(Reading time: 8 - 16 minutes)

…………ப்……பா……………” என்றவள் அவனை விட்டு விலகி துள்ளி எழுந்து நிற்க, அவனும் எழுந்து கொண்டான்…

விருவிருவென்று மகளின் அருகினில் வந்தவர், ஜெய்யை வைத்த கண் வாங்காமல் பார்த்து முறைத்துவிட்டு, மகளின் கையினை பிடித்தார்…

அவளின் கைகளில் ரத்தத்தோடு ரத்தமாய் ஒட்டியிருந்த அவனின் கைக்குட்டையை சட்டென பிரித்தெடுக்க, தன்னையும் மறந்து வலியில் ஷ்……. என்றாள் அவள்…

மகளை ஒருபார்வை பார்த்துவிட்டு, “நல்லதே என்றாலும் அவளுக்கு மத்தவங்க எதுவும் செய்ய வேண்டாம்… பெத்த தகப்பன் நான் பார்த்துப்பேன்… எனக்கு தெரியும் என்ன செய்யணும்னு…” என்றவர் அவனின் அருகே தரையில் அந்த கைக்குட்டையை வீசினார் வேகமாக…

கைக்குட்டை பக்கம் பார்வை செலுத்தாதவனை வியப்போடு பார்த்தவர், “உன் மேல தப்பில்லைன்னு எனக்கு தெரியும்… என் பக்கம் இனி தப்பு நடக்காம நான் பார்த்துக்குறேன்….” என சொல்ல, சதி அதிர்ச்சியோடு தகப்பனின் முகத்தைப் பார்த்தாள்…

பின் ஜெய்யிடம் அவள் பார்வை திரும்ப, அவனோ சிலையென நின்றான்… விழிகளில் எந்த ஜீவனும் இல்லாது ஜடமாய்….

மகளின் பார்வை அவனிடத்தில் இருப்பது புரிந்து, “சோமு தேடுறான்… வா…..” என சொல்லிவிட்டு, சதியின் காயம் பட்ட கையை மேலும் அழுத்தி பிடிக்க, அவளுக்கு வலித்தது…

“அ…..ப்…..பா…………” என வலியில் துடிக்க, அவளோடு வேகமாக அங்கிருந்து திரும்பி நடக்க ஆரம்பித்தார் அவர்….

வலியோடு தகப்பனுடன் நடக்க ஆரம்பித்தவள், திரும்பி திரும்பி அவனையும் பார்க்க, இங்கே அவரின் பிடியோ மேலும் இறுகியது…

“வலிக்குதுப்பா….” என அவளும் வாய்விட்டே சொல்ல, அவர் கண்டுகொள்ளாமல் நடந்தார்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அவளின் வலிக்குதுப்பா என்ற வார்த்தை அவனை கொல்ல, அவளை நோக்கி இரண்டடிகள் வேகமாக முன்வைத்தான் அவன்…

பின்னர் ஆணியடித்தது போல அவன் அசையாது நிற்க, அவன் கைகள் தானாகவே அவளை நோக்கி உயர்ந்தது….

திடீரென அவளும் திரும்ப, அவன் சட்டென தன் கைகளை கீழிறக்கி வேறெங்கோ பார்வையை பதித்தான்…

தட்சேஷ்வர் அவளை அழைத்துக்கொண்டு சென்றதும், அப்படியே விழி மூடி தனது தவிப்புகளை புதைத்துக்கொண்டு நின்றிருந்தவன், மெல்ல அங்கிருந்து நகர முற்பட்ட போது, வீசி எறியப்பட்ட கைக்குட்டை அவனது காலை கட்டிக்கொண்டு நின்றது…

சற்று முன்னர் அவள் அவன் நெஞ்சில் தலை சாய்த்ததை, மனம் தோண்டாமலே எடுத்து நினைவு படுத்திப்பார்க்க, அவனுக்கு அவன் மேலேயே கோபம் வந்தது…

தான் அவளை என்றும் போல் விலக்கியே வைத்திருந்தால் இன்று அவளுக்கு வலித்திருக்காது தானே…. என அவன் துடிக்க,

அவன் உள்ளமோ, இத்தனை நாள் மட்டும் அவளுக்கு நீ என்ன கொடுத்தியாம்?... வலி தானே…. என கேள்வி கேட்க, அவன் துவண்டே போனான்…

“பேசாமல் இருந்தால் என்னடா அர்த்தம்?.. உன்னை விரும்பினதை தவிர வேற என்னடா அவ பாவம் செஞ்சா?... அவளை நீ கண்டுக்காத மாதிரி இருக்குறது தெரிஞ்சிருந்தும் உன்னையே சுத்தி சுத்தி வந்தா… அப்போ எல்லாம் அவளுக்கு வலிச்சிருக்காதுன்னு நினைக்குறீயா?... என்ன ஒண்ணு… அவளுக்கு நீ மனசளவுல வலி கொடுத்திட்டிருந்த… இன்னைக்கு அவ அப்பா, அவளோட உடலில் பட்ட காயத்தோட வலி கொடுக்குறார்… அவ்வளவுதான் வித்தியாசம்…”

“அதுக்கும் மேல பொத்தி பொத்தி வளர்த்த காதலை இன்னைக்கு உங்கிட்ட சொன்ன அந்த பொண்ணை நீ பேசாமலேயே சாகடிச்ச… அந்த மிருகம் அவ கழுத்துல கத்தி வச்சி சாகடிக்க நினைச்சான்… இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்குன்னு நினைக்குற நீ?..”

“இத்தனை நாள் நீ அவளுக்கு கொடுத்தது வலி மட்டும் தான்… அதை நீ எப்போ புரிஞ்சிக்கப்போறன்னு தான் தெரியலை…” என அவன் மனம் அவனை கேள்விகளால் இருதுண்டாக்க, அவன் குனிந்து தன் காலை கட்டியிருந்த கைக்குட்டையை எடுத்தான்…

இருகைகளாலும் அதைப்பிடித்துக்கொண்டு கொஞ்ச நேரம் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தான்…

“எனக்குள்ள இருந்துட்டு உனக்கே என் மனசு புரியலைங்கிறப்போ, இனி வேறென்ன இருக்கு நான் சொல்லுறதுக்கு?...” என தன் மனதிற்கு பதிலளித்தவன் அது அடுத்து பேசுவதற்குள் அங்கிருந்து நகர்ந்து சோமநாதனை தேடிச் சென்றான்…

பின்னர் இருவரும் பிரசுதியிடம் சொல்லிவிட்டு கிளம்பிச்செல்ல, தைஜூவின் குடும்பமும் கிளம்பினர்…

றுநாள் காலை, வழக்கம் போல் ஜெய் ஜாக்கிங்க் போக பார்க் வர, அங்கே அவள் வழக்கமாக அமரும் இடத்தில் இல்லை… தைஜூவும் இல்லாது அவளும் இல்லாது அந்த இடம் வெறுமையாக இருந்தது…

மனதிற்குள் எதுவோ ஒன்று உறுத்த, எதையும் கண்டு கொள்ளாதவாறு அவன் தன் ஜாக்கிங்கை தொடர, அவள் இருக்குமிடம் தாண்டி அவன் சென்றபோது அவனை அறியாமலே அவனது கால்கள் நின்றது…

தன்னையும் மறந்து குனிந்து முழங்கால்களை பிடித்துக்கொண்டு, அவன் நிற்க,

“தேடும் கண் பார்வை தவிக்க…. துடிக்க…..” என்ற பாடல் அவன் செவிகளை எட்டிய வேளை, சட்டென நிமிர்ந்தான்…

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:1001}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.