(Reading time: 15 - 30 minutes)

டேய்… அண்ணா… என்ன காணாம போன ஆடு மாதிரி முழிச்சிட்டிருக்குற?..”

“ஹாய்… குட்டி சாத்தான்… என்ன கிண்டல் பண்ணுறது இருக்கட்டும்… ஆமா நீ என்ன இன்னும் புக் எடுத்து படிக்காம இருக்குற?...”

“ஹலோ எங்களுக்கு படிக்கத்தெரியும்…”

“ஓ… அப்படிங்களா மேடம்…” என தங்கையை அடிக்க கையை ஓங்கியவன் தைஜூ வரவும் அமைதியானான்…

“என்ண்டா அமைதியாகிட்ட?..” என திரும்பியவள் தைஜூவை பார்த்ததும்,

“ஓ… கதை அப்படி போகுதா?.. சரிதான்…” என சிரிக்க,

“குட்டிச்சாத்தான்… சும்மாயிரு…” என அதட்டினான் அவன் மெல்ல…

“பாருடா… விட்டா ரேவதி மாதிரி காத்து தான் வருதுன்னு கூட சொல்லுவ போலயே… டேய் அண்ணா… என்னடா நினைச்சிட்டு இருக்குற?...”

“ஆ… உன் அண்ணி என் வருங்கால பொண்டாட்டியை தான் நினைச்சிட்டு இருக்குறேன்… போதுமா?...” என அவன் பட்டென சொல்லிமுடிக்க, தைஜூ முகத்தில் வெட்கம் பரவியது…

அதை ரசித்துக்கொண்டே அவனிருக்க, தைஜூ அவனைப் பார்க்காது வெட்கத்துடன் நின்றிருக்க,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

இஷான் போன் ஒலித்து அதை கெடுத்தது…

“சே… யாரு இந்த நேரத்துல…” என சலித்துக்கொண்டே போனை எடுத்தவனிடம், “ஹலோ… ஐ.பி.எஸ், ஆஃபீசர் நீங்க பொறுமையா லவ் பண்ணுங்க… நான் கிளம்புறேன்…” என சதி சொன்னதும்,

“ஏய்…. பிசாசு… அப்போ தைஜூவை யாரு டிராப் பண்ணுவா?..” என அவன் கேட்க அவனருகில் நின்றிருந்த தைஜூ முழித்தாள்..

“ஏன் அதான்… நீ இருக்குறல்ல… அப்புறம் என்ன?...”

“லூசு… நான் எப்படிடீ அவளை வீட்டுல விட முடியும்?... உங்கூட வந்தவ எங்கூட திரும்பி போனா என்ன நினைப்பாங்க அத்தையும் மாமாவும்?..”

“பாருடா உன் மூளைக்குள்ள கூட பல்ப் எரியுதே…” என சிரித்தவள்,

“டேய் அண்ணா… நீயே இவ்வளவு யோசிக்கும்போது நான் அதை யோசிச்சிருக்கமாட்டேனா என்ன?...” என கேட்க

“அப்போ அவளை கூட்டிட்டு போ பிசாசு…” என்றான் அவன்…

“ஒன்னும் பிரச்சினை இல்லை… நீங்க லவ் பண்ணிட்டு பொறுமையா வாங்க.. நான் நாலு தெரு பக்கத்துல இருக்குற பார்க்குக்கு போறேன்… அங்க வெயிட் பண்ணுறேன்… நீ அவளை அங்க கொண்டு விட்டுடு… நான் மிச்சத்த பார்த்துப்பேன்….”

“அப்போ டபுள் ஓகே… நான் கொஞ்ச நே…..ர……..ம் கழிச்சே அவளை கூட்டிட்டு வரேன் அங்க… தேங்க்ஸ் குட்டிசாத்தான்…” என அவன் சொல்லிமுடித்ததும்,

அவனிடமிருந்து போனை வாங்கிய தைஜூ, “ஹேய்… நில்லுடி.. நானும் வரேன்…” என கத்த,

“ஹேய் தைஜூ பேபி… அண்ணா கூட கொஞ்சம் பேசிட்டு வா… அவன் பாவம்…” என்றவள் ஸ்கூட்டியை உதக்கும் சத்தம் கேட்க,

தைஜூ வாசலுக்கு ஓட, தூரத்தில் புள்ளியாய் மறைந்து போய்க்கொண்டிருந்தாள் சதி…

தரையில் காலை உதைத்துக்கொண்டு சின்னபிள்ளை போல் சிணுங்கியவளை ஆசையோடு பார்த்தான் அவன்…

அவன் பார்வையில் சிவந்தவள், பின் கோபத்துடன், “எல்லாம் உங்களால தான்… பாருங்க… என்னை விட்டுட்டு போயிட்டா…” என்று வேகமாய் நடந்து அவளும் சதியும் எப்போதும் அமரும் இடத்திற்கு சென்று கன்னத்தில் கைவைத்து அவள் உட்கார்ந்து கொள்ளவும்,

அவன் சிரித்துக்கொண்டே அவளருகில் சென்று அமர்ந்தான்…

“ஹேய்… என்னாச்சு?... நான் கொண்டு விடுறேண்டா அவ வர சொன்ன இடத்துக்கு…”

“ஒன்னும் தேவை இல்லை….”

“ஹ்ம்ம்… மேடம் கோபமா இருக்குறீங்க போல…”

“ஆமா… முதலில் என்னை அங்க கொண்டு விடுங்க… நான் போகணும்….” என அவள் அடம்பிடிக்க,

சட்டென்று எழுந்து கொண்டவன், “சரி கிளம்பு… உன்னை கொண்டு விட்டுடுறேன்… உனக்குத்தான் எங்கூட இருக்க பிடிக்கலையே…. வா வா… போகலாம்…” என இரண்டடி அவன் வாசலை நோக்கி நடக்க,

“பிடிக்கலைன்னு நான் எப்போ சொன்னேன்… அவகூட வந்தவ உங்ககூட இப்படி பேசிட்டிருந்தா சதி என்ன நினைப்பா?... அவ பாவம் இல்லையா?... அதான் சொன்னேன்…” என அவள் மெல்ல சொல்ல,

“அட என் தைஜூ செல்லம்… இதுதான் உன் பிரச்சினையா?... சதி பத்தி உனக்கு தெரியாதா?.. அவ உன் சந்தோஷத்துக்காகத்தான் உன்னை விட்டுட்டு போயிருக்குறா… நீயும் நானும் கொஞ்ச நேரம் பேசிக்கணும்னு தான் அவ இப்படி பண்ணிருக்கா…” என அவன் புரிய வைக்க, அவளும் புரிந்து கொண்டது போல் அவனை பார்த்தாள்…

தைஜூவை அங்கே விட்டுவிட்டு வந்த சதி வாசலுக்கு வந்த போது, அங்கே தைஜூ சொல்லியது போல் ஜெய்யின் பைக் இல்லை… சென்றுவிட்டான் என்பதே வலிக்க, பின்னர் இஷானுடன் போனில் பேசிவிட்டு, மனம் போன போக்கில் வண்டியில் சென்று கொண்டிருந்தவள், இஷானிடம் சொன்னது போல் நாலு தெரு தள்ளி இருந்த அந்த பார்க்கிற்கு சென்றாள்…

எதையோ இன்று தொலைத்தது போல் அக்கம் பக்கம் பார்க்காமல், வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு நேரே உள்ளே நுழைந்தாள்…

கால் போன போக்கில் நடந்தவள், எப்போது அமர்ந்தாள் என்றே தெரியாது… அவனின் அருகாமையை அங்கேயும் உணர்ந்தவளுக்கு தலை வலித்தது… வேதனையுடன் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவள்,

“எங்க இருக்குறீங்க?....” என்ற கேள்வியோடு நிமிர்ந்த போது, அவளது கண்கள் ஆச்சரியத்தில் விரிந்து தான் போனது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.