(Reading time: 44 - 87 minutes)

யாருக்கும் கிடைக்காத வரம் இது..திருமண நாள் அன்றே தாயாகும் வரம் யாருக்கு கிட்டும்?  இருப்பினும் இதற்கு இருவரின் சம்மதம் மட்டும் போதுமா? இல்லை போதாது! அம்மா, அப்பா,அத்தை,மாமா இவர்களை விட முக்கியமாய் அம்மு பாட்டி சரி சொல்ல வேண்டுமே என்ற ஏக்கத்துடன் நிலா அவர்களை பார்க்க, பெரியவர்கள் அனைவரும் மனநிறைவோடு அவர்களை ஆசிர்வதித்தனர். ஒரு நிறைந்த புன்னகையோடு மதியழகனைப் பார்த்தாள் தேன்நிலா. அந்த நொடியே அவர்களின் பயணம் தொடங்கியது.

( ஷபா ஒருவழியாய் இவங்களை சேர்த்து வெச்சாச்சு!! நம்ம கதை கொஞ்சம் பட்ஜட் கதை என்பதால் மத்த மூன்று கல்யாணமும் சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் நடக்க வேண்டிய நேரத்துல கரெக்டா நடந்தது.. அப்போ சுபம் போட்டுறலாமா?நோ நோ இன்னும் ஒரு சீன் இருக்கே!)

15 வருடங்களுக்கு பிறகு..

ன்பு பவனம்..! மலர் இல்லம் இருந்த அதே இடத்தில் இன்னும் மூன்று வீடுகள்  இணைந்திருந்தன. நான்கு வீடுகளையும் இணைத்து கட்டி இருந்தான் மதியழகன். வெறும் மண்ணும் செங்கல்லும் வீட்டை எழுப்பிவிட முடியும், ஆனால், அன்பு நிறைந்த இடம் தானே இல்லமாகிடும்..அப்படி அனைவரின் அன்பினால் இணைத்து கட்டப்பட்டதுதான் அந்த அன்பு பவனம்.

“பவி…பவி…எங்க டீ இருக்க?” மகளை தேடிக்கொண்டே வீட்டை ரெண்டாக்கினாள் தேன்நிலா. அவள் போட்ட சத்ததில் முகில்மதி, காவியா புவனா மூவரும் அங்கு வந்திருந்தனர்..

“ என்னாச்சு நிலா?”- காவியா.

“ பவித்ராவை காணோம் ..எங்க போனா தெரியல…”

“ அவ எங்க போயிருப்பா? வெண்மதி கூடத்தான் இருப்பாள்” என்று திட்டவட்டமாய் கூறினாள் முகில்மதி..ஆம், அன்பெழிலன்- முகில்மதியின் ஒரேமகளான வெண்மதியும், பவித்ரநிலாவும் எப்போதும் ஒன்றாய்த்தான் இருப்பார்கள். அவளைப்பார்த்து விஷமமாய், சிரித்தாள் புவனா.

“ ஹா ஹா ..அப்படியா முகில் ? எங்கே உன் பொண்ணு? கூப்பிடு” என்றாள் புவனா. முகிலா அப்போதுதான் வீட்டில் தங்கள் பிள்ளைகள் யாருமே இல்லை என்பதை கவனித்தாள்.

“பசங்க யாருமேவீட்டில் இல்லை” என்று காவியா கூறவும், அப்போதுதான் நிலாவுக்கு என்ன நடந்திருக்கும் என்று புரிந்தது..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - புத்தம் புதிய தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“எல்லாம் இந்த மது பண்ணுற வேலை” என்றவள் தங்களது மியுசிக் சிஸ்ட்த்தில் “ஸ்பார்க் ஃப் எம்” என்று தேடி உயிர்ப்பித்தாள்.

“ வணக்கம் நேயர்களே , அசத்தல் காலை நிகழ்ச்சிகாக நம்ம அட்வைஸ் அழகனுடன் இதோ ஜூனியர் ஆர் ஜே எல்லாரும் வந்துவிட்டோம்” என்று அவர்கள் வீட்டு அறுந்தவாலுகள் பேசிக்கொண்டே ஒவ்வொருவரின் பெயராய் கூறி அறிமுகப்படுத்தி கொண்டனர்..

“ நான் ஆர் ஜே பவித்ரநிலா (நிலா-மதி)

நான் ஆர் ஜே வெண்மதி (எழில்- முகிலா)

நான் ஆர் ஜே கதிரோவியன் (கதிர்- காவியா)

நான் ஆர் ஜே சக்திவேல் (புவனா- ரஞ்சன்)

நான் ஆர் ஜே இஷான்” என்று ஒவ்வொருவராய் கூற “இன்னும் ஒரு ஆளை காணோமே”என்றாள் புவனா இங்கிருந்தபடி..

“ நான் இங்கத்தான் இருக்கேன் சித்தி” என்றபடி சமையல் அறையில் இருந்து வந்தாள் சம்யுக்தா..

“சம்யூ.. நீ ஏன் போகல அவங்க கூட?”

“ அம்மாவுக்கு இன்னைக்கு இம்போர்டண்ட் கேஸ்ன்னு அப்பா அவங்களை கோர்ட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாரு.. ரெண்டு பேரும் இன்னும் சாப்பிடலையே.. அம்மா கூட பரவாயில்ல..என் அப்பா சாப்பிடலன்னா எனக்கு மனசு தாங்குமா?” என்று அருவியாய் பொழிந்து பேசினாள் சம்யுக்தா.

“ ஹா ஹா நீ ஷக்தி பொண்ணாய் இருந்தாலுமே , மித்ராவோட பிரதிபிம்பம் நீ” என்றாள் காவியா. மற்றவரும் அதையே ஆமோதிக்க

“ஹா ஹா அது எனக்கும் தெரியுமே..ஆனா நான் அம்மாகிட்ட காட்டிக்க மாட்டேன்..நீங்களும் சொல்ல கூடாது” என்று  மிரட்டிவிட்டு ஓடியே விட்டாள் சம்யுக்தா.

தங்களது அடுத்த தலைமுறை பேசும் அழகை ரசித்து கொண்டிருந்தான் மதியழகன்.. அவனது ரசனையை கெடுப்பது போலவே அவனுக்கு ஃபோன் போட்டாள் நிலா.

“மது..”

“பேபி”

“எங்க போயிட்ட நீ?”

“ இதோ பசங்க கூட இருக்கேன் டா..”

“ காலையில நான் தேடும்போது பக்கத்துல இருக்க மாட்டியாடா நீ ? நீயும் இல்லை பவியும் இல்லை. நான் கொதிச்சு போயிட்டேன் தெரியுமாடா” . அவள் “டா” போட்டு பேசவும், அவளின் கோபத்தை உணர்ந்தவன் செய்கையினாலேயே அதை அனைவருக்கும் சொல்லிட மதுவின் ஃபோன் இஷானின் கைக்கு போனது. ஷக்தியை போலவே அளவாய் பேசும் இஷான், நிலாவின் செல்லமாவான்.

“ பெரியம்மா…”

“..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.