(Reading time: 15 - 30 minutes)

10. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

ட்டென நிமிர்ந்தவனின் பார்வை பத்தடி தூரத்தில் பெஞ்சில் அமர்ந்திருந்த சோமநாதனின் வயதை ஒத்த ஒருவரிடம் சென்று தஞ்சம் புகுந்தது…

அவன் பார்ப்பதை உணர்ந்ததும், சிரித்துக்கொண்டே வா என அவர் அழைக்க அவனும் அவரின் அருகில் சென்று அமர்ந்தான்…

“ஹாய் அங்கிள் என்ன பாட்டெல்லாம் பலமா இருக்கு…”

“மை டியர் யங்க் பாய்… அது என் மனைவி நியாபகம் வந்தது… அதான்…”

“ஓ…” என்றவனின் குரல் அவர் சொன்னதை நம்பாத தொனியில் ஒலிக்க, அவரோ சிரித்தார்…

“எதுக்கு அங்கிள் சிரிக்குறீங்க?...”

“நீ என்னை சஸ்பெக்ட் பண்ணுறல்ல மை பாய்?….” என கேள்வியோடு அவர் நிறுத்த, அவனோ பதிலுக்கு எதுவும் பேசவில்லை….

சில நொடிகளுக்குப் பிறகு, “அதெல்லாம் எதுவுமில்லை அங்கிள்… சரி நான் வரேன்…” என எழப் போனவனை தடுத்து நிறுத்தியவர்,

“எதுவுமே இல்லன்னு அதோ அங்க பார்த்து சொல்லு….” என அவர் கைகாட்டியதும், அத்திசையில் பார்த்தவனது கண்கள் சில நொடிகள் என்றாலும் மகிழ்ச்சியை சிந்த தான் செய்தது…

அங்கே தைஜூவுடன் அவசரம் அவசரமாய் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தாள் சதி…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அவளைக் கண்டதும், அவனது கண்கள் வேகமாய் அவளது கரத்தில் பதிய, சிறிய கட்டொன்று போட்டிருந்தது தெரிந்தது…

வேக வேகமாய் வண்டியை நிறுத்திவிட்டு, பார்க் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தவள்,

“பாரு…. எல்லாம் உன்னால தான்… சீக்கிரம் வான்னா கேட்குறீயா?... கும்பகர்ணி மாதிரி இழுத்து போர்த்திட்டு எப்ப பாரு தூங்கிட்டே இரு… இன்னைக்கு மட்டும் அவரை பார்க்குறதை நான் மிஸ் பண்ணினேன்னு வை… உன்னை கொன்னுடுவேன் நான் சொல்லிட்டேன்…” என மிரட்ட,

“அதெல்லாம் நீ கொல்லமாட்ட….” என்றாள் தைஜூ வெகு சாதாரணமாய் நடந்தபடி…

“உன்னை உள்ள போய் பேசிக்கிறேன்… ஏற்கனவே லேட் இதுல ஆடி அசைஞ்சு வேற வரீயா?... வந்து தொலைடி சீக்கிரம்…” என பேசிக்கொண்டே பூங்காவினுள் அடி எடுத்து வைத்தவளுக்கு, சட்டென உள்ளூர இதம் பரவ,

தன்னையும் அறியாமல் அவள் விழிகள் அங்கும் இங்கும் சுழன்றது…

“என்னடி எதுக்கு இப்படி கண்ணை உருட்டி அப்படியே ஃப்ரீஸ் ஆன மாதிரி நிக்குற?...”

“இல்ல… அவர் இங்க எங்கேயோ….” என சொல்லிக்கொண்டே மீண்டும் பார்வையை அவள் அங்கும் இங்கும் சுழற்ற,

“ஆமா… அவர் இங்க எங்கேயோ தான் இருக்குறார்…” என்றாள் தைஜூ கைகளைக் கட்டிக்கொண்டே….

“என்ன சொல்லுற தைஜூ?...” என விழித்தவளிடம்,

“மெதுவாடி மெதுவா.. கண்ணு கீழே விழுந்துட போகுது…” என சொல்லி சிரித்தவள்,

“அண்ணாவோட பைக் வாசலில் தான் நிக்குது…” என வெளியே கண்ணைக் காட்ட, சதியின் முகத்திலோ பெரும் நிம்மதி வந்திருந்தது…

எங்கே வராது போயிடுவானோ என எண்ணி தவித்தவள் இப்போது சற்றே ஆசுவாசமடைந்தாள்…

“ஆமா நீ அண்ணாவோட பைக்கை பார்க்கலையா?...”

“இல்ல தைஜூ…”

“சரியாப்போச்சு… உனக்கு எங்க அதெல்லாம் கண்ணுக்கு தெரியப்போகுது…. அதான் அண்ணா வாசனை ஒன்னு உங்கிட்ட அவர் வர்றதை சரியா சொல்லிடுதே… பின்ன என்ன?...” என கேலி பண்ண சதி சிரித்தாள்…

“நானும் ஒருவருஷமா பார்க்குறேன்… அவர் பார்க்கிற்குள் வர்றார்னு உன் வெட்கப்பட்ட சிரிப்பே சொல்லிடும்… தலையை குனிஞ்சிட்டு தான் இருப்ப… ஆனாலும் கரெக்டா கண்டுபிடிச்சிடுவ… அதே மாதிரி இன்னைக்கு உனக்கு முன்னாடியே அவர் வந்திருப்பார்ன்னும் சொல்லுற… ஆனாலும் நீ அண்ணனை இவ்வளவு காதலிக்கக்கூடாது சதி…” என்றவள் தோழியின் கன்னம் பிடித்து கொஞ்ச,

“ஹேய்… விடுடி…” என அவளிடமிருந்து விலகிக்கொண்டு,

“வா… அவர் எங்க இருக்குறார்னு பார்க்கலாம்… இன்னைக்கு அவர்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு…” என்றதும், தைஜூ புரியாமல் அவளை பார்த்தாள்…

“நேத்து பேச போறன்னு சொன்ன… லவ்வை சொல்லப் போறன்னு சொன்ன… ஆனா எதுவுமே நடந்த மாதிரி தெரியலை… இந்த லட்சணத்துல இன்னைக்கு மறுபடியும் ஒரு அட்டெம்ப்ட்டா?...” அவளின் கேள்விக்கு பதிலை சொல்லாமல்,

“நீ ஃபர்ஸ்ட் வாடி… தேடலாம்… அப்புறமா மிச்சத்த பேசிக்கலாம்… வா…” என தைஜூவின் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு போனாள் சதி…

“என்ன யங்க் பாய்… என்னாச்சு?... அவசரம் அவசரமா எதுக்கு இப்போ செடி பின்னாடி மறைஞ்சிருக்க?...”

“அங்கிள்… ப்ளீஸ்… நான் இங்க இருக்குறேன்னு காட்டிக்காம போங்க… ப்ளீஸ் அங்கிள்…” என அவன் கெஞ்ச,

“ஓகே…” என தோளைக்குலுக்கியவரும், அங்கிருந்து அகன்று தனது உடற்பயிற்சியை ஆரம்பித்த போது இஷான் வந்தான்…

“ஹலோ அங்கிள்… நீங்க ஜெய்யைப் பார்த்தீங்களா?...”

“ஹாய் இஷான்… நான் பார்க்கலையே…”

“பார்க்கலையா?... ஹ்ம்ம்… சரி அங்கிள்… நீங்க கண்டின்யூ பண்ணுங்க… நான் அந்த பக்கம் போய் பார்க்குறேன்…” என அவன் நகர்ந்ததும், அவர் மெல்ல சிரித்துக்கொண்டார்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.