(Reading time: 44 - 87 minutes)

மூன்று வருடங்களுக்குப் பிறகு..!

சமையல் அறையில் ஏதோ வேலையாய் இருந்தாள் சங்கமித்ரா. தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளின் சிரிப்பு சத்தம் சமையலறை வரை கேட்கவும் அவள் இதழ்களில் மென்னகை பூத்தது.

என்மேல் விழுந்த மழைத்துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய் வானொலியில் ஒலித்த பாடலை முணுமுணுத்துக் கொண்டே அவள் வேலையை தொடர, இரு வலிய கரங்கள் அவளது இடையை பின்னால் இருந்து அணைத்துக்கொள்ள, பிள்ளைகள் தோட்டத்தில் இருப்பதை உறுதிப் படுத்திக் கொண்டு,

“ டேய் ஷக்தி மாமா..”என்றபடி அவனோடு ஒன்றிகொண்டாள் மிது.

“ ம்ம்ம்” என்று அவள் கன்னத்தோடு கன்னம் இழைத்தவன்

“என்ன மிது கிச்சன்ல இருக்க? உனக்கு சமையல் தெரியுமா?”என்று கேட்டு அவளிடம் இருந்து அடி வாங்கி கொண்டான் ஷக்தி.

“ என்ன கொழுப்பா? ஏதோ நேற்று ஒரு நாள் எனக்கு காய்ச்சல்ன்னு நீயே சமைச்சுட்டா,எனக்கு சமையல் தெரியுமான்னு கலாய்ப்பியா?”

“அதேதான் நானும் கேட்குறேன்..நேத்து ஃபீவர்..இன்னைக்கு உனக்கு இங்க என்ன வேலை?”

“ ஷபா…ப்ராணநாதா தங்களது மாசில்லா அன்பில் நான் மயங்கி போகிறேன்” என்று கேலியாய் கூறினாள் மிது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??

படிக்க தவறாதீர்கள்...

“ஆஹான்”

“ஹான் ஜீ”

“ சரி பசங்க எங்க?”

“ அதானே பார்த்தேன்.. என்னடா இன்னும் சாருக்கு பிள்ளைங்க ஞாபகம் வரலையேன்னு பார்த்தேன்..”

“ஹும்கும் உனக்கு என்னடீ பொறாமை?”

“ ஆமையும் இல்ல முயலும் இல்லை..மதி அண்ணா வந்திருக்கார்.. ரெண்டு பேரும் அண்ணாவோடு சேர்ந்து லூட்டி அடிக்கிதுங்க..”

“அண்ணா வந்துருக்காருன்னு முன்னாடியே சொல்ல மாட்டியாடீ நீ ?” என்று கேட்டபடி அவன் உடனே விலக முயல, அவனின் இரு கரங்களையும் மீண்டும் தன்னோடு இறுக்கி கொண்டாள் மித்ரா.

“ பெரியப்பாவும் குட்டீஸும் விளையாட போறாங்க யாரும் டிஸ்டர்ப் பண்ணகூடாதுன்னு அண்ணா சொல்லிட்டுத்தான் போனாரு”

“ நான் ஏன் அவங்களை டிஸ்டர்ப் பண்ண போறேன்”

“அய்யே..உன்னை பார்த்ததுமே உன் பிள்ளைங்க அப்பா அப்பான்னு உன்னையே சுத்தி வருங்க..சரியான அப்பா செல்லம்..  அதுக்கு அப்பறம் நானும் அண்ணாவும் வேடிக்கைத்தான் பார்க்கனும்.. நீ அவங்களை கொஞ்ச, அவங்க உன்னை கொஞ்ச, என்னை யாருத்தான் கவனிக்கிறிங்க” என்று மித்ரா இழுக்க,

“ இப்போ நான் உன்னை கொஞ்சலன்னு தானே இவ்ளோ சீன் போடுற நீ?அப்படிதானே? பதில்சொல்லுடீ” என்றான் ஷக்தி. அவன் மோவாயில் லேசாய் இடித்து முறைத்தாள் மித்ரா.

“ ஏன், உனக்கு பதில் தெரியாதா?”

“தெரியாது சொல்லு”

“என்ன சொல்லட்டும்”

“ நான் உன்னை கொஞ்சுறதே இல்லையான்னு சொல்லு”

“ஷ்ஷ்ஷ் இதை எல்லாமா மாமா சொல்லுவாங்க?”

“ஆமா..சொல்லு டீ”

“ நான் சொல்லமாட்டேன்”

“ஓஹோ..அப்போ நீ சொல்லமாட்ட?” என்று கணவனும் மனைவியும்  வழக்கம்போல வழக்காட தொடங்கினர். இறுதியில் அவனே

“ இந்த ப்ரச்சனைக்கு நான் தீர்வு சொல்லவா மிது?” என்றான் குறும்புடன்.. இந்த மூன்று வருடத்தில் மூவாயிர தடவை அவன் சொல்லி இருந்தாலும் அது தெரியாதவள் போல சிரிப்பை அடக்கி கொண்டு,

“என்ன மாமா அது?” என்றாள் விஷமமான சிரிப்புடன்.. அவனும் அதே சிரிப்புடன்

“ நம்ம குட்டீஸ்க்கு ஒரு தங்கச்சிபாப்பாவோ இல்ல தம்பி பாப்பாவோ ரெடி பண்ணிடலாம்..அவங்க உன்னை கொஞ்சுவாங்க” என்று அவன் கூறிட பொங்கி வந்த சிரிப்புடன் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள் மித்ரா.

“ ஐ லவ் யூ ஷக்தீ” என்று அவள் கூற “ மீ டூ” என்றவனின் செவியில் பிள்ளைகள் சிரிக்கும் சத்தம் கேட்கவும் அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.. மித்ராவும் அவனின் பார்வையை புரிந்து முறைக்க,அவளை மதிக்காமல்

“சம்யுக்தா…இஷான்…” என்று குரல் கொடுத்தான் அவன். ஒரே ஒரு முறைதான் அழைத்தான் ஷக்தி.. மதியழகனின் தோளில் ஊஞ்சல் ஆடிய இருவருமே ஒரே நேரத்தில் “தொப்பென” குதித்து “அப்பா” என்றபடி ஓடி வந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.