(Reading time: 22 - 44 minutes)

05. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

ன்ன இருந்தாலும் நீ இப்படி அண்ணாகிட்ட கோபப்பட்டிருக்க கூடாது தைஜூ… பாவம்… அவன் முகமே வாடிப்போச்சு…” என சதி முதலில் கொஞ்சம் குரலை உயர்த்தியும் கடைசியில் தாழ்த்தியும் சொல்ல,

“உங்க அண்ணனுக்கு சப்போர்ட்டா நீ?... பேசாம போயிடு… அப்புறம் திட்டிடப்போறேன்…” என்றாள் தைஜூ கடுப்புடன்…

“ஹேய்… அதான் எனக்கு எதுவும் ஆகலையே… அப்புறம் என்ன தைஜூ…”

“எதாவது ஆகியிருந்தா என்ன செஞ்சிருக்க முடியும்?... சொல்லு…” என தைஜூ சதியிடம் கேட்டதும்,

“ஒன்னும் ஆகாது என் பொண்ணுக்கு… இந்த தட்சேஷ்வரோட பொண்ணு மேல துரும்பு பட்டிருந்தாலும் இருந்த இடம் தெரியாம அழிச்சிருப்பேன்… அது எவண்டா என் பையன் மேலயே கை வைக்க நினைச்சவன்?...” என கண்களில் கொலைவெறியோடு கையில் இருந்த காபி கோப்பையை தூக்கி போட்டு உடைத்தார் தட்சேஷ்வர்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

“ஐயா… நீங்க எதும் கவலைப்படாதீங்க… அவனை அரெஸ்ட் செஞ்சு உள்ளே வச்சிட்டாராம் நம்ம இஷான் தம்பியோட ஃப்ரெண்ட் ஜெய்… உசுரு மட்டும் தான் உடம்புல மிச்சம் இருக்கு… அடி பின்னிட்டாராம்…” என அவரின் உதவியாளன் சொன்னதும்,

“சரி… இஷானுக்கு போன் போடு…” என்றார் அவர்…

அழைப்பு போய் கொண்டிருந்ததே தவிர, அவன் எடுத்தபாடில்லை…

“சே….” என கடுப்பில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தவர், பிரசுதி வரவும் அமைதியானார்…

“என்ன இது… கப் கீழே விழுந்து உடைஞ்சிருக்கு… அடடா… காபி எல்லாம் கொட்டிபோச்சா?.. என்னங்க… என்னாச்சு?...” என்றவர் மெல்ல கணவரிடம் கேட்டதும்,

“ஒன்னுமில்லை… வேலையில ஒரு சின்னப் பிரச்சினை… அதான் கோவத்துல நா……ன்……………..” என அவர் இழுக்க,

“ஊருக்கு தான் திருந்தின மாதிரி நடந்துக்கறீங்க… வீட்டுல இல்லையா?... இன்னும் அந்த கோபம் உங்களை விட்டு போகலையா?... ஊருக்கு பெரிய மனுஷனா இருந்தா இப்படி தான் எப்பவும் விறைப்பா இருக்கணுமா?... கொஞ்சமாவது காலத்துக்கு தகுந்த மாதிரி இருக்கப்பாருங்க… உங்க புள்ளை ஐ.பி.எஸ் ஆபிசர்… அது நினைவுல இருக்கட்டும்…” என்றவர், கீழே விழுந்து கிடந்த கப்பை எடுக்க முனைகையில்,

“ஹே.. பார்த்து… கையில குத்திட போகுது…” என அவர் சொல்ல,

“இந்த அக்கறைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை… இந்த அக்கறை முன்னமே இருந்திருந்தா இப்படி கப்பை உடைச்சிருக்க மாட்டீங்க…” என்ற பிரசுதி,

“இன்னொரு கப் காபி தரேன்… குடிக்கணும்னா குடிங்க… இல்ல அதையும் இப்படி கொட்டி உடைங்க…” என்ற முறைப்போடு நகர்ந்ததும்,

“இதப்பத்தி இனி எதுவும் பேச வேண்டாம்… நீ கிளம்பு… ஃபேக்டரிக்கு போ… நான் அங்க வந்ததும் பேசிக்கலாம்…” என தன் உதவியாளனை அவர் விரட்ட, அவனும் சென்றான்…

நாளைக்குத்தானடா கோர்ட்டுல இவன் கேஸ் வரணும்… இன்னைக்கே எப்படி…” என இஷான் ஜெய்யிடம் வினவ,

“எல்லாம்… ஜெய் புண்ணியம் தான் இஷான்…” என சொல்லிக்கொண்டே வந்தார் சோமநாதன்…

“சார்.,…” என்றபடி இருவரும் அவருக்கு சல்யூட் அடிக்க, அவரும் அதை ஏற்று, பின்,

“நீங்க நேத்து ரொம்ப ஃபோர்ஸ் பண்ணி கேட்டதால தான், இன்னைக்கே கோர்ட்ல கேஸ் வர ஏற்பாடு செய்ய வேண்டியதா போச்சுன்னு இப்போதான் சங்கரன் வந்து சொல்லிட்டு போறார்… அவனை சீக்கிரம் அரெஸ்ட் பண்ணி உள்ள வச்சா தான் நல்லதுன்னு நீங்க சொன்னதுக்கு நானும் சரின்னு சொன்னேன்… எவ்வளவோ நாள் டிபார்ட்மெண்டுக்கு ஆட்டம் காட்டிட்டிருந்த அந்த குமாரை நீங்க சட்டம் மூலமா தண்டனை வாங்கி கொடுப்பேன்னு சொல்லி கோர்ட் வரைக்கும் அவனை கொண்டு வந்து விட்டப்போ ரொம்ப பெருமையா இருந்துச்சு… ஆனா இப்போ இப்படி அவனுக்கு சட்டத்தின் மூலம் தண்டனையும் வாங்கி கொடுத்து, நீங்களும் பெர்சனலா தண்டனை கொடுத்தா என்ன அர்த்தம் மிஸ்டர் ஜெய்?... இதுதான் நான் உங்க மேல வச்சிருக்குற நம்பிக்கைக்கு நீங்க கொடுக்குற மதிப்பா?...” என ஜெய்யிடம் கேட்க,

“இல்ல சார்… அவனுக்கு எதிரா தீர்ப்பு வந்ததும், அவன் ஆளுங்க மூலமா, ஜெய்யையும் என்னையும் கொல்ல ஏற்பாடு பண்ணியிருக்கான்…” என வேகமாக இஷான் பதில் சொன்னதும்,

“வாட் எவர் மிஸ்டர் இஷான்… ஒரு தேர்ட் ரேட் கிரிமினல் இந்த மாதிரி செய்யலைன்னா தான் நாம ஆச்சரியப்படணும்… ஊரறிஞ்ச ஒரு ரவுடி வேற எப்படி பிஹேவ் பண்ணுவான்னு நீங்க நினைக்குறீங்க?...” என அவனிடம் கேள்வி கேட்டார் அவர்…

“இல்ல சார்… அந்த குமார் கொலை செய்ய நினைச்சது….” என இஷான் சொல்ல ஆரம்பிக்கும்போதே

“சார்… உங்க நம்பிக்கைக்கு நான் மதிப்பு கொடுக்கலைன்னு நினைச்சா ஐ அம் வெரி சாரி சார்… நீங்க என்ன பனிஷ் பண்ணாலும் ஐ வில் அக்செப்ட் சார்…” என ஜெய் இடைபுகுந்து சொல்லிவிட,

ஜெய்யின் மீது ஒரு அழுத்தமான பார்வையை பதித்தவர், இஷானிடம், “இப்போ அந்த அக்யூஸ்ட் எப்படி இருக்குறான்?... டாக்டர் என்ன சொல்லுறாங்க?...” என கேட்க அவனும் பதில் சொன்னான்…

“இனி நீங்க அவன் மேல கைவைக்க கூடாது… மீறி வச்சா ஐ வில் டேக் சிவியர் ஆக்ஷன் அகைன்ஸ்ட் யூ மிஸ்டர் ஜெய்…” என அவரும் கூறிவிட,

“யெஸ் சார்…” என்றான் அவனும்..

“யூ மே கோ நௌ…” என்றதும் ஜெய் வேகமாக வெளியே செல்ல, அவன் பின்னாடியே செல்ல இருந்த இஷானிடம், “நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க இஷான்… ஜெய் நீங்க பேசும்போது குறுக்கே புகுந்து எங்கிட்ட பேசினப்பவே எனக்கு புரிந்துவிட்டது… அந்த குமார் ஆட்களால வேற யாருக்கு என்ன ஆக இருந்தது?..” என நேரடியாகவே சோமநாதன் அவனிடம் கேட்க, ஒரு கணம் என்றாலும் அவன் கண்கள் ஆச்சரியத்தை பிரதிபலித்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.