(Reading time: 44 - 87 minutes)

ன்னைக்கு ஹோலி இல்லைத்தான்.. இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ செல்லம்”என்றாள். “ பிசாசு.. குரங்கு..கழுதை..” என்று திட்ட வார்த்தைகளை தேடிக்கொண்டே புவனாவை துரத்தினாள் தேன்நிலா.. புவனாவை பிடிக்கிறேன் என்று வீட்டை சுற்றி ஓடியவள், அவளை துரத்தியபடி தோட்டத்திற்கு விரைய, அங்கு சங்கமித்ரா, காவியா, முகில்மதி, வைஷ்ணவி மட்டுமின்றி அவளின் தோழியர் மது, கீர்த்தனா, மலர், மீனா, ப்ரீயா, சுஜா அறுவரும் வந்திருந்தனர்.

“ ஹேய் எல்லாரும் எப்போ வந்திங்க ?” என்று கேட்டவளின் முகத்தில் சந்தோஷமும், ஆச்சர்யமும் கொப்பளித்தது. (அதாவது அவங்க ஆறு பேரும் ,மித்ராவுக்கு ப்ரண்ட்ஸ் தானே ? சங்குவுக்கு தோழிகள்ன்னா, தேனுவுக்கும் ப்ரண்ட்ஸ் இல்லையா? அந்த முறையில் தான் நிலாவுக்கு வண்ண பொடியில்  ஒப்பனை செய்துவிட வந்தனர்..ஹா ஹா). அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஆளுக்கொரு வண்ணப்பொடியை எடுத்து நிலா மீது பூசிட, அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காகவே ஒருவரை ஒருவரிடம் மாட்டிவிட்டு அங்கிருந்து ஓடினாள் .

புவனாவின் பக்கெட் அபிஷேகத்தில் எழுந்தவள், நிற்கவும் நேரமில்லாமல் தோழிகளிடம் தப்பித்து ஓடி இறுதியாய் தனது தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“ பாரு மனோ.. இந்த லூசுங்களை”

“ ஹேய், போய் குளிடீ.. உங்கப்பா சட்டையை எல்லாம் அழுக்கா ஆக்காதே” என்று பாக்கியம் குரல் கொடுக்க

“ என் அப்பா, நான் கொஞ்சுறேன்.. உனக்கென்னம்மா?” என்று கேட்டபடி சலுகையாய் தந்தை மீது சாய்ந்து கொண்டாள் நிலா.

“ ஹேய், என் மாமா கிட்ட உனக்கென்ன கொஞ்சல்? போ..போயி குளி” என்று நிலாவை தள்ளிவிட்டு மனோவின் தோளில் சாய்ந்து கொண்டாள் புவனா. ஏனோ அவளை விரட்ட மனமில்லாமல்,

“போடீ பிசாசு” என்று ஒழுங்கு காட்டிவிட்டு அங்கிருந்து ஓடினாள். அவள் குளித்து வருவதற்குள் மற்ற தோழிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து வீட்டை அலங்கறிக்க ஆரம்பித்தனர்.புவனா வழக்கம் போல கிடைத்த சாப்பாட்டை எல்லாம் ஒரு கை பார்த்துகொண்டே வம்பளந்து கொண்டிருந்தாள். நிலா வீட்டிற்கு தன்னை, மதி ஏன் அனுப்பி வைத்தான் ? என்ற சந்தேகத்துடன் அவள் வீட்டிற்கு வந்த தமிழ்ரஞ்சனுக்கு புவனாவை பார்த்ததுமே காரணம் விளங்கியது. இந்த மூன்று வருடத்தில் “நண்பர்கள்” (அஹெம் அஹெம்) என்று சொல்லும் அளவிற்கு இருவரின் உறவும் வளர்ந்து இருந்தது.

மித்ராவிற்கு குழந்தை பிறந்தப்போது அங்கு வந்த புவனாவை மூன்று வருடங்கள் கழித்து இன்றுதான் பார்க்கிறான் ரஞ்சன். இத்தனை நாள் அவள் விஷயத்தில் குழம்பி போயிருந்த மனது அவனைக் கண்டதுமே “போடா லூசு” என்று அவனைத் திட்டி விட்டு அவளிடம் தஞ்சம் அடைந்தது. அவனுக்கே அப்படி என்றால்,புவனாவின் நிலையை சொல்லவும் வேண்டுமா?

“ஹாய் புவன்” என்று அவன் உரிமையாய் கூப்பிட,வேண்டுமென்றே

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "கிருமி" - புத்தம் புதிய தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“ ஹாய் ப்ரண்ட்” என்று “ ப்ரண்ட” என்ற வார்த்தையில் அழுத்தம் கூட்டி கண்களால் சிரித்தாள் அவள்.

“ஹ்ம்ம்ம் மூனு வருஷத்துக்கு அப்பறம் இப்போத்தான் இங்க வரனும்னு தோன்றி இருக்கா? ஸ்பார்க் எஃப் எமோட சக்சஸ்காக வெச்ச விருந்துக்கு கூட மகாராணிக்கு இங்க வர மனசு வரலையே” என்று குறைப்பட்டுக்கொண்டான் அவன்.

“ சாரி ரஞ்சு.. அப்போ எல்லாம் நிஜமாகவே நான் பிசியா இருந்தேன்பா”என்றவள் அவனை “ரஞ்சு” என்று அழைத்தை எண்ணி நாக்கை கடித்து கொள்ள அவனோ அதை ரசித்து சிரித்தான். (அவர் மட்டும் புவனாவை புவன்னு கூப்பிடலாம்..நம்ம புவனா மட்டும் அவரை ரஞ்சுன்னு கூப்பிட கூடாதோ?)

“அதுவும் இல்லாமல் உரிமையா வான்னு யாரும் சொல்லி நான் வராமல் போகலையே” என்றாள் புவனா.. அவள் பதிலில் “ நீ என்னை அழைக்கவில்லை” என்ற குற்றச்சாட்டை அவன் உணர்ந்து கொண்டான். மிகவும் தாழ்ந்த குரலில் காதல் இழையோட

“ வான்னு சொன்னாத்தான் வருவியா புவன்?” என்றான் ரஞ்சன். விழியோடு விழி கலந்து அவன் கேட்ட விதத்தில் அவள் தட்டுத்தடுமாற,

“ஓஹோ அப்போ இந்த கல்யாண ஏற்பாடு எல்லாம் எனக்கும் மதுவுக்கும் இல்லையா குட்டிச்சாத்தான்”என்று கேட்டாள் தேன்நிலா.

“ அய்யோ போடி… நான் வெட்கப்பட்டு இப்போ எல்லாருக்கும் ஹார்ட் அட்டெக் வந்துட வேணாம்..சோ நான் எஸ்கேப்” என்றவள் ஓடியே விட்டாள்.

 தோழியர்களின் கவனிப்பில் கவலை அனைத்தையும் மறந்திருந்தாள் தேன்நிலா.. அவளை துளிகூட வருந்த விடக்கூடாது என்று நினைத்த சங்கமித்ரா இஷான், சம்யுக்தா இருவரையும் நிலாவின் பொறுப்பில் விட்டுவிட்டாள். பிள்ளைகளை அடிக்கடி பார்க்க சென்ற ஷக்தியும் நிலாவுக்கு நாசூக்காய் அறிவுரைகளை கூறி அவளுக்கு வேப்பிலை அடித்து வைத்திருந்தான்..

இவர்களின் மொத்த கவனிப்பிலும் அவள் மதியழகனின் அன்பினை மட்டும் தான் உணர்ந்தாள். தன்னை மாற்றத்தான் அவன் இதையெல்லாம் செய்கிறான் என்று உணர்ந்தவளுக்கு அவன் மீது இன்னும் காதல் பெருகியது. அடுத்து வந்த நாட்களில் எல்லாம்,கைப்பேசியில் பேசிப் பேசி காதலை வளர்த்து கொண்டிருந்தனர் இருவரும். அனைவருமே எதிர்ப்பார்த்த மணநாளும் அழகாய் விடிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.