(Reading time: 10 - 20 minutes)

07. பைராகி - சகி

bhairagi

நிகழும் நிகழ்வானது மனதினை குழப்புவதாக தோன்றினால்,மனதினை மௌனமாக்குங்கள்!!!நினைவுகளை நிர்மூலமாக்குங்கள்.மனிதப்பிறவியே குழப்பங்களின் துளியாகும்!!எந்த அறிவியல் முன்னேற்றமும் மனதின் கேள்விகளை எதிர்க்க துணிவுக்கொண்டதில்லை.குழப்பங்களை எதிர்கொள்ள அமைதி என்ற கருவியே ஆயுதமாகலாம்!!!

"என்னக்கா?ரொம்ப பிஸியா கிளின் பண்றீங்களா?"-சிவனே என்று தன் பணியை செய்துக் கொண்டிருந்த கௌரியை வம்பிழுத்தான் ஆதித்யா.

"பார்த்தா எப்படி தெரியுது தம்பி?"

"மனசுக்குள்ள என்னை திட்டி தீர்க்கிறன்னு தெரியுது!"

"நானும் காலையில இருந்து பார்க்கிறேன்!நான் என் வேலை செய்தாலும்,என்னை தொந்தரவு பண்ணிட்டே இருக்க!இங்கே எத்தனை பேர் இருக்காங்க!அவங்க எல்லாம் உனக்கு தெரியவே மாட்டாங்களா?"

"அது என்னவோ உன்னை சீண்டணும்னா ஜாலியா இருக்குக்கா!"

"தெய்வமே...!!உன்னை பெரிய தொழிலதிபர்னு சொன்னாங்க!குழந்தைகளோட மோசமா சேட்டை பண்ற!"

"அதான் ஐயா ஸ்பெஷாலிட்டி!"

"கொஞ்ச நேரம் என்னை என் வேலையை செய்ய விடுறீயா?"

"ரொம்ப கெஞ்சுற!கேரி ஆன்!எங்கே நம்ம யாத்ரா..."-என்று யாத்ராவை தேடினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

அவள் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு ஒரு அறைக்குள் நுழைந்தாள்.

"மாட்டிக்கிட்டா!!"-என்று எழுந்து அந்த அறையை நோக்கி நடந்தான் ஆதித்யா.

அவள் அந்த அறையில் ஒரு நாற்காலியில் ஏறிக்கொண்டு புகைப்படங்களை மாட்டிக் கொண்டிருந்தாள்.

சத்தமில்லாமல் சென்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

"கொஞ்சம்..லெப்ட்!"-என்ற அவனது குரலில் தடுமாறி விழ போனவளை,பூப்போல தாங்கினான் ஆதித்யா.

புவியின் ஈர்ப்பால் நிலம் தாங்க வேண்டியவளை அவனது கரம் தாங்கியது.

சிலையென ஸ்தம்பித்துப் போனாள் யாத்ரா.மெல்ல அவளை இறக்கிவிட்டவன்,அவளை தன் கைகளால் கட்டிப்போட்டான்.

மௌனமாகவே இருந்தனர் அவர்கள்!!!எவ்வளவு நேரம்??நீண்ட நேரமாய்...

"விடுங்க.."-மௌனத்தை கலைத்தாள் யாத்ரா.

அப்போது தான் சுயநினைவிற்கு வந்தான் ஆதித்யா.

"மாட்டேன்!"

"ப்ச்..விடுங்க!"

"உன்னை விடவே தோணலை!இப்படியே இருக்க தோணுது!"

"என்னாச்சு உங்களுக்கு?"

"எனக்கென்ன?"

"கொஞ்ச நாளா நீங்க வித்தியாசமா நடந்துக்கிறீங்க!"

"என்ன?"

"ஏன் நான் உங்களைவிட்டு போறா மாதிரியே பேசுறீங்க நீங்க?"-மனதின் குழப்பங்கள் அவளிடம் பகிர வெளி வர நினைத்தன...

"உன் மேலே இருக்கிற காதல் வெளியே வருது செல்லம்...வேற ஒண்ணுமில்லை!"-அவள் இதழோரம் புன்னகை தவழ்ந்தது!!!

"ரொம்ப அதிகமா வருது!சீக்கிரம் தீர்ந்துவிடப் போகுது!"

"அதான் புதுப்பிக்க நீ இருக்கியே!"-என்று அவளது நெற்றியில் செல்லமாக முட்டினான் ஆதித்யா.

"போதும்...விடுங்க!"

"ம்ஹூம்!"

"யாராவது வந்துவிட போறாங்க!"

"வரட்டும்..."

"ஐயோ!விடுங்க!"-ஒரு வழியாக அவளை விடுவித்தான் ஆதித்யா.

தனது முகத்தை திருப்பிக் கொண்டான்.

"என்ன?"

"போ!பக்கத்துல கூட வர விட மாட்ற!"

"என்ன நீங்க...சின்ன குழந்தை மாதிரி!நிலைமையை புரிந்துக்கோங்க!"

"............."-யாத்ரா அவனது கன்னத்தில் தனது இதழை பதித்தாள்.முகத்தில் புன்னகை பூக்க திரும்பியவனை பார்த்து தவைக்குனிந்தப்படி,

"ஐ லவ் யூ!"என்றாள்.

"............"

"சரி...இப்போ போங்க!"

"ஏ...நீ மறுபடியும் கீழே விழுந்தா யார் பிடிப்பா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.