(Reading time: 44 - 87 minutes)

39. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி

Ithanai naalai engirunthai

வார்த்தையால் விவரிக்க முடியாத அற்புதமான உணர்வு தாய்மை !

உறவுகளுக்காக எத்தனை வார்த்தைகளைக் கோர்த்து கவிதையும் கதைகளுமாய் சொல்லிகொண்டே போனாலும்,தாயுக்கும் சேயுக்குமான உறவை முற்றிலும் சொல்லி முடித்திட முடியாது !

தாய்மை என்பது உன்னதமான உணர்வு என்பதினால்தான், கடவுளை கூட “அம்மா, அன்னையே, தாயே” என்று அழைக்கிறோம். அதே போல இயற்கையையும் அன்னையாய் தான் பாவிக்கிறோம். அப்படிப்பட்ட தாய்மையை ஒரு பெண் முழுமையாய் உணரும் நொடி அத்தனை சுலபமானது அல்ல. அதற்காக அவள் எதிர்கொள்ளும் வலியும் வேதனையும் கற்பனை செய்தும் பார்க்க முடியாது. அறிவியலின் கூற்றுப்படி பிரசவ வலி என்பது, அசாதரணமான ஒன்று. மனித உடல் தாங்கக்கூடிய சராசரி வலியை மீறிய நிலை இது .. இருப்பினும் ஒவ்வொரு பெண்ணும் அவ்வலியை எதிர்கொண்டு தான் “தாய்” என்ற ஸ்தானத்தை அடைகிறாள்.

உலகில் எந்த ஒரு இலக்கை அடைவதற்கும் நமக்கு உதவி எவ்விதமாவது கிடைத்துவிடும். போர்க்களத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இன்னொரு தேசத்தின் அரியணையை பற்ற போரிடும் வீரன் தனித்து போரிடுவதில்லை..! தனக்கென்று ஒரு படை,அதற்கென ஒரு தளபதி, சேனைகள், யுக்திகள் இப்படி பலவற்றை துணையாய் கொண்டுதான் அரியணையை பற்றி அமர்கிறான். இது போலத்தான் ஒவ்வொரு இலக்கும்.

ஆனால் தாய்மை? உடன் இருக்கும் கணவனால் கூட மனைவியின் வலியை பகிர்ந்து கொள்ள முடியாது.

கணவனுக்கும் மனைவிக்குமான உறவு எவ்வளவு மகோன்னதமானது? உடலை பகிர்ந்து கொள்வது மட்டுமா கணவன் மனைவி வாழ்க்கை?

உனக்காக நான்

உன்னோடு நான்

உன்னிடம் நான்

உன்னில் நான்

நீயாய் நான்

நானாய் நீ

நமக்காக நாம்…!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்...

இப்படி ஒவ்வொரு நிலையையும் சந்தித்து இருவர் ஒருவராய் சங்கமிக்கும் உறவல்லவா அது? அப்படி இருந்தும் கூட கணவனால் மனைவியின் பிரசவ வலியை உணர்ந்திட முடியவில்லை என்பது இயற்கையின் அழகென்பதா ? துயரென்பதா? நிச்சயம் துயர் தான் ! ஆம், மனைவியின் வலியை பகிர்ந்து கொள்ள முடியாத ஒவ்வொரு கணவனின் மனதிலும் மனைவியின் பிரசவ வலியை விட இரட்டிப்பு மடங்கான வலி குடியேறிவிடுகிறது.. அந்த கணத்தில் அவன்  தன் குழந்தை மீது கொண்டுள்ள ஆசையை கூட துறந்து விடுகிறான். மனைவியின் இன்னுயிர் மீதுதான் அக்கறை காட்டுகிறான்.. இதுவரை அவளை நேசித்தது எல்லாமே குறைவுதான் என்பது போல அந்த ஒரு கணம்  அவளை கோடி மடங்கு அதிகமாகவே நேசிக்கின்றான்.

ஷக்தியும் அதே நிலையில் தான் இருந்தான். அவன் மணிகட்டு வலிக்கும் அளவிற்கு கையை இருக்கி பிடித்திருந்த சங்கமித்ராவின் முகம் வலியால் வாடி இருந்தது. உடனே தனது அம்மா, அப்பா அனைவரையும் எழுப்பிவிட ஷக்தி முற்பட அவனைத் தடுத்தாள் மித்ரா.

“ ஷக்தீ..ஈஈஈ….”

“ என்னடீ?”

“ யாரையும் எழுப்ப வேணாம்”

“லூசு.. ஏன்டீ”

“ சொன்னா கேளு மாமா..நீ மட்டும் எங்கூட இருந்தால் போதும்” என்றாள் மித்ரா வலியுடன். ஒரே ஒரு நொடி அவளை இமைக்காமல் பார்த்தான் ஷக்தி. இயல்பை மீறி அவள் முகத்தில் பரவி இருந்த வலி அவனின் வேகத்தை கூட்டியது.. “சரி வா” என்றபடி அவளை வாசலுக்கு அழைத்து சென்றவன் மீண்டும் அவளை விட்டு நகர, அவன் கையை இறுக்கமாய் பற்றிக் கொண்டாள் மித்ரா.

“ மிதூ, காரை எடுத்துட்டு வரேன்மா.. 2 மினிட்ஸ்” என்று கெஞ்சும் குரலில் அவன் அவசரமாய் சொல்ல அப்போதுதான் அவனை விடுவித்தாள் அவள்.  காரை கொண்டு வந்து அவளை தன் அருகில் அமர்த்திகொண்டு, காரை இயக்க தொடங்கிய  உடனே நிலாவை ஃபோனில் அழைத்து விவரத்தை சொன்னான் ஷக்தி.

அப்போதுதான்  மதியழகனோடு ஹாஸ்ப்பிட்டலில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள் நிலா.ஷக்தியின் ஃபோன் வந்ததுமே நிலாவின் பேச்சின் மூலம்,சூழ்நிலையை புரிந்து கொண்ட மதி காரை ஹாஸ்ப்பிட்டலை நோக்கி செலுத்தினான்.

“ சீக்கிரமாய் போ மது”

“ குட்டிமா..ரிலாக்ஸ் டா.. இதோ இப்போ சேர்ந்திடலாம்..நீ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு..”

“உஃப்ஃப்ஃப்.. என்னவோ மாதிரி இருக்கு மது”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.