(Reading time: 22 - 44 minutes)

டேய்… எங்கடா இருக்குற?... போன் பண்ணினா எடுக்கமாட்டீயா?...” என்ற இஷானின் குரலில் கடுப்பு நன்றாகவே தெரிந்தது…

“கவனிக்கலை…” என்ற ஒற்றை பதிலில் மேலும் கடுப்பானவன்,

“இருடா… டேய்… உன்னை வந்து பேசிக்கிறேன் நான்…” என்றபடி அழைப்பினை துண்டித்தவன், அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஜெய் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான்…

சோமநாதன் வந்து கதவைத்திறந்ததும், கைகள் தானாய் அவருக்கு சல்யூட் அடுத்து சார்… என்க, “இஷான்… இது வீடு… நான் இங்க கமிஷனர் இல்லை… என் பிள்ளைக்கு அப்பா… சரியா… உள்ளே வா…” என அவளை வர சொல்ல,

“சரி அங்கிள்..” என்றபடி அவனும் வந்தான்….

“என்ன சாப்பிடுற?... சொல்லு…” என அவர் கேட்க,

“அதெல்லாம் எதுவும் வேண்டாம் அங்கிள்… உங்க இரண்டு பேரையும் பார்த்து ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் வந்தேன்…” என்றான் அவன்…

“என்னடா விஷயம்….” என்ற ஜெய்யிடத்தில்,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

“எனக்கும் தைஜூவிற்கும் நாளைக்கே நிச்சயதார்த்தம் முடிவு பண்ணியிருக்காங்க… நீயும் அங்கிளும் கண்டிப்பா வரணும்… அதை சொல்லிட்டு போக தான் வந்தேன்…” என இஷான் சொன்னதும்,

“ஹேய்… கங்கிராட்ஸ்டா…” என்றபடி ஜெய் அவனுக்கு கைகொடுக்க, அவனும் பதிலுக்கு கைகொடுத்து சிரித்தான்…

“வாழ்த்துக்கள் இஷான்… சீக்கிரமே குடும்பஸ்தனா ஆகப்போற… குட்… குட்…” என சோமநாதனும் சொல்ல, பதிலுக்கு “தேங்க்ஸ் அங்கிள்…” என்றபடி சிரித்தான் இஷான்…

“பரவாயில்லடா… இவ்வளவு சீக்கிரம் நீ வீட்டுல சொல்லி நிச்சயதார்த்தம் வரைக்கும் போவேன்னு நான் எதிர்ப்பார்க்கலைடா… நிஜமாவே நீ தான் வீட்டுல சொன்னீயா?... எனக்கென்னமோ அப்படி தோணலையே…” என்ற ஜெய் அவனை ஒரு சந்தேகத்தோடு பார்க்க,

“போலீஸ்காரன் மூளை சரியாதான் இருக்குடா உனக்கு… நீ சொல்லுற மாதிரி நான் இதுக்கு காரணம் இல்லை… எல்லாம் என் தங்கச்சி குட்டி பிசாசு தான்…” என்றான் இஷான்…

“ஓ…” என்பதற்கு மேல் வேறெதுவும் ஜெய் சொல்லாமல் இருக்க,   

“சதி… என்னப்பா செஞ்சா?...” என சோமநாதன் தான் கேட்டார்…

அதுவா அங்கிள் என்றவன், சற்று முன்பு நடந்ததை அவர்களிடத்தில் சொல்லலானான்…

நீங்க தான் உங்க முடிவை சொல்லணும்…” என்ற இஷானிடம்,

“அப்படி சொல்லுண்ணா பளிச்சின்னு இது தான் உன் முடிவுன்னு… சூப்பர்…” என அவள் கைதட்ட, புரியாமல் விழித்தான் இஷான்…

“சதி சும்மா இரு…” என தங்கையை சற்று அதட்டியவன்,

“சாரி ஆன்ட்டி… அவளுக்கு இந்த விஷயம் முதலிலேயே தெரியும்… இன்ஃபாக்ட் அவளுக்கும் ஜெய்க்கும் மட்டும் தான் தெரியும் நான் உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சது… ஆனா அதெல்லாம் தெரிஞ்சும் ஏன் இன்னைக்கு அம்மா அப்பா கூட சேர்ந்து என்னை இப்படி ஒரு நிலைமையில நிக்க வச்சான்னு தான் எனக்கு தெரியலை…”

“அவளை ஏண்டா குறை சொல்லுற?... என் பொண்ணை எதும் சொல்லாத சொல்லிட்டேன்…” என சதியின் அன்பு தந்தையும் சொல்ல,

“அப்பா அவ உங்க பொண்ணு மட்டும் இல்ல… என் செல்ல தங்கச்சியும் தான்… என் தங்கச்சிய அதட்டவோ, திட்டவோ, கிண்டல் பண்ணவோ எல்லாத்துக்கும் எனக்கு உரிமை நிறையவே இருக்கு…” என சொல்ல, பிரசுதி மனதிற்குள் சபாஷ் போட்டுக்கொண்டார் மகனை எண்ணி…

அதை அவரின் விழிகள் சொன்னதோ?... சட்டென்று திரும்பிய கணவரின் பார்வை தன்னை சந்திப்பதை உணர்ந்த பிரசுதி, அதை தவறாமல் எதிர்கொண்டார் புன்னகையுடன்…

“என்ன அண்ணா சொல்லுற?... நீ லவ் பண்ணுறேன்னு எங்கிட்ட எப்போ சொன்ன நீ?... லவ் பண்ணுற பொண்ணு அவகிட்டயே சொல்லாதவனாச்சே நீ…” என அவள் பாவம் போல கேட்க

“சதி… ப்ளீஸ்… நேரம் காலம் தெரியாம விளையாடாத…” என்றான் அவன் பொறுமையை இழுத்து பிடித்துக்கொண்டு…

“நான் எங்க விளையாடுறேன்… நீ தான் என் மேல பழியை தூக்கி போடுற அண்ணா… நீ லவ் பண்ணுறன்னு எனக்கே இப்போதான் நீ சொல்லித்தான் தெரியும்…” என அவள் விழிகளை உருட்ட,

“சதி… நான் உங்கிட்ட வார்த்தையால சொல்லலை தான்… ஆனா, உனக்கு தெரியும் நான் அவளை விரும்புறேன்னு…” என்றவனிடத்தில்,

“அய்யய்யோ… இதென்னடா இப்படி பட்டுன்னு சொல்லிட்ட.. உனக்கே இது அநியாயமா தெரியலையா?... நீயும் சொல்லலைன்னு சொல்லுற… அப்புறம் எனக்கு தெரியும்னும் சொல்லுற… என்னடா அண்ணா உன் போலீஸ் லாஜிக் இது?...” என நொந்து கொண்டவளின் காதை திருகி, “

“ஹே… போதும்டி… என் பிள்ளையை ரொம்ப கலாய்க்காத… போதும்…” என்று பிரசுதி சிரிக்கவும்,

“உன் பிள்ளையை இன்னும் கொஞ்ச நேரம் பதட்டத்துல வைக்கலாம்னு நினைச்சேன்… கடைசியில இப்படி சிரிச்சு கவுத்துட்டீயேம்மா….” என சதி ராகம் பாட, அங்கிருந்த அனைவரின் முகத்திலும் சிரிப்பு ரேகைகள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.