(Reading time: 44 - 87 minutes)

வேலை வாங்குவது போல் அதட்டல் போடுவாய்!

உன் கண்களுக்குள் என்னை நிரப்பி வைக்கத்தான்

நீ ஹிட்லராய் மாறுகிறாய் என்ற உண்மையை

பிறரிடம் சொல்லாமல் சிரித்து கொள்கிறேன் நான்..!

இதயம் வென்றவனே,

உன்னுடன் கடந்து போகும் ஒவ்வொரு நாளும் போதவில்லை எனக்கு!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

சாகா வரம் கேட்டால் கிடைத்துவிடுமா புரியவில்லை எனக்கு!

போதுமா என்று இன்பமான தருணங்கள் கேள்வி கேட்டிட

போதாமல் உன்னை இறுக அணைத்துகொண்டு உன்னையே கேட்கிறேன்..

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்என்று !

-திருமதி சங்கமித்ரா ஷக்தி

-முற்றும்-

ஹாய் ப்ரண்ட்ஸ், “இத்தனை நாளாய் எங்கிருந்தாய்என்னால் எப்போதுமே மறக்க முடியாத இனிய பயணம். ஆணின் காதலை உயர்த்தி நிறுத்திடும்  பாடல்களும்,படங்களும்,கவிகளும்,கதைகளும் ஏராளம்! ஆனால் பெண்ணின் காதல் ? எத்தனை அழகாய் பெண்ணின் காதல் ஆரம்பித்தாலும் அது ஆணின் காதலில் கரைந்துவிடுகிறது.

 உண்மையில் பெண்ணுக்குள் துளிரும் காதல் மிகவும் சக்திவாய்ந்தது. அவளின் காதல் தன்னை பலகீனப்படுத்தி, தன்னவனை உயர்த்தி வைக்க வல்லது! காதல் வயப்படும் பெண் பூவாய் மென்மையாகவும் இருக்கிறாள்; வேராய் உறுதியாகவும் இருக்கிறாள்.

காதலில் தோற்றுப்போனாலும் கட்டாயத்தில் வேரு ஒருவனின் மனையாளாய் மாறும் பெண்கூட தன்னியல்பால் புகுந்த வீட்டில் இன்பத்தை சேர்க்கிறாள். அப்படிப்பட்ட பெண்மைக்கு ஆசைப்பட்ட அன்பு அமைந்தால் வரம்தானே?

அந்த வரத்தை நம் கதாபாத்திரங்களுக்கு அமைத்து கொடுத்ததில் பெரும் மகிழ்ச்சி. அதே போலஅன்பெழிலனின்கதாபாத்திரம் மூலம், என் நண்பர்களின் சாயலை காட்டி இருக்கிறேன். மாசுப்படியாத உள்ளம் கொண்டுள்ள ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பிறக்கும் நட்பு பரிசுத்தமானது. அதை வெளிப்படுத்த இக்கதை களம் நல்ல வாய்ப்பாய் அமைந்தது.

இக்கதைக்கு அசலும், நகலுமாய் எனக்கு கற்பனைதிறனை வாரி தந்த கதாப்பத்திரங்களுக்கு நன்றி.என் ஒவ்வொரு கதைக்கும் தூண்டுகோளாக இருக்கும் தோழன், தோழியருக்கு நன்றி சொல்லி தள்ளி வைப்பேனோ?

இத்தனை நாளை எங்கிருந்தாய்?” எனக்கு வாசகிகளை மட்டுமின்றி சில அன்பு சகோதரிகளையும் பெற்றுத் தந்தது. Mages sithirai, Alamelu (ammu), Sheela, Flower, Thuvaaraka, Divyaa என பல சகோதரிகள் எதிர்ப்பாரா நேரம் நெகிழ்ச்சியான கருத்துக்களை கூறி எனக்கு ஊக்கமளித்துள்ளனர்.

இக்கதையில் ஷக்தியை தொடங்கி, நம்ம ஜூனியர்ஸ் வரை அனைவருமே உங்கள் மனதில் இடம் பிடித்திருந்தால் நன்று என்ற பேராசையுடன் விடைப்பெருகிறேன்.. தவறாமல் ஊக்கமளித்து கொண்டே வரும் சில்சீக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?” என்றும் எனக்குள் கலந்திருக்கும்.. நன்றி பை பை

Episode # 38

{kunena_discuss:777}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.