(Reading time: 10 - 20 minutes)

"விழும் போதும் குரல் கொடுக்கிறேன்!இப்போ போங்க!"-அவனை வெளியே தள்ளி கதவை தாழிட்டாள் யாத்ரா.

முகம் எல்லாம் நாணம்!!

எவ்வளவு அன்பை பொழிக்கின்றான்...இந்தப் பந்தம் நிச்சயம் இறைவனின் ஆசி தான்!!என்றது பெண்மனம்.

நீண்ட நேரமாய் வெளியே நின்றவன்,வெறுப்பாகி,மாடிக்கு சென்றான்.இன்னும் அங்கு சுத்தம் செய்யாமல் தூசு மண்டி இருந்தது.

ஆனால்,அவ்விடம் மிக நேர்த்தியாக இருந்தது.எங்கோ பார்த்த உணர்வு மனதுக்குள்!!வண்ணங்கள் யாவும் ஔி குன்றாமல் புதியதாய் பூசப்பட்டது போல இருந்தன.

அவற்றை பார்த்தப்படி நடந்தவனின் கண்களில் எதிரே பெரிய அறை ஒன்று தென்பட்டது.

அவனுக்கும்,அறைக்கும் இடையே தடுப்பாய் இருந்த தூசுகளை தகர்த்தான் ஆதித்யா.

அக்கதவில் ஆதவனின் சின்னம் பொறிக்கப்பட்டு,கம்பீரமான தோற்றம் கொண்டிருந்தது.

அறையின் முன் இரு சிங்க சிலைகள் காவலாளிகள் போல நின்றிருந்தன.

அந்த கதவில் கரம் பதித்து கண்களை மூடினான் ஆதித்யா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மனோஹரியின் "காதல் பின்னது உலகு" - கல்யாணமாம் கல்யாணம்…

படிக்க தவறாதீர்கள்... 

"ராஜகுமாரர் ஆதித்ய வர்மர் வருகை தருகின்றார்!"-என்ற முழக்கமும்,பலரின் கோஷங்களும் செவிகளில் ஒலித்தன....

சட்டென கண்களை திறந்தான்.

கதவை தள்ள,அது 'கீறிச்' என்ற சப்தத்தோடு திறந்துக்கொண்டது.

மிகவும் விசாலமான அறை அது!!

அதில் மட்டுமே அவனது இல்லத்தின் பாதியை அடைத்துவிடலாம் என்று தோன்றியது அவனுக்கு!!இருள் மண்டி இருந்தது.

"தம்பி!"-கௌரியின் குரலில் கலைந்தான் அவன்.

"என்ன தம்பி பார்க்கிறீங்க?"

"இந்த ரூமை கிளின் பண்ணுங்க!"-அவள் கேள்வியோடு ஒரு பார்வை பார்த்தாள்.

"இனி இதான் என் ரூம்!"-அவனது குரல் சற்றே அதிகாரமாய் ஒலித்தது.

"சரி...தம்பி!"-உதவிக்கு சில ஆட்களை அழைத்து வர நகர்ந்தாள் கௌரி.

அந்த அறையை நோட்டமிட்டான் ஆதித்யா.

அழகிய ஓவியங்கள் பழங்கால பலகைகளில் தீட்டப்பட்டு அறை முழுதும் நிரம்பி இருந்தன.நிறம் மாறா ஓவியங்கள்!!!அதிலிருந்த ஓவியம் ஒன்றை கையில் எடுத்தான் ஆதித்யா.தூசு படிந்திருந்த பலகையை துடைத்தான்.

அதிலிருந்தது ஒரு அழகிய பெண்ணின் உருவம்!!!

அவள்,அதிகாலையில் நதிக்கரையில் வீணை மீட்டியப்படி பாடல் பாடி கொண்டிருந்தாள்.

அவளது வதனத்தில் சொக்கி தான் போனான் அவன்.ஆனால்,பழங்கால உடையில் வரையப்பட்டிருந்த அக்கன்னிகையின் அடையாளத்தை அவனது புத்தி காட்டிக் கொடுக்க தவறியது.

அன்றிரவு...

அவனது அறை மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

மெத்தையில் சாய்ந்தப்படி எதிரில் மாற்றப்பட்டிருந்த ஓவியங்களையே நோட்டமிட்டு கொண்டிருந்தான் ஆதித்யா.

எங்கோ பார்த்த உணர்வு!!!ஒரு வித பந்தம்!அந்த ஓவியங்களுக்கும்,அவனுக்கும் இடையே ஒரு வித பிணைப்பு!!!விளக்க இயலாத பிணைப்பு!!

"ம்கூம்!"-யாரோ தொண்டையை செறுமினர்.

"ஹனி!"

"வரலாமா?"

"ஏ...லூசு!என்ன கேட்டுட்டு இருக்க?இதுவும் உன் ரூம் தானே!"-அவள் அவனருகே வந்தமர்ந்து,

"என் ரூமா?"என்றாள்.

"ம்...எனக்கு சொந்தமானது எல்லாம் உனக்கு சொந்தம்!உனக்கு சொந்தமானது எல்லாம் எனக்கு சொந்தம்!அதான்....சரி...என்ன விஷயம்?"

"உங்களுக்கு பால் கொடுத்து அனுப்பினாங்க!"

"கொடுத்து அனுப்பினாங்களா?இல்லை...என்னை பார்க்க சாக்கு தேடி நீயே வாங்கி வந்தியா?"

"ம்..எனக்கு சொந்தமானவரை பார்க்க நான் ஏன் சாக்கு தேடணும்?"

"ம்கூம்...எனக்கேவா!

"ம்.."-அவனது கவனம் மீண்டும் ஓவியத்தில் பதிந்தது.யாத்ரா திரும்பி அதனை பார்த்தாள்.

"என்ன பார்க்கிறீங்க?"

"அதோ!அங்கே அந்த பொண்ணோட பெயிண்ட்டிங்!எவ்வளவு அழகா இருக்கா பார்!"

"ஹலோ!"

"ம்?"

"நான் இருக்கும் போதேவா?"

"நீ இருந்தா என்ன?கொஞ்சம் தள்ளு...மறைக்குது!"-அவள் நேராக சென்று அந்த ஓவியத்தை கழற்றினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.