(Reading time: 10 - 20 minutes)

"ன்ன பண்ற?"

"இது இனி உங்க கண் முன்னாடியே இருக்க கூடாது!"

"என்ன ஒரு வில்லத்தனம்!மேடம்...இந்த ரூம்ல இருக்கிற பாதி பெயிண்ட்டிங் இந்த பொண்ணோடது தான்!திரும்பி பாருங்க!"-அவள் அறையை நோட்டமிட்டாள்.

"அநேகமாக இந்த கோட்டையை கட்டினவனுடைய லவ்வர்னு நினைக்கிறேன்!"

"..............."

"ரொம்ப அழகான ஜோடியா இருந்திருப்பாங்க!நம்மை மாதிரியே!"-பின்பக்கமாய் அவளை அணைத்துக் கொண்டான் ஆதித்யா.

அவளது மனம் தன்னில் விளக்க இயலாத ஏக்கம் குடிக்கொண்டது.திரும்பி அவனது நெஞ்சத்தில் தஞ்சம் புகுந்தாள் யாத்ரா.

அவன் ஏதும் பேசவில்லை!!ஒரு புன்னகையோடு அவள் மனம் வேண்டிய ஆறுதலை நல்கினான்.

காதலில் சமர்ப்பணம் என்பது தெய்வீகமானது!!எந்த பந்தமும் இல்லாத வேற்று ஒருவரோடு பிறக்கும் பந்தம் சாதாரண உறவு அல்ல!!!அது ஜென்ம ஜென்மமாய் பிணைந்த பந்தம்!!ஏனைய உறவுகளை ஒரு மனிதனுக்கு நல்கும் இறைவன் அவற்றை தானே தேர்ந்தெடுக்கிறான்!!ஆனால்,அந்த பரமாத்மா காதலை மட்டும் ஒரு ஆத்மாவையே தேர்ந்தெடுத்துக் கொள்ள பரிந்துரைக்கிறான்!!காதலின் விதிக்கு பரம்பொருளும் கட்டுப்பட்டவன் தான்!!அன்று,தேவி ஆதிசக்தியின் காதலுக்கு கட்டப்பட்ட காரணத்தினால்,இறைவன் சங்கர நாராயணன் தனது யோகநிலையை தியாகித்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "பார்த்தேன் ரசித்தேன்" - காதல் கிரிக்கெட்டில் சட்டம் இல்லை, ஒரு சாஸ்திரம் இல்லை, ரன்ஸ் எடுப்பது தான் வேலை...!

படிக்க தவறாதீர்கள்... 

காதலின் சக்தியை பாருங்கள்...

ஆதியோகி ஒருவரையே கட்டுப்பட்டுத்திய காதலை நம்மில் சிலரும் விளையாட்டாக எண்ணுகின்றனர்.எண்ணட்டும்...

எவ்வளவு எல்லைக்கு செல்வார்கள்??

காதல் எல்லையற்றது....

மெல்ல அவனது அணைப்பினை நீங்கினாள் யாத்ரா.

இரு கண்களும் ஒன்றை மற்றொன்று கட்டுப்படுத்தி ஸ்தம்பித்துப் போயின.

ஆதித்யா அவளது கரத்தோடு தனது கரத்தை பிணைத்துக்கொண்டான்.

அந்தப் பிணைப்பில் சிலிர்த்துப் போனவள்,நிலம் நோக்கினாள்.

இதயத் துடிப்பு இருவருக்கும் உச்சப்பட்சமாய் இருக்க,அவளது கன்னத்தைப் பற்றி அவளை தனதாக்கினான் ஆதித்யா.

சில நொடிகள் தான் வானின் திடீர் இடியோசை அவர்களின் கனவுலகை கலைத்தது.

அவள் அவசரமாய் சிரம் தாழ்ந்தப்படி,அந்த அறையை தியாகம் செய்தாள்.

அவளிடமிருந்து வாங்கிய ஓவியத்தை சுவரில் மாட்டினான் அவன்.அவனறியாமல் ஒருத்துளி கண்ணீர் விழியை விடுத்து நிலம் நனைத்தது.

மறுநாள் காலை....

காலையிலே எங்கோ வெளியே கிளம்பிவிட்டான் ஆதித்யா.

"அம்மா!"

"என்னம்மா?"

"அவர் எங்கே?"

"ஐயாக்கு கிராமத்துல போர் அடிக்குது போல!ஊர் சுற்றிவிட்டு வரேன்னு கிளம்பிட்டான்!"

"சரிங்கம்மா...நீங்க சாப்பிட வாங்கம்மா!"

"நீ சாப்பிட்டியா?இல்லையா?"

"அவர் வரட்டும்மா!நீங்க வாங்க!"

"நீ போடா!இதோ வரேன்!"-யாத்ரா மௌனமாக நகர்ந்தாள்.

நான்காவது முறையாக ஆதித்யாவிற்கு அழைப்பு விடுத்தார் ஜானகி.

"ஸ்வீட்ச் ஆப்!"என்று பதில் வந்தது.

தாய்மனம் சற்றே பதைபதைத்தது.

அப்படி எங்கு சென்று மாட்டிக் கொண்டான் இவன்.

அவனது கார் அந்த மரத்தில் மோதி முன்பக்கம் நசுங்கி இருந்தது.

அவன் ஆசை ஆசையாக தனது சொந்த உழைப்பில் முதலில் வாங்கிய வஸ்து அது!!இன்று,தன்னாலே அதன் ஆயுள் முடிந்ததை கன்னத்தில் கை வைத்தப்படி பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யா.

அவனது உடலில் சில சிராய்ப்புகள்!!

சற்று நேரத்திற்கு முன் நிகழ்ந்தது யாதெனின்....

காரை ஓட்டியப்படி ஊர்மக்கள் செல்ல கூடாது என்று தடை விதித்த வாழை தோட்டத்திற்குள் நுழைந்தவன்,காரை திருப்ப அது மண்சரிவாய் அமைந்தது.

அந்த சரிவில் சிக்கிய அவனது காரை கையமர்த்தி தடுக்க வந்து நொறுக்கிவிட்டிருந்தது அந்த ஆலமரம்!!!

என்றுமில்லாமல் அன்று தெய்வாதினமாய் சீட் பெல்ட்டை அணிந்திருந்ததால்,அவன் நிலையும் கார் போல ஆகாமல் தப்பித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.