(Reading time: 22 - 44 minutes)

வீட்டைப் பார்த்ததும், அவனுக்கு திக் என்றிருக்க, என்ன நடக்கப்போகிறது என்ற பாவனையில் அவன் பிரசுதியைப் பார்க்க, அவரோ அதனை கண்டுகொள்ளாமல் உள்ளே வா… என்றபடி முன்னே சென்றார்…

“ஹேய்… வா பிரசுதி… வாங்க அண்ணா…” என்று வரவேற்ற பிரசுதியின் நெருங்கிய தோழி காதம்பரியும்  அவர்களை அமர சொல்ல,

“அண்ணா இல்லையா…. அவரைக் காணோமே…” என்று கேட்ட பிரசுதியிடம்,

“இதோ வந்துட்டேன்மா…” என்றபடி வந்தார் பிரசுதி தோழி காதம்பரியின் கணவர் சிதம்பரம்…

“வாங்க ஈஸ்வர்… எப்படி இருக்கீங்க?...” என்ற நலம் விசாரிப்போடு சிதம்பரமும் அவர்களின் அருகில் அமர,

பிரசுதி, கணவரைப் பார்த்துவிட்டு அமைதியாக இருக்க, அவர் சொல்லு என்பதை போல் சைகை காட்டவும்,

“என்ன பிரசுதி… என்ன தயங்குற…” என்ற தனது தோழி காதம்பரியிடத்தில்,

“உனக்கே தெரியும்… இவன் எங்க பையன் இஷான்… இவனுக்கு சீக்கிரம் கல்யாணம் செஞ்சுவைக்கணும்னு நினைக்குறோம்… நீ கூட அன்னைக்கு ஒரு ஃபேமிலி பத்தி சொன்னீயே… அவங்களும் இன்னைக்கு இங்க வரேன்னு சொன்னாங்களே.. அதான் அவங்களோடு இன்னைக்கே சம்பந்தம் பேசி முடிக்க வந்துட்டோம்…” என பிரசுதி சொல்லி முடித்ததும்,

அங்கிருந்து சட்டென்று எழுந்தான் இஷான்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மனோஹரியின் "காதல் பின்னது உலகு" - கல்யாணமாம் கல்யாணம்…

படிக்க தவறாதீர்கள்... 

“என்னடா?...” என்ற தட்சேஷ்வரின் பார்வை அவனை துளைக்க, அவனோ, “எனக்கு இப்போதைக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம்மா…” என தாயிடத்தில் கூறியவன்,

“இதுக்காகத்தான் என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்காங்கன்னு முதலிலேயே தெரிஞ்சிருந்தா நான் இங்க வந்திருக்கவே மாட்டேன்… என்னை மன்னிச்சிடுங்க… ஆன்ட்டி… நான் வரேன் அங்கிள்… சாரி… தப்பா நினைக்காதீங்க…” என்ற வேண்டுதலோடு அவன் வாசல் பக்கம் விரைந்து செல்லுகையில்

“பொண்ணைப் பார்த்துட்டு சொல்லு… எதுவா இருந்தாலும்… எனக்கு கூட அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு…” என உள்ளிருந்து குரல் வரவும், இது சதியின் குரலாயிற்றே என்ற அவனின் நடை நின்றது…

“என்னடா அண்ணா… எங்க போற?...”

“சதி… நீ எங்க இங்க?...”

“அது உங்கூட வந்தா நீ எங்க ஏதுன்னு கேட்டு நச்சரிப்பன்னு தான் தைஜூவை இங்க டிராப் பண்ணுற சாக்கில நானும் வந்துட்டேன்… பின்னே என் அண்ணியை நான் பார்க்க வேண்டாமா?... ஆனா ஒன்னு இஷான்… நான் பார்த்து ஓகே சொன்னாதான் நீ அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்… சரியா?...” என தோரணையுடன் சதி கேட்க,

“நான் இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னது உன் காதுல விழுகலையா?...” என அவன் எதிர்கேள்வி கேட்க, அவன் குரலே காட்டி கொடுத்தது அவன் மிகுந்த கோபத்தில் இருக்கிறான் என்று…

“இப்போ ஏண்டா நீ அவளை முறைக்குற?... எங்கிட்ட சொல்லு எதுனாலும்… அதென்ன சின்னப்பிள்ளைகிட்ட போய் உன் கோபத்தை காட்டுற நீ?..” என்ற தட்சேஷ்வர் அவனை அதட்ட,

ஒரு சிறு பெருமூச்சோடு, “உங்க வார்த்தையை நான் இதுவர மீறினதில்லைப்பா… உங்க மேல மதிப்பு கலந்த பயமும் இருக்கு… ஆனா முதல் முறையா உங்க பேச்சை கேட்க முடியாம போகுற சூழ்நிலை வரும்னு நான் நினைச்சே பார்க்கலைப்பா… எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமே இல்லப்பா… புரிஞ்சிக்கோங்க… ப்ளீஸ்…” என்றவன்,

“நீயாவது என்னை புரிஞ்சிக்கோம்மா…” என தாயிடத்திலும் அவன் கெஞ்ச, ஒரு நிமிடம் என்றாலும் திகைத்து போனார் பிரசுதி…

“ஒரு தடவை பொண்ணை பார்த்துட்டு நீ அப்புறம் சொல்லு… அம்மா நீ சொல்லுறதை கேட்குறேன்…” என பிரசுதி மெல்ல மகனின் அருகில் வந்து சொல்ல, அவன் மறுத்தான் முடியாதென…

“என்னடா?... அவ அவ்வளவு கெஞ்சுறா… நீ என்னடான்னா முடியவே முடியாதுன்னு தலையை குலுக்குற?... என்ன எதும் காதல் கீதல் பண்ணுறீயா?...” என தட்சேஷ்வர் கேள்வியோடு மகனைப் பார்த்து கேட்க, அவன் அமைதியாக இருந்தான்…

“என்ன இஷான்?... அப்பா சொல்லுறது உண்மையா?... யாரையாவது லவ் பண்ணுறீயா என்ன?... அம்மாகிட்ட சொல்லமாட்டீயா?... யாரு அந்த பொண்ணு?...”

“வந்தும்மா… நான்…” என்றவன், சதியைப் பார்க்க,

“இப்போ எதுக்கு நீ அவளைப் பார்க்குற?... உங்கிட்ட கேள்வி கேட்டா நீ தான் பதில் சொல்லணும்… அவளா சொல்லுவா?... சொல்லு… யாரந்த பொண்ணு?...” என தட்சேஷ்வர் விடாப்பிடியாக கேட்க,

“அம்மா…” என்றபடி தாயின் கைகளைப் பிடித்துக்கொண்டவன்,

“நீங்களே எனக்கு பொண்ணு பார்த்தாலும் அப்படி ஒரு பொண்ணை தான் பார்ப்பீங்க… அவ நல்லவம்மா… அதை விட அவளை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கும்மா… உனக்கும் பிடிக்கும்மா… அவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு மனசுல நினைச்சிட்டேன்மா… ஆனா இதுவரை அந்த பொண்ணுகிட்ட நான் எதையும் சொன்னதில்லைம்மா…” என்றவன்,

காதம்பரி-சிதம்பரத்திடம் சென்று, “இந்த விஷயத்தை எப்படி உங்ககிட்ட பேசப்போறோம்னு நினைச்சிட்டிருந்தேன்… ஆனா, இப்போ என் அப்பா, அம்மா தங்கச்சி எல்லாரும் இங்க இருக்குறாங்க… எல்லார் முன்னாடியுமே சொல்லுறேன்… நான் உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்னு விரும்புறேன்…” என்றதும், தைஜூவின் பெற்றோர் ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக்கொள்ள,

“உங்களுக்கு ஷாக்கிங்கா இருக்கும்னு புரியுது… ஆனா, இந்த சந்தர்ப்பத்தையும் விட்டுட்டா நான் உங்க பொண்ணை இழந்திடுவேனோன்னு பயமா இருக்கு… அவளை என்னைக்கும் நான் மிஸ் பண்ண விரும்பலை… நான் சொன்னதை நீங்க எப்படி எடுத்துக்கிட்டீங்கன்னு எனக்கு தெரியலை… இனி நீங்க தான் உங்க முடிவை சொல்லணும்…” என்றதும் அங்கே சற்று நேரம் அமைதி நிலவியது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.