(Reading time: 22 - 44 minutes)

தைஜூ… ப்ளீஸ்… நீ உன் கோபத்தை விடு… எனக்காக விட்டுடேன்….” என கெஞ்சிய சதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளை விட்டு நடந்தாள் தைஜூ…

“ஹேய்.. நில்லுடி… என்னை விட்டு எங்கப்போற?..”

“வீட்டுக்குப் போக வேண்டாமா?... நீ வரீயா இல்லையா இப்போ?...”

“இரு இரு வந்து தொலைக்கிறேன்…” என்ற சதி வேகமாக சென்று ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்த போது, அவள் செல்போன் சத்தம் கொடுத்தது…

“ஏண்டி ஒரு மனுஷி வண்டியை ஸ்டார்ட் பண்ணிட்டிருக்கேன்ல… சும்மாதான இருக்குற… இந்த போனை எடுத்து பேசேன்…” என்றவள், தைஜூவிடம் கொடுக்கும் போது, திரையில் ஒளிர்ந்த பெயரை பார்த்துவிட்டு, அட்டென்ட் செய்து தைஜூவிடம் கொடுத்து பேச சொன்னாள்…

“நான் அட்டெண்ட் பண்ணிட்டேன்… பேசு…” என சைகையில் சதி சொன்னதும், ஹலோ என இங்கே தைஜூ சொல்வதற்குள்,

“சதி… நான் தாண்டா… சாரிடா டைம் கிடைக்கலை… கொஞ்சம் வேலை… அதான் அப்பவே பேச முடியலை… உனக்கு காலேஜ் முடிஞ்சிருக்கும்ல இப்போ… வீட்டுக்குப் போனதும் இங்க நடந்தத அப்பாகிட்ட எக்காரணத்தை கொண்டும் சொல்லிடாதடா.. ப்ளீஸ்… மறந்திடாத…” என்றவன்,

“இன்னொரு விஷயம் தெரியுமா?.. ஜெய் இருக்குறான்ல… அவன் இன்னைக்கு அந்த குமாரோட உயிரை மட்டும் தான் விட்டு வச்சிருக்கான்… மரண அடி அவனுக்கு… எனக்கே அவனை பார்க்க பயமா இருந்துச்சுடா… என்ன கோபம் தெரியுமா?...” என சொல்லிக்கொண்டே இருந்தவன், அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் இருக்கவே,

“சதி… லைனில் இருக்குறீயா?...” என கேட்க,

“நான் சதி இல்ல…” என்ற குரலில் அது யார் என்று அடையாளம் கண்டு கொண்டான் அவன்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஆதித்யா சரணின் "சிவன்யா" - புத்தம் புது தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

“மேடம் இன்னும் கோபமா தான் இருக்குறீங்களா?...”

“ஹ்ம்ம்… கொஞ்சம்…”

“ஓ… என்ன பண்ணினா இந்த கோபம் குறையுமாம்?...”

“என்ன பண்ணினாலும் குறையாது…”

“அது ஏன் அப்படி?...”

“அதெல்லாம் அப்படித்தான்…”

“மன்னிப்பு கேட்டாலுமா?...”

“குட்டிக்கரணமே அடிச்சி தோப்புக்கரணமே போட்டாலும் அப்படித்தான்…” என்றவள் அவன் அடுத்து பேசும் முன்பே அழைப்பை துண்டித்து,

சதியிடம் “போகலாம்… வண்டியை எடு…” என்றாள் தைஜூ…

இவளை விட்டுத்தான் பிடிக்கணும் என்றெண்ணிய சதி, வேறெதுவும் அவளோடு வாயடிக்காமல் நேரே தன் வீட்டிற்கு சென்றாள்…

“என்னடி இங்க கூட்டிட்டு வந்திருக்குற?...” என்ற தைஜூவிடத்தில்

“பின்ன நான் மட்டும் டெய்லி அங்க வரேன்ல… ஒருநாள் நீ இங்க வந்தா தான் என்னவாம்?...” என்றாள் சதி…

“அதுக்கில்லடி… நான் என்ன சொல்ல வரேன்னா…” என இழுத்தவளை கைபிடித்து இழுத்து உள்ளே அழைத்துச் சென்றாள் சதி…

“வாம்மா… தைஜூ… எப்படி இருக்குற?... என்ன இந்த வீட்டுப்பக்கம் வரவே மாட்டிக்குற?...” என வரவேற்று கேள்வி கேட்ட பிரசுதியிடம்,

“நல்லா இருக்குறேன் ஆன்ட்டி… வரணும்னு நினைப்பேன்… அப்புறம் எதாவது வேலை வந்துடும் அதான் வர முடியலை…” என தைஜூ மழுப்ப,

“அடிப்பாவி…..” என்பது போல் பார்த்தாள் சதி தைஜூவை…

“சரி.. சரி… உட்காரு… நான் நீங்க சாப்பிட எதாவது எடுத்துட்டு வரேன்…” என அவர் நகர்ந்த போது,

“நானும் வரேன் ஆன்ட்டி…” என்றாள் தைஜூ…

“ஏன்மா… நீ சதியோட பேசிட்டிரு… நான் எடுத்துட்டு வரேன்…”

“இல்ல ஆன்ட்டி… இவளோட தான எப்பவும் பேசிட்டு இருக்குறேன்… இன்னைக்கு உங்க கூட பேசுறேனே ப்ளீஸ்…” என அவள் கெஞ்ச,

“நல்லப்பொண்ணு தான் நீ…” என சிரித்தவர், “வா…” என அவளின் கைப்பிடித்து சமையலறைக்குள் சென்றார்…

“இதோடா… முடியலை… இவங்க பாசம்…” என கலாய்த்தவள் டீவியை ஆன் செய்து பார்த்துக்கொண்டிருக்கையில் கார் சத்தம் கேட்க, ரிமோர்ட்டை அப்படியே சோபாவில் போட்டுவிட்டு அவள் வாசலுக்கு ஓட, அங்கே தட்சேஷ்வர் வரவும் சரியாக இருந்தது…

“அப்பா……………………..” என ஓடி வந்து தன்னை அணைத்துக்கொண்ட மகளை வாஞ்சையுடன் வருடிக்கொடுத்தவர்,

“சதி…. எப்படி இருக்குறடா?.... நீ நல்லா இருக்குறல்ல…” என கேட்டுவிட்டு அவளை ஆராய, அவள் சிரித்தாள்…

“என்னப்பா இது… ஒருவாரம் தான வெளியூர் போயிருந்தீங்க… அதுக்குள்ள இத்தனை தவிப்பா… எனக்கெதுவும் இல்லப்பா… பாருங்க… நல்லா தான இருக்குறேன்… நீங்க ஊருக்கு போறப்போ இருந்த அதே கண்ணு, மூக்கு,…” என அவள் சொல்லிக்கொண்டிருக்கையிலே,

“அந்த வாயும் அப்படியேத்தான் இருக்கு… மாறவே இல்லை…” என பிரசுதி வர,

“அப்…………..பா…………………….. பாருங்கப்பா………. அம்மாவ….” என சிணுங்கிக்கொண்டே சலுகையாய் தனது தோள் சாய்ந்த மகளின் செயலை பார்த்து மகிழ்ந்தார் அவர்…

“அவகிடக்குறாம்மா…” என்றவரின் கண்கள் மட்டும் மகளின் விரிந்த புன்னகையில் அப்படியே நிலைத்து நின்றது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.