(Reading time: 15 - 30 minutes)

ண் மூடி இரு கை விரித்து அவளுக்கு எதிரே இருந்த பெஞ்சில் சாய்ந்து கண் மூடி சாய்ந்திருந்தான் அவளது ஆருயிர் காதலன்…

சட்டென்று அவனருகில் சென்றவள், அவன் கண் மூடி இருக்கும் விதத்தை ரசித்துக்கொண்டிருந்தாள்…

“நீ இப்படியே பார்த்து ரசி…. அப்புறம் பேசுறதுக்குள்ள போயிட்டாரேன்னு உட்கார்ந்து ஃபீல் பண்ணு… உனக்கு இதே வேலையா போச்சுடி சதி… என்னமோ செஞ்சு தொலை…” என அவள் மனம் அவளை வசைபாட ஆரம்பிக்க, அதை ஓரங்கட்டிவிட்டு, அவனின் தவத்தினை கலைக்க ஆயத்தமானாள்…

அவனிடம் பேச ஆரம்பிக்கும் முன், சுற்றும் முற்றும் பார்க்க, அங்கே அவர்களைத் தவிர இன்னும் ஒருவர் மட்டுமே இருந்தார்… அவரும் அங்கிருந்து வெளியேற, அதற்காகவே காத்திருந்தது போல்,

அவன் அணிந்திருந்த டீசர்ட் காலரை பிடிக்க, சட்டென கண் திறந்தான் அவன்…

யார் பார்த்திட கூடாது, யார் கண்ணில் பட்டுவிடக்கூடாது என செடிக்கு பின்னால் மறைந்து மறைந்து வாசலுக்கு வந்து வேகமாய் பைக் எடுத்துக்கொண்டு வந்தானோ, இப்போது அதற்கெல்லாம் கொஞ்சமும் பலனில்லாமல் போனது போல் இருந்தது…

தன்னைப் பார்க்கத்தான் வந்தாள் என்று தெரிந்திருந்தும் அவள் பார்வையில் பட்டுவிடக்கூடாது என்று ஒதுங்கி, வேதனையுடன் பைக்கில் வந்தவனின் கண்ணில் இப்போது அவன் அமர்ந்திருக்கும் பார்க் தட்டுப்பட, அதனுள் சென்று கண் மூடி அமர்ந்து கொண்டான்…

இந்நேரம் என்னை காணாமல் தவித்திருப்பாளே… மலர் போன்ற அவளது முகம் வாட நான் காரணமாகிவிட்டேனே…. என நொந்து போய் அமர்ந்திருந்தவனது சட்டையை யாரோ பற்றுவது போலிருக்க, பட்டென்று விழி திறந்தவனது முன்னே இருந்தாள் அவள் கோபத்துடனும், முகத்தில் படர்ந்திருந்த நாணத்தை மறைக்க முற்பட்டபடியும்…

திடீரென்று அவளைக் கண் முன் கண்டவனுக்கு தன்னையும் அறியாது நெஞ்சில் அமைதி பரவ, அப்படியே அதில் சிறிது நேரம் மிதந்தான் அவன்…

அவளின் அழுத்தம் அதிகரிக்க, மெல்ல அதிர்ச்சியிலிருந்து வெளிவந்தவன், அவளை விட்டு விலக முயற்சிக்க, அவள் பிடி இறுகியது…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜோஷினியின் "ஹேய்... சண்டக்காரா" - இது ஒரு காதல் சடுகுடு...

படிக்க தவறாதீர்கள்...

“எங்க தப்பிக்க பார்க்குறீங்க?... பேசாம உட்காருங்க… எந்திக்க ட்ரை பண்ணீங்க… அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது…” என அவள் விழிகளை உருட்ட, துளியும் அதில் கோபம் தெரியவில்லை… மாறாக அவன் மீதான காதல் தான் கரை புரண்டாடியது…

அதைக்கண்டவனுக்கோ மனதினுள் தென்றல் வீச ஆரம்பிக்க, முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் மௌனமாக இருந்தான்…

“என்ன அமைதியா இருக்கீங்க?... இன்னைக்கும் எதுவும் பேசாம அப்படியே எஸ்கேப் ஆகிடலாம்னு போலீஸ்காரர் மூளை வேலை செய்யுதா?...”

“…….”

“எது எப்படி ஆனாலும் சரிதான்… இனி நான் மாறமாட்டேன்னு சொல்லிட்டு போகத்தான் வந்தேன்… நல்லாக் கேட்டுக்கோங்க… என்னால உங்களை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது….”

“…………..”

“இப்போ இப்படி பேசுறவ நேத்து அப்பா கைப்பிடிச்சு இழுத்து போனதும் பின்னாடியே போனதானன்னு நீங்க நினைச்சாலும் அது தப்பில்லை… ஏன்னா அவர் என்னோட அப்பா… எந்த அப்பாவும் பொண்ணோட காதலை உடனே சம்மதம் சொல்லி ஏத்துக்க மாட்டாங்க… அவர் அதை மறுக்குறதுக்கு 100% அவருக்கு உரிமை இருக்கு… அதுல நான் தலையிட மாட்டேன்… ஆனா அதே நேரத்துல என் காதலையும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்…” என அவள் அழுத்தம் திருத்தமாக சொல்ல, அவன் அப்படியே அவளையே பார்த்தான்…

“என்னடா இவ அப்பாக்கும் சப்போர்ட்டா பேசிட்டு தன் முடிவிலேயும் மாற மாட்டேன்னு சொல்லுறேன்னு பார்க்குறீங்களா?...” என அவள் கேட்டதும்,

“உன் அப்பா முடிவில தலையிடமாட்டேன்னு சொல்லுற நீ, என் முடிவிலேயும் தலையிடாத…” என்றான் பட்டென்று…

“ஓஹோ… என்ன முடிவு சார்… உங்க முடிவு… கொஞ்சம் தெளிவா சொல்லுங்க… என் மரமண்டைக்குள்ள ஏத்திக்கிறேன்…” என அவளும் கேலியுடன் சொல்ல,

“நேத்து சொன்னது தான் எப்பவும்… என்னை மறந்துடு… அதுதான் உனக்கு நல்லது…” என்றான் அவன் மிகுந்த அழுத்தத்துடன்…

“மறக்கணுமா?... அப்போ முதலில் நீங்க மறந்துடுவேன்னு சொல்லுங்க…. அப்புறம் நானும் சொல்லுறேன்…”

“நான் யாரையும் நினைவு வச்சிகிட்டா தான மறக்குறதுக்கு…”

“ஓஹோ… அப்படீங்களா?... அதான் நேத்து என்னை மடியில போட்டு அப்படி தவிச்சு போனீங்களா?... உங்க நெஞ்சில கை வச்சு சொல்லுங்க… நான் இங்க இல்லன்னு…” என அவள் பார்வை அவன் மார்பை சுட்டிக்காட்டி சொல்ல, அவன் பதில் பேசாது அவளிடமிருந்து விலக எத்தனித்தான்…

அவள் பிடியும் வலுவாக இருக்க, அவன் அதையும் தகர்த்து அவள் பிடியிலிருந்து திமிறி வெளிவந்தான் அவளை விட்டு விலகி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.