(Reading time: 11 - 21 minutes)

ஜெய்… நாளைக்கு நாம இஷான் நிச்சயதார்த்தத்துக்கு போறோம் தான?...” என சோமநாதன் கேட்டதும்,

தோசையை பிரட்டிக்கொண்டிருந்தவன், அடுப்பை அணைத்துவிட்டு இருகைகளையும் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு,

“என்ன செய்யணும்னு சொல்லுங்கப்பா….” என்றான்…

“இல்ல ஜெய்… அது வந்து…. ஹ்ம்ம்… இஷானுக்குன்னு வேற நண்பர்கள் யாரும் கிடையாது உன்னைத் தவிர… அவனோட வாழ்க்கையில நடக்குற ஒரு முக்கியமான நிகழ்வுக்கு நீ போகாம இருக்குறது நல்லதுன்னு நினைக்குறீயா?...”

“…………..”

“நீ போகலைன்னா அவன் மனசு என்ன பாடு படும்… அதை கொஞ்சம் யோசிச்சுப்பாரு…”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - சர்வதேச காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

“……………”

“என் மகன் போகாத இடத்துக்கு நானும் போகமாட்டேன்… அப்புறம் இஷான் முகத்துல எப்படி முழிக்க முடியும்?...”

“………………”

“பாவம் இல்லையா அவன்… அவனும் எனக்கு உன்னை மாதிரி தான….” என அவர் சொல்லிவிட்டு ஜெய்யைப் பார்க்க,

“சரிப்பா….” என்றான் அவன்…

“எதுக்கு சரின்னு சொல்லுற ஜெய்… எனக்கு புரியலை…”

“அது சரி… கமிஷனர் சாருக்கே புரியலையா?...” என்றவன்,

“சரி… கமிஷனர் சார்… நல்லா கேட்டுக்கோங்க… நாளைக்கு என் ஃப்ரெண்ட் இஷானோட நிச்சயதார்த்தத்திற்கு நானும் என் அப்பாவும் போகப்போறோம்… என் அப்பாவுக்கு இஷானும் பையன் மாதிரி தான்… அதனால அவர் சொன்னதுக்கு நான் சரின்னு சொன்னேன்… இப்போ புரிஞ்சிடுச்சா?...” எனக் கேட்க,

“யெஸ்… மிஸ்டர்… ஜெய்…. ரொம்ப க்ளியரா புரிஞ்சிட்டு…” என்றார் அவரும் சிரித்தபடி…

அப்போது, தைஜூவின் வீட்டில்,

“ஹேய்… இஷான் ஜெய்க்கு சொல்லியிருப்பார்ல ஃபங்க்ஷன் பத்தி…” என தைஜூ கேட்க, ஜெய் என்ற பெயரில் அப்படியே உறைந்து போய் நின்றாள் சதி…

“ஹேய்… உன்னைத்தான்…” என சதியை பிடித்து உலுக்கியவள், மீண்டும் தன் கேள்வியை கேட்க,

“ஹ்ம்ம்… சொல்லியிருப்பான்னு தான் நினைக்குறேன் தைஜூ…” என்றாள் சதி…

“ஓ... அப்போ மேடமை நாளைக்கு கையிலேயே பிடிக்க முடியாதுன்னு சொல்லு…”

“ஹ்ம்ம்… அதெல்லாம் ஒன்னுமில்லை…” என்றவளுக்கு நாளைக்கு தன்னவனை எப்படியும் அருகில் பார்க்கும் வாய்ப்பு கிட்டும், அதுமட்டுமல்லாது நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்ற நினைவும் வர, அவள் முகத்தில் தானாகவே செம்மை கூடியது…

அவளின் செம்மை, தைஜூவையும் புன்னகை பூக்க வைக்க,

“ஆஹா………… பாருடா… வெட்கத்தை… பேரை சொன்னதுக்கே இப்படியா?... அப்போ நேரில் பார்த்தா என்ன பண்ணுவ சதி…” என்று அவளை கேலி செய்ய, சதி தலை கவிழ்ந்திருந்தாள்…

“ஹேய்… இங்க பாரு… நாளைக்கு உன் ஜெய் வரும்போது இப்படி தலையை தொங்க போட்டுட்டு நின்னேன்னு வை, அப்புறம் அவ்வளவுதான்… ஒழுங்கா அவரைப் பார்த்து நாளைக்காவது உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லுற வழியை பாரு…” என தைஜூ சொன்னதும்,

“எது நாளைக்கா?...” என்றாள் சதி விழிகளை உருட்டியபடி…

“அடியே கண்ணழகி….. இதெல்லாம், இப்படியெல்லாம் நாளைக்கு அவர் கிட்ட பேசும்போது செய்… மனுஷன் அப்படியே மயங்கி போயிடுவார்….” என தைஜூ சொன்னதும், உதட்டில் பரவிய புன்னகையுடன் சதி திரும்ப,

“என்னடி மறுபடி வெட்கமா?... முதலில் அந்த வெட்கத்தை தூக்கி தூர வச்சிட்டு, ஜெய்கிட்ட பேசு… அப்புறம் பொறுமையா உட்கார்ந்து வெட்கப்படு… உன்னை யாரும் வேணாம்னு சொல்லலை…” என்றதும், மீண்டும் சிரித்த சதி, தைஜூவிடம்

“எல்லாரும் இருப்பாங்களே தைஜூ… அப்புறம் எப்படி அவரை நான் பார்த்து பேச முடியும்?...” என கேட்க,

“அது உன் சாமர்த்தியம்… நீயாச்சு… உன் ஜெய்யாச்சு…” என கையை விரித்தாள் தைஜூ…

“ஹ்ம்ம்…. சரி… யோசிக்கிறேன்…” என சதியும் சொல்ல, அங்கே ஜெய்யும், நாளைக்கு ஃபங்க்ஷனுக்கு செல்வதை பற்றிய யோசனையில் இருந்தான்…ச்

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.