“ ஐ லவ் யூ தர்ஷினி.. என்னால உன்னை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது”
“நீங்க… நீங்க சொல்றது நிஜமா கதிர் ?”
“நிரூபிக்கனுமா?”
“ம்ம்ம் ஆமா..உங்களை நம்ப மாட்டேன் போங்க.. என்னை விட்டுட்டு போறதே உங்களுக்கு வேலையாச்சே!”
“ ஹா ஹா.. அப்படியா..சரி இப்போவே நிரூபிக்கிறேன்” என்றவன் அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு வரவேற்பறைக்குசென்றான்..
“அப்பா, அம்மா,மாமா,அத்தை, முகில்,ஷக்தி, மித்ரா எல்லாரும் இங்க வாங்க” என்று அவன் கூக்குரலிடவும் ஏற்கனவே லக்ஷ்மியின் திட்டத்தை அறிந்திருந்தாலும், ஒன்றுமே தெரியாதது போல கேள்வியுடன் நின்றனர் அனைவரும்.
“ என்ன கதிர் என்னாச்சு ?”- ஷக்தி
“ சொல்லுடாஎன்ன ?”என்றார் லக்ஷ்மி..
“ அம்மா”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஆதித்யா சரணின் "சிவன்யா" - விறுவிறுப்பான திகில் தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
“என்னடா?”
“ ஒரு நாள் உன் மடியில நான் படுக்கும்போது நீ ஒரு விஷயம் சொன்னியே ஞாபகம் இருக்கா? கல்யாணத்துக்கு முன்னாடித்தான் டா இப்படி அம்மா செல்லமாய் இருப்ப நீ..கல்யாணத்துக்கு அப்பறம் என்ன பண்ணுவன்னு கேட்டியே”
“ம்ம்ம் ஆமா”
“அப்போநான் என்ன சொன்னேன்? அப்பவும் இதே மாதிரி உன் மடியில் ஒரு பக்கம் நானும் இன்னொரு பக்கம் உன் மருமகளும் படுத்துப்போம்னு சொன்னேன்ல?”
“ தெரியும்டாசொல்லு”
“ நானும் உன் மருமகளும் ரெடி..எப்போ உன் மடியில்தூங்கலாம்ன்னு சொல்லு” என்று சிரித்தான் கதிரேசன்.. ஷக்தி மித்ராவை சிரிப்புடன் பார்க்க
“உங்க தம்பி வித்தியாசமாய் அவருடைய காதலை சொல்றாராமாம்..”என்றாள் வம்பளக்கும் குரலில்.. அனைவருமேஅவள் சொன்ன விதத்தில் சிரித்திட கதிரின் அருகில் வந்த முகில்மதி அவன் தலையில் நங்கென கொட்டு வைத்தாள்.
“இது தான் உன் டக்கா கதிரண்ணா? உன் ஸ்பீடுக்கு உங்க ரெண்டு பேருக்கும் ஸ்ரேட்டாஅறுபதாம் கல்யாணம் தான் நடக்கும்ன்னு நினைச்சேன்”என்றாள் அவள்.
“ ஹேய் என்ன கொழுப்பா?”
“என் பொண்ணை ஏன் டா மிரட்டுற ?என் பையனா நீ ? நானெல்லாம் அந்த காலத்துல உங்கம்மாகிட்ட எப்படி ப்ரொபொஸ் பண்ணேன்னு கேட்டுத்தெரிஞ்சுக்க”
“அப்பா…” என்று கதிர் அடிக்குரலில் மன்றாட அங்கு ஒருவரை ஒருவர் வம்பளந்து கொண்டிருந்தனர்.. பேச்சின் ஊடே அடிக்கடி முகத்தை சுருக்கி கொண்டு ஷக்தியின் கரத்தை பலமாய் அழுத்தி பிடித்தாள் சங்கமித்ரா..
“மிது என்னடீ பண்ணுது?”
“ம்ம்ம்…ஒன்னுமில்ல”
அடிக்கடி இவன் அதேகேள்வியை கேட்க அவளும் அதே பதிலை சொல்லிகொண்டு இருந்தாள்..இப்படியே நேரம்கடந்திட அனைவரும் உறங்கச்சென்ற வேளையில் மீண்டும் ஷக்தியின் கரங்களை பிடித்துக் கொண்டாள் மித்ரா.
“மாமா”
“என்னடீ”
“என்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறியா?”
“பெயின் வர்ர மாதிரி இருக்கா”
“ம்ம்ம்” என்று முணகியவள் கண் கலங்கிட அவனைப் பார்த்தாள். ஒரு நொடி கூட விரயம் செய்யாமல் அவசரமாய் அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றான் ஷக்தி.. (ஓகே நம்ம குட்டி சார்ம்ஸ் அடுத்த எபிசோட்ல வருவாங்க..அப்போ அவங்களை பார்ப்போம்.. பை பை)
அடுத்த அத்தியாயத்தில் முற்றும்
{kunena_discuss:777}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.