பேசி நான் கேட்டதே இல்லை தெரியுமா?... ஹ்ம்ம்… எல்லாம் காதல் கொடுக்குற தைரியம்… அதைவிட இந்த அழகான தேவதையை மிஸ் பண்ணிடக்கூடாதே என்ற ஆதங்கமும் பரிதவிப்பும் தான் அவனை இன்னைக்கு தன் மனசுல இருக்குற காதலை வெளிப்படையா பேச வைச்சிருக்கு….” என்றவள் தைஜூ தன்னையே பார்ப்பதை புரிந்து கொண்டு,

“ஆனாலும் இஷான் சரியான லூசுதான்…” என்றாள் சிரித்துக்கொண்டே…

தைஜூ அப்பவும் அமைதியாக அவளையே பார்ப்பதை உணர்ந்தவள், “மேடம் போதும் பார்த்தது… நான் இஷான் இல்ல… இஷானோட தங்கை சதி….” என கூற,

“தெரியும்… அதான் பார்க்குறேன்…” என்றாள் தைஜூ…

“சரியா போச்சு… லூசுக்கு சரியான இன்னொரு லூசு தான் ஜோடியா கிடைச்சிருக்கு போல… ஈஸ்வரா…” என அவள் தலையில் வைத்துக்கொள்ள, தைஜூ சிரித்தாள்…

“ஹேய்… இந்த சீனில் நீ சிரிக்க கூடாதுடி… எங்கூட சண்டை போடணும்…”

“எதுக்கு சண்டை போடணும்… அதும் உங்கூட?...”

“எதுக்கா?... நான் நீ கல்யாணம் பண்ணிக்கப்போறவனை எல்லார் முன்னாடியும் திட்டினேன் நீ சரியான லூசுடா அண்ணான்னு… இப்போ உங்கிட்டேயும் அவனை திட்டினேன், பத்தாததுக்கு உன்னையும் திட்டினேன்… சோ நீ எங்கூட சண்டை தான் போடணும்,  எப்படி நீ இப்படி லூசு சொல்லலாம்னு…”

“உன் அண்ணனை நீ சொல்லுற?... அது மட்டும் இல்லாம நான் உன் ஃப்ரெண்ட்… சோ என்னையும் சொல்லுற… இதுல நான் ஏன் கோபப்படணும்?.... சொல்லு…” என்ற தைஜூவிடம்,

“என்ன இருந்தாலும் உன் வருங்கால கணவர் இல்லையா?... சோ எல்லார் முன்னாடியும் அவனை அப்படி திட்டினது உனக்கு வருத்தமா இருந்திருக்கலாம் தான…”

“நிச்சயமாய் இல்ல… நீ அவரை திட்டினதுக்கு காரணமே இத்தனை நாள் எங்கிட்ட லவ் சொல்லாமலே இருந்துட்டார்னு தான… அப்புறம் எப்படி எனக்கு உன் மேல கோபம் வரும்… சொல்லு… அதுமில்லாம நான் எப்பவும் ரசிக்குற என் அழகு சதியாச்சே நீ… என்னோட இந்த செல்ல குட்டிப்பிசாசு மேல நானே கோபப்படுவேனா?...” என்ற தைஜூ சதியின் கன்னம் பிடித்து கிள்ளி சொல்ல,

“அதான் உன் இஷானை உனக்கே குடுத்தாச்சே முழு உரிமையோட… இன்னும் எதுக்குடி எனக்கு ஐஸ் வைக்குற?...” என்ற சதியை முதலில் முறைத்த தைஜூ,

பின், “ஆ………. இதுக்குத்தான்……” என்றபடி அணைத்துக்கொள்ள, சதி மெல்ல சிரிக்க, தைஜூவும் அவளை அணைத்துக்கொண்டு மனம் நிறைய சந்தோஷத்துடன் புன்னகைத்தாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.