(Reading time: 22 - 44 minutes)

ஷான்… எங்க இருக்குற… வீட்டுக்கு சீக்கிரம் வா…”

“இதோ வீட்டுக்கு பக்கத்துல வந்துட்டேன்மா…”

“சரி… சரி… வா… நான் போனை வைக்குறேன்…” என்ற பிரசுதியிடத்தில்,

“அதென்ன நான் போன் பண்ணினா மட்டும் எடுக்க மாட்டிக்குறான்… நீ போன் போட்டதும் ஒரு ரிங்கிலேயே எடுத்துட்டான்… என்ன அவனுக்கு என் மேல பயமே இல்லையா?..” என கேள்வி கேட்டார் தட்சேஷ்வர்…

“பயமா?... தப்பு செஞ்சா தான பயப்படணும்… அதும் இல்லாம என் புள்ளை போலீஸ்காரன்… அவன் யாருக்கும் பயப்படமாட்டான்… தெரிஞ்சிக்கோங்க…”

“ஓ… நீ திட்டுவேன்னு தான உன் போனை சட்டுன்னு எடுத்துட்டான்…”

“அது பயத்துனால இல்ல… என் மேல வச்சிருக்குற பாசத்தினால…”

“ஓஹோ… அப்போ உன் புள்ளைக்கு என் மேல பயமும் கிடையாது… பாசமும் கிடையாது… அப்படித்தான?...”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்... 

“நீங்க பார்த்தீங்களா?... என் பிள்ளைக்கு உங்க மேல பாசம் இல்லன்னு…” என பிரசுதி சண்டைக்கு தயாரான போது, சரியாக உள்ளே வந்தான் இஷான்…

வந்தவன் தகப்பனைப் பார்த்ததும், அணிந்திருந்த தொப்பியை கழட்டிவிட்டு,

“வாங்கப்பா… பிரயாணம் எல்லாம் நல்லா இருந்துச்சா?... போன வேலை முடிஞ்சதாப்பா… சாரிப்பா… ரொம்ப வேலை, அலைச்சல்… அதான் உங்க போனை எடுக்க முடியலை… அப்படியே பேசியிருந்தாலும் என்னால சரியா பேசியிருக்க முடியுமான்னு தெரியலை… அதான் வீட்டுக்குப் போனதும் நேரில் பேசிக்கலாம்னு அடுத்து போன் பண்ணலை… தப்பா நினைச்சுக்காதீங்கப்பா… சாரி…” என இஷான் பொறுமையாக சொன்னதும்,

பிரசுதி கண்களால், மகனை காட்டி, “பாருங்க… என் மகன் சொல்லுறதை… புரிஞ்சதா இப்போ உங்களுக்கு எல்லாம்…” என பெருமைப்பட, அவரும் ஹ்ம்ம்… என்றபடி தலை அசைத்தார்…

பெற்றோரின் இந்த பரிபாஷனையை அறிந்தும் அறியாமலும் நின்றிருந்தவனிடத்தில்,

“சரி இஷான்… நீ சீக்கிரம் போய் குளிச்சிட்டு வா… நாம வெளியே போகணும்…” என பிரசுதி சொல்ல,

“வெளியேவா… இப்பவாம்மா?...” என கேள்வி கேட்டான் அவன்..

“ஆமாடா… இப்பவே தான்…”

“சரிம்மா… எங்க சதியை காணோம்…”

“ஏன் தங்கச்சியை பார்த்தா தான் குளிக்க போவீயா நீ?...” என பிரசுதி கேலி பண்ண,

“அப்படி எல்லாம் இல்லம்மா… அவளைக் காணாமே… அதான் கேட்டேன்…” என்றான் அவன் சிரித்தபடி…

“அதுதான பார்த்தேன்… நல்ல வேளை… உங்க அப்பா மாதிரி நீ சதி பைத்தியம் இல்ல தாண்டா… அந்த மட்டும் தப்பிச்சேன்…” என்றவரிடத்தில், 

தட்சேஷ்வர், “இப்போ எதுக்கு நீ என் பொண்ணை உள்ள இழுக்குற?...” என்று வாதிட ஆரம்பிக்க,

“நீ போடா… நான் பார்த்துக்குறேன்…” என இஷானை அனுப்பிவிட்டு கணவரிடம் வந்து தனது பதில் சண்டையை ஆரம்பித்தார் பிரசுதி…

ந்த சதி இருந்தாலாவது கொஞ்ச நேரம் போகும்… சே… அவளுக்கு என்ன 8 மணிக்கே தூக்கம் வந்துட்டாம் இன்னைக்கு?... நான் போய் எழுப்பி கூட்டிட்டு வரேன்னு சொன்னா வேண்டாம்டா தூங்கட்டும்ன்னு அப்பா சொல்லுறார்… இருக்கட்டும்.. வீட்டுக்குப் போனதும் ஒரு வாளி தண்ணீர் எடுத்து ஊத்திடுறேன் அவ மேல…”

“குட்டி பிசாசு… சே…” என தங்கையினை திட்டியவன், காலையில் நடந்த நிகழ்வினை சற்று நினைத்துப்பார்க்க, தாங்க முடியவில்லை அவனால்… ஒருவேளை குமாரை தான் அரெஸ்ட் செய்ய நேர்ந்தால் என்ன செய்திருப்பேனோ அதை தானே ஜெய்யும் செய்தான் என்ற எண்ணமும் வர, காலையில் கமிஷனர் கேட்ட கேள்வி நினைவு வந்தது…

“அந்த குமார் ஆட்களால வேற யாருக்கு என்ன ஆக இருந்தது?...” என நேரடியாக கேட்ட கமிஷனரிடத்தில், தன்னை தாக்க வந்த துப்பாக்கி குண்டு தன் தங்கையை தாக்க வந்தது என்று கூற, “வாட்….” என அதிர்ந்து போனார் அவர்…

“யெஸ் சார்… அவளுக்கு எதாவது ஆகியிருந்தா என்ன நடந்திருக்கும்னு நினைச்சுக்கூட பார்க்க முடியலை… என் அப்பாக்கு சத்தியமா பதில் சொல்லியிருக்க முடியாது சார் என்னால… இன்னமும் அப்பாகிட்ட நான் இதைப் பத்தி சொல்லலை… சதிகிட்டயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லத்தான் போறேன்… ஆனா அதையும் மீறி அவருக்கு தெரிய வந்தா என்ன ஆகும்னு தான் யோசிக்க முடியலை சார்…”

“அதை நான் பார்த்துக்கறேன் இஷான்… நீங்க கவலைப்படாதீங்க…” என்றதும் சரி என்றபடி அங்கிருந்து தான் வந்ததையும் நினைத்துப்பார்த்தவன், தான் வந்து கொண்டிருக்கும் காரின் பாதையை கவனித்து,

“இந்த ஏரியால யாரைம்மா பார்க்கப் போறோம்?...” என கேட்க,

“பேசாம வா இஷான்… கொஞ்ச நேரத்துல போயிடுவோம்…” என பிரசுதி மகனை அடக்க, அவன் அமைதியானான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.